திருப்புகழ் 420 சிலைநுதல் வைத்து  (திருவருணை)
Thiruppugazh 420 silainudhalvaiththu  (thiruvaruNai)
Thiruppugazh - 420 silainudhalvaiththu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
     தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
          திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச்

செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
     தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
          செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப்

புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
     பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
          புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம்

புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
     லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
          புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
     மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
          கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங்

கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
     முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
          கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா

அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
     யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
          அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே

அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
     தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
          அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிலை நுதல் வைத்துச் சிறந்த குங்கும திலதமும் இட்டுக்
குளிர்ந்த பங்கய திருமுக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்
தனில் ஏறி செழு மணி ரத்நத்து இலங்கு
... வில்லைப் போன்று
வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த
தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப்
போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க,

பைங்குழை தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சு அணி
செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக விழி சீறி
... அழகிய
குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன்
செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால்
சீறிக் கோபித்து,

புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள்
பணிந்து அணிந்த அணி புரி வளை கைக்குள் கலின் கல்
என்றிட
... ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத
மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும்
வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க,

அநுராகம் புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து கொங்கையில்
உருகி அணைத்துப் பெரும் ப்ரியம் கொ(ண்)டு புணரினும்
நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே
... காமப் பற்றான
புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில்
உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய
திருவடியை மனதில் மறக்க மாட்டேன்.

கலை மதி வைத்துப் புனைந்து செம் சடை மலை மகள்
பக்கத்து அமர்ந்து இருந்திட
... கலை கொண்ட பிறையை வைத்து
அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது)
பாகத்தில் அமர்ந்து விளங்க,

கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும்
கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு முருக
... கணகண கட்கட்
கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான்,
(சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன்
பெற்ற முருகனே,

புனத்தில் திரிந்த மென் கொடி கன தன வெற்பில் கலந்து
அணைந்து அருள் புய வீரா
... தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய
கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து
அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே,

அலை கடல் புக்குப் பொரும் பெரும் படை அவுணரை
வெட்டிக் களைந்து வென்று உயர் அமரர் தொழப் பொன்
சதங்கை கொஞ்சிட வருவோனே
... அலை கொண்ட கடலில்
புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை
வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி
அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே,

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர் தனை ஒழிவித்துப்
ப்ரியங்கள் தந்திடும் அருண கிரிக்குள் சிறந்து அமர்ந்து
அருள் பெருமாளே.
... அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும்
வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக
வீற்றிருந்து அருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.285  pg 2.286  pg 2.287  pg 2.288 
 WIKI_urai Song number: 562 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 420 - silainudhal vaiththu (thiruvaNNAmalai)

chilainuthal vaiththuc chiRantha kunguma
     thalathamu mittuk kuLirntha pangaya
          thirumuka vattath thamarntha menkumizh ...... thanilERi

sezhumaNi rathnath thilangu painguzhai
     thanaimuni vutRuc chivanthu nanjaNi
          seyalinai yoththuth thayangu vanjaka ...... vizhiseeRip

pulavimi kuththit tiruntha vanjiyar
     pathamala rukkut paNintha NinthaNi
          purivaLai kaikkut kalinka lenRida ...... anurAkam

pukazhnala meththap purinthu kongaiyi
     lurukiya Naiththup perumpri yangodu
          puNarinum niRpoR pathangaL nenjinuL ...... maRavEnE

kalaimathi vaiththup punainthu senjadai
     malaimakaL pakkath thamarnthi runthida
          kaNakaNa katkat kaNinka NenRida ...... nadamAdum

karuNaiya nutRath thriyampa kantharu
     murukapu naththit Ririntha menkodi
          kanathana veRpiR kalantha NaintharuL ...... puyaveerA

alaikadal pukkup porumpe rumpadai
     yavuNarai vettik kaLainthu venRuyar
          amarartho zhappoR chathangai konjida ...... varuvOnE

adiyava racchath thazhungi dunthuyar
     thanaiyozhi viththup priyangaL thanthidum
          aruNaki rikkut siRantha marntharuL ...... perumALE.

......... Meaning .........

chilai nuthal vaiththuc chiRantha kunguma thilathamum ittuk kuLirntha pangaya thirumuka vattaththu amarntha men kumizh thanil ERi sezhu maNi rathnaththu ilangu: Placing a beautiful decorative mark of vermillion on the bow-like curvy forehead, wearing an elegant gem of rich ruby on the nose that looks like a soft flower on a pretty face resembling the cool lotus,

painguzhai thanai munivutRuc chivanthu nanju aNi seyalinai oththuth thayangu vanjaka vizhi seeRi: and gazing fiercely with their reddish eyes, acting treacherously appropriate to the poison that fills them, and seethingly attacking the ears that wear the hanging ear-studs,

pulavi mikuththittu iruntha vanjiyar patha malarukkuL paNinthu aNintha aNi puri vaLai kaikkuL kalin kal enRida: these whores are behaving in an excessively hostile manner with feigned resentment; falling at their flower-like feet against the background sound of the jingling bangles worn in their hands ornamentally,

anurAkam pukazh nala(m) meththap purinthu kongaiyil uruki aNaiththup perum priyam ko(N)du puNarinum nin pon pathangaL nenjinuL maRavEnE: I have been indulging in many a famous act of sensual romance, embracing their bosom with fusing intensity and making love to them fiercely; even then, I shall never forget Your hallowed feet, Oh Lord!

kalai mathi vaiththup punainthu sem chadai malai makaL pakkaththu amarnthu irunthida: He has reddish and matted hair adorned by the crescent moon; PArvathi, the daughter of HimavAn, is concorporate on His left side;

kaNakaNa katkat kaNinkaN enRida nadam Adum karuNaiyan utRath thriyampakan tharu muruka: He is the compassionate Lord who dances to the tune of "kaNa kaNa kat kat kaNin kaN"; He has three fitting eyes (the Sun, the Moon and Fire, Agni); and He is Lord SivA, and You are His Son, Oh MurugA!

punaththil thirintha men kodi kana thana veRpil kalanthu aNainthu aruL puya veerA: She roamed about in the fields of millet; She is the soft creeper-like damsel, VaLLi; and You hugged her huge mountain-like bosom with Your shoulders, Oh Valorous One!

alai kadal pukkup porum perum padai avuNarai vettik kaLainthu venRu uyar amarar thozhap pon sathangai konjida varuvOnE: When the vast armies of the demons entered the wavy sea and fought a fierce battle, You strewed about their severed bodies and emerged triumphant, making jingling sound with Your anklets while the great celestials worshipped You, Oh Lord!

adiyavar acchaththu azhungidum thuyar thanai ozhiviththup priyangaL thanthidum aruNa kirikkuL siRanthu amarnthu aruL perumALE.: Removing the fearful grief of Your devotees, You bestow upon them Divine Grace, seated in this lovable place, ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 420 silainudhal vaiththu - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]