திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 756 வாட்டியெனை (திருக்கூடலையாற்றூர்) Thiruppugazh 756 vAttiyenai (thirukkUdalaiyAtRUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான ......... பாடல் ......... வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல் மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள் நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல் கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ் நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... வாட்டி எனைச் சூழ்ந்த வினை ஆசைய மூ ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமோடு மாட்டி ... என்னை வருத்திச் சூழ்ந்துள்ள வினையும், மண், பெண், பொன் என்ற மூவாசைகளும், தீயை மூட்டி உலையில் காய்ந்த பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல விரிந்து வெளிப்பட்டு என்னை மாட்டி வைத்து, எனைப் பாய்ந்து கடவோடு அ(ட்)டமோடு ஆடிவிடு விஞ்சையாலே ... என்னைப் பாய்ந்து வாழ்க்கை வழியில் பிடிவாதமாய் ஆட்டி வைக்கும் மாய வித்தை காரணமாய், வாய்த்த மலர்ச் சாந்து புழுகான ப(ன்)னீர்களோடு காற்று வரத் தாங்குவன மார்பில் அணி ஆரமோடு வாய்க்கும் எனப் பூண்டு ... கிடைத்துள்ள மலர், சந்தனம், புனுகுச் சட்டம், பன்னீர் இவைகளுடன் நல்ல காற்று வர அனுபவித்து, தாங்குவனவாய் மார்பில் அணிந்துள்ள முத்து மாலைகள் நன்கு கிடைத்ததென அணிந்து, அழகு அதாக பவிசோடு மகிழ் அன்பு கூரத் தீட்டு விழிக் காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விடப் போந்து ... அழகு பெற சோபையுடன் மகிழ்ச்சியும் அன்பும் மிகப் பெருக, மை தீட்டிய கண்கள் ஒளி பொருந்திய விலைமாதர்களுடன் விளையாடி, அந்தக் காம வலையில் பூட்டப்பட்டு அகப்பட்டு, பிணியோடு வலிவாதம் என சேர்த்து விடப் பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் தேட்டம் உறத் தேர்ந்தும் அமிர்து ஆம் எனவே ஏகி ... நோய்களுடன் வலிகளும் வாத நோயும் எனப் பல வியாதிகள் ஒன்று சேர்ந்திட, நிலை மாறி வினைகள் கவ்விய அடியேனாகிய நானும் உனது அன்பு இல்லாமல், சேகரித்த பொருள் நிரம்ப இருப்பதால், ஒருவாறு மனம் தெளிவு பெற்று சாவு என்பதே இல்லை என்னும் எண்ணத்துடன் வாழ்நாளைச் செலுத்தி, நமன் ஓட்டி விடக் காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் சீட்டு வர க(கா)ண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் ... யமன் தன் தூதுவர்களை ஓட்டி அனுப்ப, மெலிந்து போய், எழுத்துள்ளதும் பிரமனுடைய அடையாளம் கொண்டதுமான ஓலைச் சீட்டு வர அதைப் பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடி உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக. வேட்டுவரைக் காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரைச் சேந்த கதிர் வேல் கொடு அமர் ஆடி ... வேடர்கள் மீது வெகுண்டு குறப் பெண் வள்ளியுடன் நட்பு கொண்டு, அஞ்ஞான நிலையரான அசுரர்களைச் சிவந்த ஓளி வீசும் வேலைச் செலுத்தி போர் செய்து, சிறை மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே ... தேவர்களைச் சிறையினின்றும் மீட்டு, தேவர்கள் தலைவனாகிய இந்திரனை வாழும்படி வைத்த கலைஞனே, வேற்று உருவில் போந்து மதுரா புரியில் ஆடி வைகை ஆற்றின் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் மேட்டை எரித்து ஆண்ட சிவ லோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி ... மாறுபட்ட உருவத்தோடு சென்று மதுரையில் பல திருவிளையாடல்களை விளையாடி, வைகை ஆற்றில் மண் சுமந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரி புரங்களின் மேன்மையை எரித்து ஆண்ட சிவ லோகனும், (நந்தி என்ற) ரிஷப வாகனத்தில் ஏறினவருமாகிய சிவபெருமானுடைய இடது பாகத்தைக் கொண்ட தாய், கோட்டு முலைத் தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் எனப் போந்த அழகான சிவகாமி விறல் கூற்றுவனைக் காய்ந்த அபிராமி மனது ஆர அருள் கந்த வேளே ... மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும் நூல் போன்ற இடையையும், கோடிச் சந்திரர்களுடைய வடிவையும் எடுத்து வந்தாற் போல் அழகிய சிவகாமி, வலிய யமனைக் கோபித்து அழித்த பேரழகியாகிய பார்வதி தேவி மனம் குளிர அருளிய கந்த வேளே, கூட்டு நதித் தேங்கிய வெ(ள்)ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறைச் சேந்த மயிலா ... வெள்ளாறும், மணிமுத்தா நதியும் ஒன்று கூடிய ஆறு நிறைந்து வரும் விளக்கம் கொண்ட இடத்தில் உள்ள கூடலையாற்றூரில்* வீற்றிருக்கும் சேந்தனே, மயில் வாகனனே, வ(ள்)ளி தெய்வானையொடெ கூற்று விழத் தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே. ... வள்ளி, தேவயானை ஆகிய இருவரோடு இணைந்து, யமன் (என்னை விட்டு) ஒதுங்கித் தாண்டி விழும்படி என்னுடைய உடலில் குடி கொண்டு வாழ்கின்ற குமரனே, தம்பிரானே. |
* விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.819 pg 2.820 pg 2.821 pg 2.822 pg 2.823 pg 2.824 WIKI_urai Song number: 760 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 756 - vAttiyenai (thirukkUdalaiyAtRUr) vAttiyenaic cUzhnthavinai yAsaiyamu vAsaiyanal mUttiyulaik kAynthamazhu vAmenavi kAsamodu mAttiyenaip pAynthukada vOdadamo dAdividu ...... vinjaiyAlE vAyththamalarc chAnthupuzhu kAnapani neerkaLodu kAtRuvarath thAnguvana mArpilaNi yAramodu vAykkumenap pUNdazhaka thAkapavi sOdumakizh ...... vanpukUrath theettuvizhik kAnthimada vArkaLuda nAdivalai pUttividap pOnthupiNi yOduvali vAthamena sErththuvidap pErnthuvinai mUdiyadi yEnumuna ...... thanpilAmal thEttamuRath thErnthumamir thAmenave yEkinama nOttividak kAynthuvari vEthanadai yALamaruL seettuvarak kANdunali kAlanaNu kAninaru ...... LanputhArAy vEttuvaraik kAynthukuRa mAthaiyuRa vAdiyiruL nAttavaraic chEnthakathir vElkodama rAdisiRai meettamarark kANdavanai vAzhkanilai yAkavaikum ...... vinjaiyOnE vEtRuruviR pOnthumathu rApuriyi lAdivaikai yAtRinmaNat RAngumazhu vALiyena thAthaipura mEttaiyerith thANdasiva lOkanvidai yERiyida ...... mungoLAyi kOttumulaith thAngumizhai yAnaidai kOdimathi thOtRamenap pOnthAzha kAnasiva kAmiviRal kUtRuvanaik kAynthApi rAmimana thArAruL ...... kanthavELE kUttunathith thEngiyave LARuthara LARuthikazh nAttiluRaic chEnthamayi lAvaLithey vAnaiyode kUtRuvizhath thANdiyena thAkamathil vAzhkumara ...... thambirAnE. ......... Meaning ......... vAtti enaic cUzhntha vinai Asaiya mU Asai anal mUtti ulai kAyntha mazhuvAm ena vikAsamOdu mAtti: My past deeds have surrounded and are persecuting me, and the three lusts, namely lust for earth, woman and gold, have emerged as the red-hot molten iron ingots that come out of the burning furnace are holding me under their grip; enaip pAynthu kadavOdu a(d)damOdu Adividu vinjaiyAlE: because of the magical spell of delusion that has attacked me and stubbornly subjected me to dance to its tune in the path of this life, vAyththa malarc chAnthu puzhukAna pa(n)neerkaLOdu kAtRu varath thAnguvana mArpil aNi AramOdu vAykkum enap pUNdu: I have been enjoying the luxury of flowers, sandalwood paste, civet and rose water under gentle breeze and wearing strings of pearls on my chest that is bearing them as though they are a godsend; azhaku athAka pavisOdu makizh anpu kUrath theettu vizhik kAnthi madavArkaLudan Adi valai pUtti vidap pOnthu: I have been engaged in flirting with whores who have bright and painted eyes displaying beauty, joy and love, and in that process, I am locked in their net of passion, totally ensnared; piNiyOdu valivAtham ena sErththu vidap pErnthu vinai mUdi adiyEnum unathu anpu ilAmal thEttam uRath thErnthum amirfthu Am enavE Eki: afflicted by many a disease and pain, including rheumatism, I have been gobbled up by my past deeds which have affected my fortunes; without any love for You, I was easy in mind thinking that I was immortal because of the huge material wealth that I have amassed; with that thought in my mind, I am spending my days of life naman Otti vidak kAynthu vari vEthan adaiyALam aruL seettu vara ka(a)Ndu nali kAlan aNukA nin aruL anpu thArAy: until the messengers of Yaman (God of Death) would be driven to me, debilitating me; they would bring with them the memorandum on palm leaf bearing the writing and seal of Lord BrahmA, and I would be persecuted by Yaman to peruse it; lest that Yaman confronts me, kindly grant me Your grace and love, Oh Lord! vEttuvaraik kAynthu kuRa mAthai uRavAdi iruL nAttavaraic chEntha kathir vEl kodu amar Adi: You were enraged with the hunters but were very friendly with VaLLi, the damsel of the hunters; You fought with the demons who were possessed by ignorance by wielding Your reddish and bright spear; siRai meettu amararkku ANdavanai vAzhka nilaiyAka vaikum vinjaiyOnE: You freed up the celestials from their prison and made their leader, Indra, settle prosperously, Oh Great Artist! vEtRu uruvil pOnthu mathurA puriyil Adi vaikai AtRin maNal thAngum mazhuvALi ena thAthai puram mEttai eriththu ANda siva lOkan vidai ERi idamum koL Ayi: He went to Madhurai in a disguise and performed several sportive miracles;on the banks of the river Vaigai, He carried loads of sand on His head; He holds the axe in His hand as a weapon; He is my Father; He burnt down the glory of Thiripuram; He reigns in the land of SivA and mounts the Bull Nandi as His vehicle; and She is the Mother who is concorporate on the left side of the body of that Lord SivA; kOttu mulaith thAngum izhaiyAna idai kOdi mathi thOtRam enap pOntha azhakAna sivakAmi viRal kUtRuvanaik kAyntha apirAmi manathu Ara aruL kantha vELE: Her slender thread-like waist bears the huge mountain-like bosom; Her figure is bright like millions of moons; She is the exquisitely beautiful Goddess, SivagAmi; She destroyed with rage the God of Death (Yaman); She is the stunning beauty, PArvathi DEvi; and You are the dear son heartily delivered by Her, Oh Lord KanthA! kUttu nathith thEngiya ve(L)LARu tharaLARu thikazh nAttil uRaic chEntha mayilA: The two rivers VeLLARu and MaNimuththARu merge in this place (KUdalaiyAtRUr*) and flow grandly as one river; and You are seated here, Oh ChEnthA (reddish Lord)! You mount the peacock as Your vehicle! va(L)Li theyvAnaiyode kUtRu vizhath thANdi enathu Akam athil vAzh kumara thambirAnE.: You make my body Your abode where You reside along with both Your spouses, VaLLi and DEvayAnai, so that Yaman leaves me alone and falls apart, Oh Great One! |
* This town is near Viruththacchalam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |