திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 412 காராடக் குழல் (திருவருணை) Thiruppugazh 412 kArAdakkuzhal (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... காரா டக்குழ லாலா லக்கணை கண்கள்சு ழன்றிட வேமு கங்களி னாலா பச்சிலை யாலே மெற்புசி மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள காதா டக்கலன் மேலா டக்குடி யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் காசா சைச்செய லாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் போலே நற்றெரு வூடா டித்துயல் தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட கால்தா விச்சதி யோடே சித்திர மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை வந்துக லந்துயி ரோட வங்கமொ டூடா டிப்பல நோயோ டுத்தடி கொண்டுகு ரங்கென வேந டந்துசொல் சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் சேரா மற்பொறி கேளா மற்செவி துன்பமொ டின்பமு மேம றந்துபின் ஊரார் சுற்றமு மாதோர் மக்களு மண்டியு மண்டையு டேகு விந்திது சீசீ சிச்சிசி போகா நற்சனி யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ மாரோன் முப்புர நீறா யுற்றிட அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை கங்கையி ளம்பிறை யார ணிந்தவர் மாடே றிக்கட லாலா லத்தையு முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி யம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா மக்கலை ரூபாள் முக்கணி ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள் மாஞா னக்கும ராதோ கைப்பரி யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் சூரார் மக்கிட மாமே ருக்கிட அங்கட லெண்கிரி யோடி பங்கொடு தீபே ழற்றிட பாதா ளத்துறை நஞ்சர வின்பண மாயி ரங்கெட சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா சோர்வே தத்தலை மேலா டிச்சுக பங்கய செங்கர மோட கம்பெற வாகா னக்குற மாதோ டற்புத மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல் தூணோ டிச்சுட ராகா சத்தைய ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... கார் ஆடு அக் குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில் நாலா பச்சிலையாலே மெல் பூசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள(ம்) காது ஆடக் கலன் மேல் ஆடக் குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கைமாதர் ... கருமேகம் போல விளங்கும் அந்தக் கூந்தல். பெரு விஷம் தோய்ந்த அம்பு போன்ற கண்கள் சுழல, முகங்களில் நாலாவிதமான பச்சிலைகளை மேலே பூசி மஞ்சளையும் கலந்து அணிந்துள்ளவர்கள். காதணியானது கூந்தலுக்கு அருகில் காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, இன்ப ரசம் குடி கொண்டிருக்கின்ற குடங்கள் போன்று, பளிங்கின் ஒளியைக் கொண்ட மார்பகங்களை உடைய விலைமாதர்கள். காசு ஆசைச் செயலாலே சொக்கிடு(ம்) விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் போலே நல் தெரு ஊடாடித் துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட கால் தாவிச் சதியோடே சித்திரம் என்ப நடம் புரிவாருடன் செயல் மிஞ்சலாகி ... காசின் மேற்கொண்ட காமச் செயல்களால் மயக்கப் பொடி போடுகின்ற மாய வித்தை வல்லவர். கொஞ்சிப் பேசுபவர்கள். இளங் குயில் போல் நல்ல தெருக்களில் அங்கும் இங்கும் செல்பவராய், அசைகின்ற மேலாடை நெகிழவும், இடை துவளவும், கால்கள் தாவ, தாள ஒத்துடன் சித்திரப் பதுமை என்னும்படி நடனம் செய்கின்ற வேசியர்களுடன் இணக்கம் அதிகமாகி, சீர் ஆடிச் சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு ஊடாடிப் பல நோயோடுத் தடி கொண்டு குரங்கு எனவே நடந்து ... சீராக கொஞ்ச காலம் கழித்து, உடலில் (தோல் சுருங்குதலால் உண்டாகும்) சுருக்கங்கள் வந்து ஏற்பட, உயிர் போகும்படி உடலோடு வேதனைப்பட்டு பல நோய்களுடன், தடியைப் பிடித்துக் கொண்டு குரங்கைப் போல நடந்து, சொல் சீ ஓடிக் கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறிச் சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து ... இழிவாகச் சொல்கின்ற சீ என்னும் சொல் ஓடி எங்கும் பரவி, கிடக்கை படுக்கையாகி, மெலிந்து, ஒடுங்கி, அழிதலுற்று, உயிருடனே வேதனை உற்று, கண்களினின்றும் ஒளியும் விலகி, அறிவு ஒருவழிப்படாமல், காது கேட்காமல், இன்ப துன்பம் இரண்டையும் மறந்து, பின் ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது சீ சீ சிச்சி சி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ? ... பிறகு, ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மற்று மக்களும் நெருங்கியும், பக்கத்தில் கும்பலாகக் கூடியும், இது இப்போது போகாது, சீ சீ சிச்சி சி, நல்ல சனியன், கிடக்கட்டும் என்று கூறிச் செல்ல இப்படியே கிடந்து உடல் அழிவேனோ? மாரோன் முப்புர(ம்) நீறு ஆய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் சீயத்தொடே ஏகாசர்ச் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் ... மன்மதனும், மூன்று புரங்களும் சாம்பலாகும்படி நெருப்பை (நெற்றிக் கண்ணிலிருந்து) வெளிச் செலுத்தினவர், யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் போர்வையாக உடையவர், சடையில் கங்கை, இளம்பிறை, ஆத்தி மாலை சூடியுள்ளவர், மாடு ஏறிக் கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவன் அநுபங்கு உறை என்றன் மாதா மாலோனுக்கு இளையாள் மா பத்தினி ... ரிஷபத்தில் ஏறுபவர், கடலில் எழுந்த கொடிய (ஆலகால) விஷத்தை உண்டவர், எனது தந்தையாகிய சிவபெருமானோடு கூட அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது தாய், திருமாலுக்குத் தங்கை, மகா பத்தினி, அம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா(க)ம கலை ரூபாள் முக்க(ண்)ணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் மா ஞானக் குமரா தோகைப் பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட ... அம்பிகை, சங்கரி, அன்புக்கு உரிய சுந்தரி, வேதாகம நூல்களின் உருவம் வாய்ந்தவள், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடையவள், பருத்த மார்பகங்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்றருளிய சிறந்த ஞானப் புதல்வனே, கலாபக் குதிரையாகிய மயில் மேல் திருவடியை வைத்துள்ளவனே, வளமை வாய்ந்த குரு மூர்த்தியே என்று தேவர்கள் அடிமை பூண்டு பாட, சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட சூழ் வாளக் கிரி தூளாகிப் பொடி விண் கண் நிறைந்திடவே நடம் புரிகின்ற வேலா ... அசுரர்கள் அழிந்து போக, பெரிய மேரு மலை மெலிவு அடைய, அழகிய கடலும், அஷ்ட கிரிகளும்*, அஷ்ட கஜங்களோடு**, ஏழு தீவுகளும்*** வற்றிப் போக, பாதாளத்தில் உள்ள விஷப் பாம்பாகிய ஆதிசேஷனுடைய பணாமுடிகள் ஆயிரமும் கேடு உற, சூழ்ந்துள்ள சக்ரவாள கிரி தூள்பட்டு, அத்தூள் விண்ணில் உள்ள எல்லா இடங்களிலும் நிறையும் வண்ணம் நடனம் செய்கின்ற வேலனே, சோர்(வு) வேதத் தலை மேல் ஆடிச் சுக பங்கய செம் கரமோடு அகம் பெற வாகு ஆனக் குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து ... (நெறி பல கொண்டு) தளர்வு உறும் வேதத்தின் உச்சியின் மேல் விளங்குகின்றவனே, சுகத்துடன் உனது தாமரை போன்ற சிவந்த கரத்துடன் உனது உள்ளத்தையும் பெற்ற அந்த அழகிய குறப் பெண்ணான வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலகப் பெண்ணான தேவயானையுடனும் மகிழ்ச்சி உற்று, நல் தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே. ... நல்ல அக்கினி ஸ்தம்பமாகிய சிவச்சுடர் உயர்ந்தோடி ஆகாசத்தை அளாவி விளங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே. |
* எண் கிரி (8 மலைகள்): இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம். |
** எண் திசை யானைகள்: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சாருவபெளமம், சுப்ரதீபம். |
** தீபு ஏழு = ஏழு தீவுகள்: நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு. இவைகள் அத்தீவின் முக்கிய பொருட்கள் அல்லது பறவைகள். அவற்றால் அப்பெயர் பெற்றன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.267 pg 2.268 pg 2.269 pg 2.270 pg 2.271 pg 2.272 WIKI_urai Song number: 554 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 412 - kArAdak kuzhal (thiruvaNNAmalai) kArA dakkuzha lAlA lakkaNai kaNkaLsu zhanRida vEmu kangaLi nAlA pacchilai yAlE meRpusi manjaLka lanthaNi vALi konthaLa kAthA dakkalan mElA dakkudi yinpara sanguda mArpa LingoLi ...... kongaimAthar kAsA saiccheya lAlE chokkidu vinjaiyar konjidu vAri Langkuyil pOlE natReru vUdA diththuyal thongalne kizhnthidai yEthu vaNdida kAlthA vicchathi yOdE chiththira menpana dampuri vAru danseyal ...... minjalAkic cheerA dicchila nALpOy meyththirai vanthuka lanthuyi rOda vangamo dUdA dippala nOyO duththadi koNduku rangena vEna danthusol seeyO dikkidai pAyO dukkiya dangiya zhinthuyi rOdu LainjoLi ...... yungaNmARic chErA maRpoRi kELA maRchevi thunpamo dinpamu mEma Ranthupin UrAr sutRamu mAthOr makkaLu maNdiyu maNdaiyu dEku vinthithu cheechee chicchichi pOkA naRchani yankada venRida vEki danthudal ...... manguvEnO mArOn muppura neeRA yutRida angiyu mizhnthidu vOri pampuli thOlchee yaththode yEkA sarcchadai kangaiyi LampiRai yAra Ninthavar mAdE Rikkada lAlA laththaiyu muNdava renthaisi vAnu panguRai ...... yenRanmAthA mAlO nukkiLai yALmA paththini yampikai sangari mOka sunthari vEthA makkalai rUpAL mukkaNi rampiya kongaiyi nALpa yantharuL mAnjA nakkuma rAthO kaippari yinpatha vaNguru vEye namsurar ...... thoNdupAdac cUrAr makkida mAmE rukkida angkada leNkiri yOdi pangodu theepE zhatRida pAthA LaththuRai nanjara vinpaNa mAyi rangkeda cUzhvA Lakkiri thULA kippodi viNkaNi Rainthida vEna dampuri ...... kinRavElA sOrvE thaththalai mElA dicchuka pangaya sengkara mOda kampeRa vAkA nakkuRa mAthO daRputha mangula Nanguda nEma kizhnthunal thUNO dicchuda rAkA saththaiya Nainthuvi Langaru NAcha lanthikazh ...... thambirAnE. ......... Meaning ......... kAr Adu ak kuzhal Al AlakkaNai kaNkaL suzhanRidavE mukangaLil nAlA pacchilaiyAlE mel pUsi manjaL kalanthu aNi vALi konthaLa(m) kAthu Adak kalan mEl Adak kudi inpa rasam kudam Ar paLingku oLi kongaimAthar: Their hair looks like the dark cloud. Rolling their eyes that look like arrows soaked in evil poison, they smear a paste of several herbs with turmeric on their face. The swinging studs move back and forth on their ears close to the hair while the other ornaments sway on the top. The breasts of these whores have the lustre of marble and look like pots filled with nectar. kAsu Asaic cheyalAlE chokkidu(m) vinjaiyar konjiduvAr iLam kuyil pOlE nal theru UdAdith thuyal thongal nekizhnthu idaiyE thuvaNdida kAl thAvic chathiyOdE chiththiram enpa nadam purivArudan seyal minjalAki: Impelled by their avarice for money, they resort to subjugation methods by spraying magic potions in powder form. They are capable of flirting with charming lisps. They move about hither and thither on the streets like cuckoos, deliberately dropping their upper garment, with their waist caving in and moving their feet in rhythm as though they are dancing dolls. With intense liaison with these whores, cheer Adic chila nAL pOy mey thirai vanthu kalanthu uyir Oda angamOdu UdAdip pala nOyOduth thadi koNdu kurangu enavE nadanthu: I spent a few days very well until my skin suffered wrinkles and the pain inflicted by many diseases became so debilitating that I felt I was dying; I started walking like a monkey leaning on the stick in my hand. sol chee Odik kidai pAyOdu ukki adangi azhinthu uyarOdu uLainju oLiyum kaN mARic chErAmal poRi kELAmal sevi thunpamodu inpamumE maRanthu: Amidst ridiculing words against me being spoken all around, being bed-ridden, with an emaciated and shrunken body, deteriorating day by day, with distressing pain affecting my life, the brightness in my eyes fading, unable to think cogently, being short of hearing and forgetting both bliss and agony simultaneously, pin UrAr sutRamum mAthu Or makkaLum maNdiyum aNdaiyudE kuvinthu ithu chee chee chicchi chi pOkA nal chaniyan kada enRidavE kidanthu udal manguvEnO: I became a laughing stock among the people of my town, including my own kith and kin who surrounded me in a crowd declaring that it was not yet time for this life to depart and condemned me with all kinds of deriding remarks leaving me alone to die; am I destined to witness the decay of my body as all my folks depart? mArOn muppura(m) neeRu Ay utRida angi umizhnthiduvOr ipam puli thOl seeyaththodE EkAsarc chadai kangai iLam piRai Ar aNinthavar: He spewed fire (from His fiery eye) burning the Thiripuram and Manmathan (God of Love) to ashes; He wears the hides of the elephant, the tiger and the lion as the loin-cloth; on His matted hair, He wears the River Gangai, crescent moon and a garland of Aththi flowers (mountain ebony); mAdu ERik kadal AlAlaththaiyum uNdavar enthai sivan anupangu uRai enRan mAthA mAlOnukku iLaiyAL mA paththini: He mounts the bull (Rishabam); he imbibed the evil (AlakAla) poison that emerged from the sea; he is my father Lord SivA on whose left side She, my Mother, is concorporate; She is the younger sister of Lord VishNu; She is the chaste Consort of the Lord; ampikai sangari mOka sunthari vEthA(ka)ma kalai rUpAL mukka(N)Ni nirampiya kongaiyinAL payantharuL mA njAnak kumarA thOkaip pariyin patha vaN guruvE ena am surar thoNdu pAda: She is Mother Sankari; She is the most beautiful Goddess enjoying the love of one and all; She has a figure comprising the texts of the VEdic Scriptures; She has three eyes (namely, the Sun, the Moon, and Agni, the Fire-God); She is bestowed with huge bosom; and You are the son of eminent Knowledge of that Goddess Parvathi! The celestials in submission to you sing Your glory hailing You as the Lord who mounts with Your feet the horse-like vehicle, namely the peacock with plumes, and as the Great master with a fund of knowledge. cUrAr makkida mA mEru ukkida am kadal eN kiriyOdu ipam kodu theepu Ezh atRida pAthALaththu uRai nanju aravin paNam Ayiram keda cUzh vALak kiri thULAkip podi viN kaN niRainthidavE nadam purikinRa vElA: Destroying the demons, weakening the large Mount MEru, dehydrating the beautiful sea, the eight mountains*, the eight great elephants** that guard the cardinal directions and the seven islands***, inflicting injury to the thousand hoods of the great poisonous serpent AdhisEshan in the netherland, and shattering to pieces the surrounding Mount ChakravaLAkam, You danced about merrily as the dust particles filled up the entire sky, Oh Lord with the Spear! sOr(vu) vEthath thalai mEl Adic chuka pangaya sem karamOdu akam peRa vAku Anak kuRa mAthOdu aRputha mangul aNangudanE makizhnthu: You dazzle on top of the VEdAs that have been weakened due to many branches emanating from them! She not only obtained bliss by winning Your reddish lotus-like hand but She also stole Your heart; She is VaLLi, the beautiful damsel of the KuRavAs; along with her, You also revel in the company of the wonderful celestial maid, DEvayAnai, nal thUN Odic chudar AkAsaththai aNainthu viLangu aruNAchalam thikazh thambirAnE.: and have taken Your seat in the eminent place ThiruvaNNAmalai, known for the effulgence of SivA standing upright as a pillar of fire, Oh Great One! |
* The eight mountains are: imayam, mantharam, kailAsam, vinthiyam, nidatham, EmakUdam, neelam and kanthamAthanam. |
** The eight elephants (ashta-dhik-gajAs) that guard the cardinal directions are: airAvatham, puNdareekam, vAmanam, kumutham, anjanam, pushpathantham, sAruvapaumam, supratheepam. |
*** The seven islands are: nAval, iRali, kusai, kravunjam, putkaram, thengu and kamuku; the islands are named after the principal commodity grown or birds found there. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |