திருப்புகழ் 755 நாட்டம் தங்கி  (வேப்பஞ்சந்தி)
Thiruppugazh 755 nAttamthangki  (vEppanjandhi)
Thiruppugazh - 755 nAttamthangki - vEppanjandhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான

......... பாடல் .........

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே

நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்

வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே

மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்

கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே

கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா

வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே

வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் படியாதே ... விருப்பத்தை
(உன் மீது) தங்க வைத்து, பெண்களின் மார்புக்குவட்டில் கவனம்
படியாமல்,

நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய் ... தங்கள்
கருத்தை உன் திருவடியில் நாட்ட வல்ல தொண்டர்களுக்கு தாமரைத்
திருவடிகளைத் தந்து அருள் புரிவாய்.

வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் படை மீதே ...
சோர்வு காணும்படி விண்ணில் உள்ள தேவர்களின் சேனைகள் மீது

மாற்றம் தந்து பந்திச் சமருக்கு எதிரானோர் ... பகைமை
மொழிகளைக் கூறி கூட்டமாக போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின்

கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே ... கூட்டமெல்லாம்
கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி சண்டை செய்பவனே,

கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா ...
யமனுடைய ஒழுங்கான (நீதி வழுவாத) மனத்தின் பண்பை நிகர்த்து ஒளி
வீசும் வேலை உடையவனே,

வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே ...
அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை
உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே,

வேப்பம் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே. ... வேப்பஞ்சந்தி*
என்னும் ஊரில் உறையும் கந்தனே, குமரப் பெருமாளே.


* இக்கோயில் இருக்குமிடம் - விருதாச்சலத்திலிருந்து 22 கிமீ மேற்கில்,
உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கிமீ தெற்கில், தொளுதூரிலிருந்து 19 கிமீ
வடக்கில். (இணைய பார்வையாளர் திரு. ஷண்முகம் நாகராஜன் அவர்களின் குறிப்பு).

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.819  pg 2.820 
 WIKI_urai Song number: 759 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 755 - nAttam thangi (vEppanchanthi)

nAttan thangik kongaik kuvadiR ...... padiyAthE

nAttun thoNdark kaNdak kamalap ...... pathameevAy

vAttang kaNdut RaNdath thamarap ...... padaimeethE

mAtRan thanthup panthic camaruk ...... kethirAnOr

kUttang kanthic cinthic cithaRap ...... poruvOnE

kUtRan panthic cinthaik kuNamoth ...... thoLirvElA

vEttan thonthith thanthip paranuk ...... kiLaiyOnE

vEppanj canthik kanthak kumarap ...... perumALE.

......... Meaning .........

nAttan thangik kongaik kuvadiR padiyAthE: Concentrating on You alone, and diverting their attention away from the voluptuous bosom of women,

nAttun thoNdark kaNdak kamalap pathameevAy: those devotees of Yours are capable of meditating on Your hallowed feet, and they alone receive the blessings of Your lotus feet.

vAttang kaNdut RaNdath thamarap padaimeethE mAtRan thanthup panthic camaruk kethirAnOr: Inflicting harsh words upon the armies of the celestials and debilitating them, the hostile demons invaded aggressively;

kUttang kanthic cinthic cithaRap poruvOnE: but the multitude of the enemy was demoralised and scattered when You fought with them.

kUtRan panthic cinthaik kuNamoth thoLirvElA: Your spear sparkles like the impartial quality of the mind of Yaman, the God of Death, Oh Lord!

vEttan thonthith thanthip paranuk kiLaiyOnE: You are the younger brother of the elephant-faced Lord Ganapathi, who fulfils the desires of His devotees and who is endowed with the pot-belly!

vEppanj canthik kanthak kumarap perumALE.: You have Your abode in VEppanchanthi*, Oh Kantha and Lord Kumara! You are the Great One!


* Located at 22km West side from Virudachalam. 24 km south from Ulundoorpettai. 19km North from Tholudhoor. (info from visitor to website - Thiru Shanmugam Nagarajan).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 755 nAttam thangki - vEppanjandhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]