பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 279 561. தந்தங்கள் பொருந்திய (யானையின்) மத்தகத்தில் வெளித்தோன்றும் (பல்லை) பற்களை வெளியில் விழும்படித் தாக்கிக் கிழித்துக் கூறிட்டு அழித்துத் தோலை) உரித்தும் (கஜசம்ஹார மூர்த்தியாய் விளங்கியும்), நன்னெறியைப் போற்றாதுவிட்ட (திரிபுரத்து) அசுரர்களுடைய). (கோள்) மேகமண்டலத்தின் மீது பறந்து செல்லும் (அல்லது) தீமை நிறைந்த முப்புரங்களை ஒளிவீசும் நெருப்பாற் கொளுத்திவிட்ட கோபங் குறித்த (கோபத்தைக் காட்டின). (அத் தரத்தர்)அந்த மேன்மையை (வலிமையைக்) கொண்டிருந்த சிவபிரானுக்கு (அல்லது, கோபங்கொண்ட நெற்றிக் கண்ணினர், அத்தர் - ஆகிய சிவபிரானுக்குக்) குருநாதனே! பெரிய (கனகத் தலத்தை) பொன்னுலகை - வானை உட்புறங்களை அலைத்துப் பின்னும் மலைகளைத் துரளாமாறு மிதித்து விளையாடின நித்தனே! மனதோடு கடப்பமலரைச் சூடிய உனது புயவரிசையின் சிறப்பை நிரம்ப ஒதுகின்ற அடியார்களின் சித்தத்தில் உறைபவனே! நிரம்பவும் நீலமயிலைத் தாவிவரச் செலுத்தி வந்தருள வேண்டுகின்றேன்; ஆடல் (போரை). அணி மேற்கொள்ளும் அழகிய வில்லை ஏந்தின கையினராம் வேடர்களின் திணைப்புனத்தில் இருந்த குறத்தியின் முத்துமாலை நிரம்பிய அழகிய கொங்கைமேல் - விருப்பம் வைத்து நிரம்ப சிறந்த மணிகள் நிறைந்துள்ளனவும், வெற்றி பெற்றனவுமான பன்னிரு திருப்புயங்களிலும் (அக் குறத்தியை) அணைந்த வீரனே!