பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பூர்) திருப் புகழ் உரை 265 மலையன்ன கொங்கைகளைத் தாங்கும் நூல்போன்ற இடையையும், கோடி சந்திரர்களுடைய தோற்றங்கொண்டு வந்தது போன்ற அழகையும் கொண்ட சிவகாமி, வலிமை கொண்ட யமனை (உதைத்து) அழித்த (அபிராமி) அழகியாம் பார்வதிதேவி மனங்குளிரப் பெற்றுகந்த கந்தவேளே! (கூட்டுநதித் தேங்கிய வெளாறு தரளாறு) வெள்ளாறும் தரளாறு (மணிமுத்த் நதியும்) கூட்டுநதி தேங்கிய ஒன்றுகூடி நிறைந்துவரும், விளக்கங்கொண்ட (நாட்டில்) o o கூடன்ல்யாற்றுார் என்னுந்தலத்தில் வீற்றிருக்கின்ற் சேந்தனே! மயிலனே! வள்ளி தெய்வயானையுடன், (என்னிடம் வரமுடியாமல்) யமன் ஒதுங்கித் தாண்டி ஓடி விழும்படியாக, என்னுடைய உடலிட்த்தேயே குடிகொண்டு) வாழ்கின்ற குமரனே! தம்பிரானே! (காலன் அணுகா(த) நின் அருளன்பு தாராய்) கடம்பூர் 761. வாரும் இங்கே! என் வீடு இதோ இருக்கின்றது! பணம் எனக்கு ஷம் மாதிரி உம்முடைய ஆசையை தீர்த்துக் கொண்டே போங்கள் என்னுடைய - இயலுர்டே - அன்புடனே கலந்து; வாருங்களடி பெண்களே, பாயைப் போடுங்கள் என்று (ஆசாரவாசகம்) மரியாதைப் பேச்சுக்கள் போன்றவைகளைப் ப்ேசிப் படுக்கையில் சேர்வதற்கு முன்பாக அது அர் (பொருளையும்) ஆடைகளையும் *(வாவியும்) வேண்டிய அளவுக்கு வவ்வியும் (ப்ற்றிக்கொண்டும்), (போதாமை தீமை கொண்டே) அவை ப்ோதா என்று குற்றம் கூறிப் (போமென் அடம் மாதர்) ஒடிப்போம் என்கின்ற அடம் பிடிக்கும் (பிடிவாதம் பிடிக்கின்ற) அல்லது போம் என்று (நடம் + மாதர்) நடிக்கின்ற விலைமாதர்கள் - உள்ள இடத்தில் (நான்) போகாமலும், (ஆசுவந்தேறாமல்) குற்றங்கள் என்னைச் சேர்ந்து ப்ெருகாமலும், உனது குளிர்ந்த பாத தாமரைய்ைத் தந்தருள்வாயே!

  • வாவியும் - வவ்வியும், அல்லது அவாவியும் (ஆசைப்பட்டும்).