திருப்புகழ் 758 கறுவி மைக்கணி  (திருவரத்துறை)
Thiruppugazh 758 kaRuvimaikkaNi  (thiruvaraththuRai)
Thiruppugazh - 758 kaRuvimaikkaNi - thiruvaraththuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
     கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
     கருதி வைத்தவைப் ...... பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
     தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
     தருணி கட்ககப் ...... படலாமோ

பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கறுவி மை க(ண்) இட்டு இனிது அழைத்து இயல் கவி
சொ(ல்)லிச் சிரித்து உறவாடி
... கோபம் காட்டி மையைக் கண்களில்
இட்டு, அன்புடனே அழைத்து, இயல் தமிழ்ப் பாக்களைச் சொல்லிச்
சிரித்து உறவு கூறி விளையாடி,

களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த
வைப்பு அவை சேர
... களவு வித்தைகளைக் கொண்டு மனதை உருகச்
செய்து, முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள்
எல்லாம் தம்மைச் சேரும்படி,

தறு க(ண்)ணில் பறித்து இரு கழுத்து உறத் தழுவி நெக்கு
நெக்கு உயிர் சோர
... கொடுமை காட்டி அபகரித்து, இருவர் கழுத்தும்
ஒன்றாகும்படி அணைத்து, நெகிழ்ந்து போய் உயிரும் சோரும்படி,

சயன மெத்தையில் செயல் இழக்கும் இத் தருணிகட்கு
அகப்படலாமோ
... படுக்கை மெத்தையில் செய்வது இன்னது என்று
தெரியாத வகையில் செயல் அழிக்கின்ற இந்த இளம் பெண்களிடையே
அகப் படலாமோ?

பிறவியை தணித்து அருளும் நிட்களப் பிரம சித் சுகக் கடல்
மூழ்கும்
... பிறவிப் பிணியைத் தொலைத்து அருளக் கூடிய
உருவமில்லாத, முழு முதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும்

பெரு முனித் திரள் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையில்
சதுர் வேதச் சிறுவ
... பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள்
போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, கொச்சையில்
(சீகாழியில்*) நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான
சம்பந்தச்) சிறுவனே,

நிற்கு அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து
அருள் ஈசன்
... உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப்
பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும்

செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத் துறைப்
பெருமாளே.
... பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்***
வாழும் பெருமாளே.


* 'கொச்சை' சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு
திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர்
ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.


*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.825  pg 2.827  pg 2.828  pg 2.829  pg 2.830 
 WIKI_urai Song number: 762 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 758 - kaRuvi maikkaNi (thiruvaraththuRai)

kaRuvi maikkaNit tinitha zhaiththiyaR
     kaviso licchirith ...... thuRavAdik

kaLavu viththaiyit tuLamu rukkimuR
     karuthi vaiththavaip ...... pavaisErath

thaRuka NiRpaRith thiruka zhuththuRath
     thazhuvi nekkunek ...... kuyirsOra

sayana meththaiyiR ceyala zhikkumith
     tharuNi katkakap ...... padalAmO

piRavi yaiththaNith tharuLu nitkaLap
     pirama siRchukak ...... kadalmUzhkum

perumu niththirat paravu seyppathip
     prapala kocchaiyiR ...... sathurvEthac

chiRuva niRkarut kavikai niththilac
     chivikai yaikkoduth ...... tharuLeesan

sekatha laththiniR pukazhpa daiththameyth
     thiruva raththuRaip ...... perumALE.

......... Meaning .........

kaRuvi mai ka(N) ittu inithu azhaiththu iyal kavi so(l)lic chiriththu uRavAdi: Feigning anger in their eyes coated with black pigment, they beckon (their suitors) lovingly and play with them reciting literary poems in Tamil and inventing several relationships;

kaLavu viththai ittu uLam urukki mun karuthi vaiththa vaippu avai sEra: resorting to many stealthy tricks, they melt their suitors' mind; after careful preplanning, they ensure that the entire wealth saved (by their suitors) is grabbed;

thaRu ka(N)Nil paRiththu iru kazhuththu uRath thazhuvi nekku nekku uyir sOra: after seizing their belongings in an evil manner, they hug so tightly that both their necks appear to become one; emotionally draining their life bit by bit,

sayana meththaiyil seyal izhakkum ith tharuNikatku akappadalAmO: they knock them down on the cushioned bed rendering them helpless and unable to know what to do; is it fair that I become a prey to such destructive young whores?

piRaviyai thaNiththu aruLum nitkaLap pirama sith sukak kadal mUzhkum peru munith thiraL paravu seyppathip prapala kocchaiyil sathur vEthac chiRuva: You are seated majestically in VayalUr where a multitude of great sages praise You; these sages have drowned themselves in a blissful, shapeless and primordial sea of Knowledge that could destroy the disease of birth; You are also seated in the famous town of Kochchai (SeekAzhi*) where You grew up as a young boy (ThirugnAna Sambandhar) well-versed in the four VEdAs, Oh Lord!

niRku aruL kavikai niththilac chivikaiyaik koduththu aruL eesan seka thalaththinil pukazh padaiththa meyth thiruvarath thuRaip perumALE.: Lord SivA who, with utmost compassion, presented You with a palanquin and an umbrella made of pearls** is seated in ThiruvaraththuRai***, the most famous place on the earth where truth reigns, which is also Your abode, Oh Great One!


* 'Kocchai' is one of the names of SeekAzhi.

The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


** In a place known as PeNNAdakam, the Saivite Saint ThirugnAna Sambandhar worshipped Lord SivA and then proceeded on foot to ThiruvaraththuRai. Seeing him exhausted during the journey, Lord SivA presented him with a palanquin and an umbrella made of pearls for his comfort.


*** ThiruvaraththuRai is located very near PeNNAdakam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 758 kaRuvi maikkaNi - thiruvaraththuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]