திருப்புகழ் 413 காரும் மருவும்  (திருவருணை)
Thiruppugazh 413 kArummaruvum  (thiruvaruNai)
Thiruppugazh - 413 kArummaruvum - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்ததன தானதன தந்ததன
     தானதன தந்ததன ...... தந்த தனதான

......... பாடல் .........

காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
     காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே

காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே

ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே

ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
     லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே

ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
     ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா

ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
     யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே

மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
     வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா

மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
     வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காரும் மருவும் பெருகு சோலை மருவும் கொடிய காகளம்
அடங்கவும் முழங்கும் அதனாலே
... மேகமும், மருக்கொழுந்தின்
வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய
எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும்,

கால் அடர வம்பு அமளி மேல் அடர ... தென்றல் காற்று நெருங்கி
வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும்,

வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே ...
போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற
பாணங்களாகிய ஐந்து மலர்களாலும்,

ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ... ஊராரும்
உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல்
(எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும்,

ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே ஊடி இரு கொங்கை
மிசை கூடி
... (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து
என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது
மார்பகங்களின் மீது கூடி இணங்கியும்,

வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து
அருளுவாயே
... இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள்
உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக.

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ... ஆத்தி
மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும்
அணிந்துள்ள சடையராகிய

ஆதி பரவும்படி நினைந்த குரு நாதா ... ஆதி மூர்த்தியான
சிவ பெருமான் தியானித்த குருநாதனே,

ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும்
திருவும் அன்பும் உடையோனே
... ஆறு முகங்களும், குராமலரும்,
வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும்
மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே,

மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை
அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
... மேரு மலையும், பெரிய
சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும்
பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே,

மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில்
எழுந்தருளி நின்ற பெருமாளே.
... உலகம் வணங்கும்
திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள
பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக
பாவித்தது போன்று அமைந்தது. குயிலின் எக்காளம், தென்றல், மன்மதன்,
மலர்க்கணைகள், ஊராரின் ஆரவாரம் முதலியவை தலைவனின் பிரிவை
மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.271  pg 2.272  pg 2.273  pg 2.274 
 WIKI_urai Song number: 555 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 413 - kArum maruvum (thiruvaNNAmalai)

kArumaru vumperuku sOlaimaru vunkodiya
     kAkaLama dangavumu ...... zhangu mathanAlE

kAladara vampamaLi mEladara vanthuporu
     kAmanvidu vinjukaNai ...... anju malarAlE

Urumula kumpazhaiya pErukamvi Lainthathena
     Oriravu vanthenathu ...... sinthai yazhiyAthE

Udiyiru kongaimisai kUdivari vaNdinamu
     lAviyaka dampamalar ...... thantha ruLuvAyE

Arumara vumpiRaiyu neerumaNi yuncadaiya
     rAthipara vumpadini ...... naintha gurunAthA

ARumuka mumkuravu mERumayi lumkuRavi
     yALumura munthiruvum ...... anpu mudaiyOnE

mErumalai yumperiya cUrumalai yumkariya
     vElaiyalai yumpakaiyum ...... anja vidumvElA

mEthiniyi Rainjumaru NApurivi Languthiru
     veethiyile zhuntharuLi ...... ninRa perumALE.

......... Meaning .........

kArum maruvum peruku sOlai maruvum kodiya kAkaLam adangavum muzhangum athanAlE: Because of the non-stop cooing like a trumpet by the mischievous cuckoo in the grove where the cloud and the aroma of tender maru leaves hover,

kAl adara vampu amaLi mEl adara: because of the strong gust of southerly wind blowing closely on the fragrant bed,

vanthu poru kAman vidu vinju kaNai anju malarAlE: because of the confrontational God of Love, Manmathan, taking up arms and shooting the five flowery arrows,

Urum ulakum pazhaiya pEr ukam viLainthathu ena: and because of the uproar (of gossip against me) raised by the town and the world as if the old universe is ending in a deluge,

Or iravu vanthu enathu sinthai azhiyAthE Udi iru kongai misai kUdi: (showing mercy to me) please come at least for a night to save me from losing my mind and to intermittently tease and please me by hugging my bosom;

vari vaNdu inam ulAviya kadampa malar thanthu aruLuvAyE: and grant me the kadappa garland where swarms of beetle roam about humming music.

Arum aravum piRaiyum neerum aNiyum cadaiyar: He wears on His matted hair the Aththi (mountain ebony) flower, serpent, crescent moon and River Gangai;

Athi paravumpadi ninaintha guru nAthA: He is the primordial Lord SivA who meditated on You, Oh Great Master!

ARu mukamum kuravum ERu mayilum kuRavi ALum uramum thiruvum anpum udaiyOnE: You have six lovely faces, kurA flowers, peacock as Your vehicle, a broad chest ruled by the hugging damsel of the KuRavAs (VaLLi), abundant wealth (of Knowledge) and love, Oh Lord!

mEru malaiyum periya cUrum malaiyum kariya vElai alaiyum pakaiyum anja vidum vElA: You wield Your spear scaring off Mount MEru, the huge demon SUran, Mount Krouncha, the black wavy seas and all the enemies, Oh Lord!

mEthini iRainjum aruNApuri viLangum thiru veethiyil ezhuntharuLi ninRa perumALE.: You have Your abode in the holy street of ThiruvaNNAmalai which place is worshipped by the entire world, Oh Great One!


This is a love song in the Nayaka-Nayaki Bhava with Murugan as the Nayaka and the poet as the Nayaki.
The cooing cuckoo, southerly wind, God of Love Manmathan, His flowery arrows and people's gossip-mongering are some of the aspects that enhance the pangs of separation of the Nayaki from the Nayaka.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 413 kArum maruvum - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]