திருப்புகழ் 415 குரவ நறும் அளக  (திருவருணை)
Thiruppugazh 415 kuravanaRumaLaga  (thiruvaruNai)
Thiruppugazh - 415 kuravanaRumaLaga - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன
          தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான

......... பாடல் .........

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
     குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
          குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத

குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
          குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான்

பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
     புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
          பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே

புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
     பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென
          புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
     மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
          அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
          அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
     துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
          சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே

துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
     துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
          சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குரவ நறும் அளக குழல் கோதிக் காட்டியெ ... குரா மலரின்
நறு மணம் வீசும் மயிர்க் கற்றை உள்ள கூந்தலை வேண்டுமென்றே
சிக்கெடுத்துக் காட்டியும்,

குலவும் இரு கயல்கள் விழி மோதித் தாக்கியெ ... விளங்கும்
இரண்டு கயல் மீன்கள் போன்ற கண்களைக் கொண்டு மோதித் தாக்கியும்,

குமுத மலர் ஒளி பவள வாயைக் காட்டியெ ... குமுத மலர்
போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதுமான வாயைக் காட்டியும்,

குழையாத குணம் உறுக இனிது பயில் கூறிக் காட்டியெ ...
இளகாத காமம் முதிர்ச்சி உறும்படி, இனிமையாக நெருங்கிய ஞாபகத்தைக்
காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும்,

குலைய இரு கலை நெகிழ வீசிக் காட்டியெ ... பெரிய ஆடை
குலைவுற்று நெகிழ்ந்து தளரும்படி பக்கம் வீசிக் காட்டியும்,

குடவியிடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலெ கொடியேன்
யான்
... ஆடவர்களை வளைத்துப் போடும் மாதர்களுடைய காம
லீலைகளில் (ஈடுபட்ட) கொடியவனாகிய நான்,

பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கிய புலையன்
இவன் என உலகம் ஏச
... என் பொருள், இளமை, கல்வி, மனம்
இவை யாவும் போகும்படி தொலைத்த கீழ்மகன் இவன் என்று
உலகத்தவர் இகழ்ந்து உரைக்க,

போக்கு என பொறி வழியில் அறிவு அழிய பூதச் சேட்டைகள்
பெருகாதே
... ஐம்பொறிகள் இழுத்த இழுப்பின் வழியிலே சென்று என்
அறிவு அழிய, ஐம்பூதங்களால் ஆகிய உடம்பின் குறும்புச் செயல்கள்
என்னிடம் வளராதவாறு,

புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ ... புதிய மலர்கள்
பொருந்திய உன் இரண்டு திருவடிகளால் அமைதியாகி,

பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என ... யாவரும்
ஒப்புக்கொள்ளும் வகையில் திருவண்ணாமலையில் நிலைத்துள்ள பெரிய
தலைவன் நீதான் என்று

புகழ் அடிமை தனை உனது பார்வைக் காத்திட
நினையாதோ
... உன்னைப் புகழ்கின்ற இந்த அடிமையை, உன்
திருக்கண் பார்வையால் காத்தளிக்க நினைக்க மாட்டாயோ?

அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்த அக்கமும் மணியும் ஒரு
சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ
... பாம்பும், அறுகும், சந்திரனும்,
ஆத்தியும், ஊமத்தை மலரும், ருத்ராட்சமும், மணியும் அணிந்துள்ள
ஒப்பற்ற சடையை உடைய சிவபெருமான் உவந்து ஏற்றுக் கொள்ளும்
வகையில்,

அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே ...
அறிதற்கு அரிதான மேலான பிரணவப் பொருளை உபதேசித்து ஊட்டிய
அறிஞனே,

அழகு செறி குழலியர்கள் வானத் தாட்டியர் தரும் அமுது
சரவணையில் வாவித் தேக்கியெ
... அழகு நிறைந்த கூந்தலை
உடையவர்களாக, வானிடத்திலே உள்ள ஆறு கார்த்திகைப் பெண்கள்
தந்த பால் அமுதை சரவண மடுவில் நிரம்ப உண்டு,

அறு சிறுவர் ஒரு உடலமாகித் தோற்றிய இளையோனே ...
ஆறு சிறுவர்களாக இருந்தவர்கள் ஓர் உடலினராகி விளங்கிய
இளைஞனே,

சுரர் உலவ அசுரர்கள் மாள தூள் பட துயவும் உடல் அயிலை
விடும் மா உக்ரா
... தேவர்கள் (மகிழ்ந்து) உலவும்படியும், அசுரர்கள்
இறக்கும்படியும், பொடியாக அறிவு கலங்கும்படி கோபித்த
வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய மூர்த்தியே,

க்ரம சுவறி எழு கடலும் முறையாகக் கூப்பிட முனிவோனே ...
நீதிமானே, வற்றிப்போன ஏழு கடல்களும் முறை செய்து ஒலி
எழுப்பும்படியாகக் கோபித்தவனே,

துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின்
அணுகி
... உடுக்கை, முரசு (இவைகளை உடைய) வேடர்களின்
காவல் கொண்ட காட்டில், உனது இரண்டு (திருவடி) மலர்களால்
நெருங்கி,

தினை காவல் காத்த (அன்) னை சுரிய குழல் குற மகளை
வேளைக் காத்து அணை பெருமாளே.
... தினைப் புனத்தைக்
காவல் காத்திருந்த தாய், சுருண்ட கூந்தலைக் கொண்ட குற
மகளாகிய வள்ளியை, தக்க சமயத்துக்காக காத்திருந்து,
(அவளை) அணைந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.273  pg 2.274  pg 2.275  pg 2.276  pg 2.277  pg 2.278 
 WIKI_urai Song number: 557 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 415 - kurava naRum aLaga (thiruvaNNAmalai)

kuravanaRu maLakakuzhal kOthik kAttiye
     kulavumiru kayalkaLvizhi mOthith thAkkiye
          kumuthamala roLipavaLa vAyaik kAttiye ...... kuzhaiyAtha

kuNamuRuka inithupayil kURik kAttiye
     kulaiyairu kalainekizha veesik kAttiye
          kudaviyidu marivaiyarka LAsaip pAttile ...... kodiyEnyAn

poruLiLamai kalaimanamu mEkap pOkkiya
     pulaiyaniva nenavulaka mEsap pOkkena
          poRivazhiyi laRivazhiya pUthac chEttaikaL ...... perukAthE

puthumalarkaL maruvumiru pAthath thAtRiye
     pothuvakaiyi laruNainilai neeLkarth thAvena
          pukazhadimai thanaiyunathu pArvaik kAththida ...... ninaiyAthO

aravamuda naRukumathi yArmath thAkkamu
     maNiyumoru sadaimavuli nAthark kERkave
          aRivariya voruporuLai pOthath thEtRiya ...... aRivOnE

azhakuseRi kuzhaliyarkaL vAnath thAttiyar
     tharumamathu saravaNaiyil vAvith thEkkiye
          aRusiRuva roruvudala mAkith thOtRiya ...... iLaiyOnE

surarulava asurarkaL mALath thUtpada
     thuyavumuda layilaividu mAvuk rAkrama
          suvaRiyezhu kadalumuRai yAkak kUppida ...... munivOnE

thudimuzhavu maRavarida sEvaR kAttinil
     thuNaimalari naNukithinai kAvaR kAththanai
          suriyakuzhal kuRamakaLai vELaik kAththaNai ...... perumALE.

......... Meaning .........

kurava naRum aLaka kuzhal kOthik kAttiye: Deliberately untangling the tress of their hair that has the aroma of kurA flowers,

kulavum iru kayalkaL vizhi mOthith thAkkiye: staring with their two kayal-fish-like eyes as if in attack,

kumutha malar oLi pavaLa vAyaik kAttiye: displaying their lily-like lips that are red and bright like coral,

kuzhaiyAtha kuNam uRuka inithu payil kURik kAttiye: provocatively speaking so as to ripen the budding passion, recalling past incidents of sweetness and closeness,

kulaiya iru kalai nekizha veesik kAttiye: and letting the upper garment slide and purposely casting it sideways,

kudaviyidum arivaiyarkaL Asaip pAttile kodiyEn yAn: these whores engage in so many acts to entice young men; having been ensnared by them, I, the wicked one,

poruL iLamai kalai manamum Ekap pOkkiya pulaiyan ivan ena ulakam Esa: am being abused by this world being branded as the loser of all my money, youth, education and mind;

pOkku ena poRi vazhiyil aRivu azhiya pUthac chEttaikaL perukAthE: to save my mind from destruction by yielding to the command of my five sensory organs and to curb the naughty activities of my body caused by the five elements,

puthu malarkaL maruvum iru pAthaththu AtRiye: kindly grant me Your two hallowed feet, adorned by freshly blossomed flowers, that will soothe my mind;

pothu vakaiyil aruNai nilai neeL karththA ena pukazh adimai thanai unathu pArvaik kAththida ninaiyAthO: I am praising Your glory so that everyone concurs with me when I declare that You alone are the Greatest Leader in ThiruvaNNAmalai; will You not kindly think of protecting this humble slave with Your gracious glance?

aravam udan aRuku mathi Ar maththa akkamum maNiyum oru sadai mavuli nAtharkku ERkave: He wears on His unique and matted hair the serpent, aRugam (cynodon) grass, the moon, Aththi (mountain ebony) and Umaththai flowers, rudraksha beads and gems; in a manner accepted with relish by that Lord SivA,

aRivariya oru poruLai pOthaththu EtRiya aRivOnE: You taught Him the meaning of the supreme PraNava ManthrA, which is the rarest one, beyond anyone's comprehension.

azhaku seRi kuzhaliyarkaL vAnath thAttiyar tharum amuthu saravaNaiyil vAvith thEkkiye: In the SaravaNa pond, You imbibed plenty of nectar-like milk, breast-fed by six celestial KArththigai girls who were endowed with beautiful hair;

aRu siRuvar oru udalamAkith thOtRiya iLaiyOnE: six little babies then merged together as a single bodied child, Oh Young One!

surar ulava asurarkaL mALa thUL pada thuyavum udal ayilai vidum mA ukrA: Making the celestials walk freely and happily in their land and destroying the demons by shattering their brains to pieces, You wielded Your angry spear, Oh Mighty Lord!

krama suvaRi ezhu kadalum muRaiyAkak kUppida munivOnE: You are the most righteous one! You were so enraged that the dried up seven seas appealed to You loudly, Oh Lord!

thudi muzhavu maRavar ida sEval kAttinil thuNai malarin aNuki: You approached on Your lotus feet the forest which was guarded by the hunters who held hand-drums and big drums;

thinai kAval kAththa (an)nai suriya kuzhal kuRa makaLai vELaik kAththu aNai perumALE.: and waited for a proper opportunity to meet with Mother VaLLi guarding the millet field, who was the damsel, with curly hair, of the KuRavAs; then You embraced her, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 415 kurava naRum aLaga - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]