![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
|---|
| (இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
| திருப்புகழ் 414 கீத விநோத மெச்சு (திருவருணை) Thiruppugazh 414 geedhavinOdhamechchu (thiruvaruNai) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English PDF அமைப்பு in PDF | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
|
தான தனான தத்த ...... தனதான தான தனான தத்த ...... தனதான ......... பாடல் ......... கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே நீதி யிலாத ழித்து ...... முழலாதே நீமயி லேறி யுற்று ...... வரவேணும் சூதமர் சூர ருட்க ...... பொருசூரா சோண கிரீயி லுற்ற ...... குமரேசா ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கீத விநோத மெச்சு குரலாலே ... (மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், கீறு மையார் முடித்த குழலாலே ... வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், நீதி யிலாதழித்தும் உழலாதே ... மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீமயி லேறி யுற்று வரவேணும் ... நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதமர் சூரர் உட்க பொருசூரா ... சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, சோண கிரீயி லுற்ற குமரேசா ... (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே ... ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, ஆனைமுகார் கனிட்ட பெருமாளே. ... யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே. |
| 'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.273 pg 2.274 WIKI_urai Song number: 556 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
| திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
| ![]() |
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) top |
|
Song 414 - geedha vinOdha (thiruvaNNAmalai) geetha vinOdha mechchu ...... kuralAlE keeRumaiyAr mudiththa ...... kuzhalAlE needhiyilAdh azhiththum ...... uzhalAdhE neemayil Eri yutru ...... varavENum sUdhamar sUrar utka ...... porusUrA sONagireeyil utra ...... kumarEsA Adhiyar kAdho ruchchol ...... aruLvOnE Anai mukAr kanishta ...... perumALE. ......... Meaning ......... geetha vinOdha mechchu kuralAlE: Enchanted by the versatile voices of women displaying musical wonders, keeRumaiyAr mudiththa kuzhalAlE: and attracted by their beautiful dark hair, neatly parted, with a braided tuft, needhiyilAdh azhiththum uzhalAdhE: I have been doing immoral things, and before I degenerate roaming around like this, neemayil Eri yutru varavENum: You have to come to my rescue mounted on Your peacock! sUdhamar sUrar utka porusUrA: The demons (asuras) full of evil thoughts were afraid when You fought and won over them! sONagireeyil utra kumarEsA: You have Your abode at SoNagiri (thiruvaNNAmalai)! Adhiyar kAdho ruchchol aruLvOnE: Into the ears of the Foremost DEvA (Lord SivA) You preached the unique ManthrA (OM)! Anai mukAr kanishta perumALE.: You are the younger brother of elephant-faced GaNapathi, Oh Great One! |
| தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in https://kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |