பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 271 குணம் (காம) முதிர்ச்சியை உறும்படி இனிமையான வகையில் நெருங்கிய பழமையை (உறவைக்) காட்டும் பேச்சுகளைப் பேசிக் காட்டியும், இரு கலை குலைய நெகிழ பெரிய புடவையும் குலைவுற்று (நெகிழ) அவிழ்ந்து தளரும்படி (முன் தானையைப்) பக்கம் வீசிக் காட்டியும், (ஆடவர்களை) வளைத்திழுக்கும் மாதர்களுடைய காம லீலைகளிலே கொடியவனாகிய நான் - (என்) பொருள் . (என்) இளமை, (என்) படிப்பு (என்) மனம் - இவை யாவும் போகும்படித் தொலைத்த கீழ் மகன் இவன் என்று உலகோர் (ஏச) இகழ்ந்துரைக்கப்போனதே போக்காக ஐம்பொறிகளின் வழியிலே சென்று என் அறிவு அழிய, ஐம்பூதங்களின் (அல்லது ஐம்பூதங்களால் ஆய உட்ம்பின்) குறும்புச் செயல்கள் என்னிடம் வளராதவாறு புதுமலர்கள் பொருந் தியுள்ள உனது இரண்டு திருவடிகளாற் சாந்திபெற்று, "யாவர்க்கும் ஒப்ப முடிந்த வகையில் அருணையில் நிலைத்துள்ள பேt கர்த்தனே (தலைவனே) என்று உன்னைப் புகழ்கின்ற இந்த அடிமையாகிய என்னை உண்து திருக்கண் பார்வை காத்தளிக்க நினைக்காதா! பாம்பும், அறுகும், சந்திரனும் (ஆர்) ஆத்தியும் மத்தம் (ஊமத்தையும்) , (அக்கமும்) ருத்ராக+ மாலையும் அணிந் துள்ள ஒப்பற்ற சடாமகுடம் Զ-GTԼ— IL/ சிவபிரான் உவந்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அறிதற்கு அரிதான ஒப்பற்ற (பிரணவப்) பொருளை அவருக்கு உபதேசித்து ஊட்டிய அறிஞனே! அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாய் வானிடத்தே உள்ள கார்த்திகை மாதர்கள் தந்த பாலமுதைச் சரவணமடுவில் நிரம்ப உண்டு ஆறு சிறுவர்களா யிருந்தவர்கள் ஒரு உடலினராகி விளங்கித் தோன்றிய இளைஞனே! பொதுவகையில் - பொ துவகையில் கர்த்தா, தலைவா, முதல்வா என இறைவனைப் புகழ்தல்