பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 561. தானதன தத்த தத்த தானதன தத்த தத்த தானதன தத்த தத்த தனதான கோடுசெறி மத்த கத்தை வீசுயலை தத்த வொத்தி கூறுசெய்த ழித்து ரித்து நடைமானார். கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட *கோபநுத லத்த ரத்தர் குருநாதா: t நீடுகனு கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு நீறெழமி தித்த நித்த மனதாலே. #நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த நீர்மயில் தத்த விட்டு வரவேணும்: ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி ஆரமது மெத்து சித்ர முலைமீதே. ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி ஆறிருதி ருப்பு யத்தில் அனைவீரா,

  • கோப நுதல் - கோபங் குறித்த துதல் (ஆகுபெயராய்) நெற்றிக்கண். நுதலத்தர் - துதலினர் - நெற்றிக்கண்ணினர் எனலுமாம்.

"எண்டிசை புரந்த தேவர் இருந்த தொல் பதங்க ளெல்லாம் பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்கும்" "விரிகடல் உலகின் வானின் மேவுதொன் னிலைமை யாவும் திரிபுற எவரோ செய்தார் தெரிந்திலம் அவரை" - கந்த புராணம் - திருவிளை 2737.

  1. நீப மலர் பத்தி - நீப மலர் சூடிய புய பந்திகளின் சிறப்பை