திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 757 வாருமிங்கே (கடம்பூர்) Thiruppugazh 757 vArumingkE (kadambUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானனம் தானான தானனம் தானான தானனம் தானான ...... தனதான ......... பாடல் ......... வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண மால்கடந் தேபோமெ ...... னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார வாசகம் போல்கூறி ...... யணைமீதே சேருமுன் காசாடை வாவியும் போதாமை தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் சேரிடம் போகாம லாசுவந் தேறாமல் சீதளம் பாதார ...... மருள்வாயே நாரணன் சீராம கேசவன் கூராழி நாயகன் பூவாயன் ...... மருகோனே நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட சூரியன் தேரோட ...... அயிலேவீ தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே ... இங்கே வாருங்கள், என் வீடு அருகில் தான் இருக்கின்றது, எனக்குப் பணம் விஷம் மாதிரி. உம்முடைய ஆசையை என்னுடைய அன்புடனே கலந்து தீர்த்துக் கொண்டே போங்கள். வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி ... பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள் என்று மரியாதைப் பேச்சுக்கள் போன்றவைகளைப் பேசி, அணை மீதே சேரும் முன் காசு ஆடை வ(வா)வ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அட(ம்) மாதர் ... படுக்கையில் சேர்வதற்கு முன்பாக பொருளையும், ஆடைகளையும் வேண்டிய அளவுக்குப் பறித்தும், அவை போதாது என்று குற்றம் கூறி ஓடிப் போம் என்று அடம் பிடிக்கும் விலைமாதர்கள் சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே ... உள்ள இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து என்னைச் சேர்ந்து பெருகாமலும், உனது குளிர்ந்த திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக. நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே ... நாராயணன், ஸ்ரீராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த தலைவன், பூலோகத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணபிரானின் மருகனே, நார (தர்) தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா ... நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ ... சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே, தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே. ... பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன் சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே. |
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.823 pg 2.824 pg 2.825 pg 2.826 WIKI_urai Song number: 761 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 757 - vArum ingkE (kadambUr) vArumin gEveedi thOpaNam pAshANa mAlkadan thEpOme ...... niyalUdE vAdipeN kALpAyai pOdumen RAsAra vAsakam pOlkURi ...... yaNaimeethE sErumun kAsAdai vAviyum pOthAmai theemaikoN dEpOme ...... nadamAthar sEridam pOkAma lAsuvan thERAmal seethaLam pAthAra ...... maruLvAyE nAraNan seerAma kEsavan kUrAzhi nAyakan pUvAyan ...... marukOnE nArathum pUrkeetha mOthanin REyAdu nAdakam sEythALa ...... raruLbAlA cUraNan gOdAzhi pOykidan thEvAda cUriyan thErOda ...... ayilEvee thUnaRum kAvEri sErumoN seeRARu cUzhkadam pUrthEvar ...... perumALE. ......... Meaning ......... vArum ingkE veedu ithO paNam pAshANam mAl kadanthE pOm en iyalUdE: "Come over here, my house is close by; I consider money as poison; please go home after fulfilling your desire by making love to me; vAdi peNkAL pAyai pOdum enRu AsAra vAsakam pOl kURi: oh girls, come on, spread the mat" - they speak such words of respect, and aNai meethE sErum mun kAsu Adai va(a)vviyum pOthAmai theemai koNdE pOm ena ada(m) mAthar: before leading their suitors to the bed, they grab money and clothes to their heart's content; even then these disgruntled whores complain that it is not enough and chase away their suitors; sEr idam pOkAmal Asu vanthu ERAmal seethaLam pAthAram aruLvAyE: please do not let me go to the places of such whores, and save me from the resultant blemishes that proliferate; for that, kindly bless me by granting Your cool and hallowed lotus feet! nAraNan see rAma kEsavan kUr Azhi nAyakan pU Ayan marukOnE: He is NArAyaNan, SreerAman, KEsavan, the bearer of the sharp disc as a weapon and Lord KrishNA who came to this world in the cowherd's lineage; and You are His nephew, Oh Lord! nAra(thar) thumpUr keetham Otha ninRE Adu nAdakam sEy thALar aruL pAlA: He danced the (Cosmic) Dance with His hallowed feet as Sages NArathar and Thumpuru provided the background music; and You are the child of that Lord SivA! cUrar aNangOdu Azhi pOy kidanthE vAda cUriyan thEr Oda ayil Evee: The demon SUran and all his torturous acts went inside the sea and hid (as a mango tree); destroying them and letting the Sun's chariot run its usual course, You wielded Your spear, Oh Lord! thU naRum kAvEri sErum oL seeRARu cUzh kadampUr thEvar perumALE.: The bright tributary, chitRARu, that merges with the pure and fragrant water of River KAvEri, runs around this place, KadambUr* which is Your abode; You are the Lord of the celestials, Oh Great One! |
* KadambUr is near the town of MannArkudi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |