திருப்புகழ் 419 கோடு செறி  (திருவருணை)
Thiruppugazh 419 kOduseRi  (thiruvaruNai)
Thiruppugazh - 419 kOduseRi - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
     தானதன தத்த தத்த ...... தனதான

......... பாடல் .........

கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
     கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார்

கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
     கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா

நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
     நீறெழமி தித்த நித்த ...... மனதாலே

நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்

ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே

ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
     ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா

தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
     சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே

தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
     தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோடு செறி மத்தகத்தை வீசு ப(ல்)லை தத்த ஒத்தி
கூறு செய்து அழித்து உரித்து
... தந்தங்கள் பொருந்திய யானையின்
மத்தகத்தில் வெளித் தோன்றும் பற்களை வெளியில் விழும்படித் தாக்கிக்
கிழித்துக் கூறு படுத்தி அழித்து (அதன் தோலை) உரித்தவரும்,

நடை மாணார் கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி
கொளுத்தி விட்ட
... நன்னெறியைப் போற்றாது விட்ட (திரிபுரத்து)
அசுரர்களுடைய மேக மண்டலத்தின் மீது பறந்து செல்லும் முப்புரங்களை
ஒளி வீசும் நெருப்பால் எரித்து விட்டவரும்,

கோப நுதல் அத் தரத்தர் குரு நாதா ... கோபம் கொண்ட நெற்றிக்
கண்ணினர் என்ற அந்த மேன்மையைக் கொண்டவருமான
சிவபெருமானுடைய குரு நாதனே,

நீடு கனகத் தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த
நித்த
... பெரிய கனக கிரெளஞ்ச மலையைத் துளைத்து, பின்னும் உள்ள
(ஏழு) மலைகளைத் தூளாகுமாறு மிதித்து விளையாடிய நித்தனே,

மனதாலே நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்த ... கடப்ப
மலரைச் சூடிய உனது புய வரிசையின் சிறப்பை மனதார நிரம்ப ஓதுகின்ற
அடியார்களின் சித்தத்தில் உறைபவனே,

மெத்த நீல மயில் தத்த விட்டு வர வேணும் ... நீல மயிலை
வேகமாகத் தாவி வரச் செலுத்தி வந்தருள வேண்டுகிறேன்.

ஆடல் அணி பொன் சிலைக் கை வேடுவர் புனக் குறத்தி ...
போரை மேற் கொள்ளும் அழகிய வில்லை ஏந்திய கைகளை உடைய
வேடர்களின் தினைப் புனத்தில் இருந்த குறத்தியாகிய வள்ளியின்

ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே ஆதரவு பற்றி ... முத்து
மாலை நிரம்பிய அழகிய மார்பின் மேல் விருப்பம் வைத்து,

மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திருப் புயத்தில்
அணை வீரா
... மிகவும் சிறந்த மணிகள் நிறைந்துள்ளதும், வெற்றி
பெற்றனவுமாகிய பன்னிரண்டு திருப்புயங்களிலும் அவளை
அணைந்த வீரனே,

தேடி இமையொர் புத்தி மெத்தி நீடு உற நினைத்த பத்தி
சீர் உற உளத்(து) தெரித்த சிவ வேளே
... தேடி வந்த தேவர்கள்
அறிவு நிரம்பி நீண்ட காலம் வாழ வேண்டுமென்றும் அவர்களது பக்தி
சிறக்கவேண்டுமென்றும் மனதில் நினைத்த சிவ குமாரனே,

தேறருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த
தேவர் சிறை வெட்டி விட்ட பெருமாளே.
... செழிப்புள்ள
திருவண்ணாமலையில் உள்ள மலையின் உச்சியிடத்தில் அடைந்து
கூடிய தேவர்களின் சிறையை வெட்டி விட்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.283  pg 2.284  pg 2.285  pg 2.286 
 WIKI_urai Song number: 561 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 419 - kOdu seRi (thiruvaNNAmalai)

kOduseRi maththa kaththai veesupalai thaththa voththi
     kURuseytha zhiththu riththu ...... nadaimANAr

kOLulavu muppu raththai vALeriko Luththi vitta
     kOpanutha laththa raththar ...... gurunAthA

needukana kaththa laththai yUduruvi matRa veRpu
     neeRezhami thiththa niththa ...... manathAlE

neepamalar paththi meththa vOthumavar siththa meththa
     neelamayil thaththa vittu ...... varavENum

AdalaNi poRsi laikkai vEduvarpu nakku Raththi
     Aramathu meththu sithra ...... mulaimeethE

Atharavu patRi meththa mAmaNini Raiththa vetRi
     ARiruthi ruppu yaththil ...... aNaiveerA

thEdimaiyor puththi meththi needuRani naiththa paththi
     seeruRavu Laththe riththa ...... sivavELE

thERaruNai yitRa riththa sENmukadi daththa darththa
     thEvarsiRai vetti vitta ...... perumALE.

......... Meaning .........

kOdu seRi maththakaththai veesu pa(l)lai thaththa oththi kURu seythu azhiththu uriththu: He knocked down the teeth that protruded from the jaws of the elephant with tusks, tearing the elephant itself into pieces, and peeled off its hide;

nadai mANAr kOL ulavum muppuraththai vAL eri koLuththi vitta: He burnt down with fiery flames the three kingdoms (Thiripuram) that flew over the clouds and belonged to the demons who gave up the righteous path;

kOpa nuthal ath tharaththar kuru nAthA: He is renowned for an angry and fiery eye on the forehead; You are the Master of that Lord SivA!

needu kanakath thalaththai Uduruvi matRa veRpu neeRu ezha mithiththa niththa: You pierced the huge golden Mount Krouncha and trampled on the other (seven) mountains reducing them into powder like a child's play, Oh Immortal One!

manathAlE neepa malar paththi meththa Othum avar siththa: You reside in the hearts of Your devotees who, at all times, fervently praise the row of Your hallowed shoulders wearing the kadappa flowers!

meththa neela mayil thaththa vittu vara vENum: Kindly mount the dark blue peacock and drive it fast to come to me!

Adal aNi pon silaik kai vEduvar punak kuRaththi: She is VaLLi, the damsel of the KuRavAs, living in the millet-field belonging to the hunters who hold elegant and combative bows;

Aram athu meththu sithra mulai meethE Atharavu patRi: You fell for her beautiful and bejewelled bosom

meththa mA maNi niRaiththa vetRi ARiru thirup puyaththil aNai veerA: and embraced her with Your twelve victorious and hallowed shoulders wearing many precious gems, Oh valorous One!

thEdi imaiyor puththi meththi needu uRa ninaiththa paththi seer uRa uLath(thu) theriththa siva vELE: Oh Son of Lord SivA, You thought from the bottom of Your heart about long and enlightened life for the celestials who sought after You and wished for the flourishing of their devotion!

thERaruNaiyil thariththa sEN mukadu idaththu adarththa thEvar siRai vetti vitta perumALE.: Seated on top of the mountain in the prosperous town of ThiruvaNNAmalai, You unshackled the celestials from their prison, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 419 kOdu seRi - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]