திருப்புகழ் 416 குழவியுமாய் மோகம்  (திருவருணை)
Thiruppugazh 416 kuzhaviyumAimOgam  (thiruvaruNai)
Thiruppugazh - 416 kuzhaviyumAimOgam - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தனதான

......... பாடல் .........

குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
     குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக்

குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
     விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப்

பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
     பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப்

பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
     பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ

எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
     மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன்

இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
     யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய

அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
     அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி

அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்
     அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் ... குழந்தையாகப்
பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து,

வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி ... வீடு,
மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு
நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து,

குனி கொடு கூன் நீடு மாகிடு கிழவனுமாய் ... உடல் வளைந்து,
கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி,

ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் ...
உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும்
அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி,

பழய சட் ஆதார மேல் நிகழ் கழி உடல் காணா ... (குண்டலினி
சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின்* மேல் நிலையில் நிகழும்
உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து,

நிராதர பரிவிலி வான் நாலை நாடொறும் மடை மாறி ... சார்பு
அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு
அங்குல** அளவு வாயுவைக் கழியாது திருப்பி,

பல பலவாம் யோக சாதக உடல் கொடு ... பல விதமான யோகப்
பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து,

மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி
அடைவேனோ
... (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு
மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது
யான் போய்ச் சேருவேனோ?

எழு கடல் தீமூள மேருவும் இடிபட ... ஏழு கடல்களும் நெருப்பு
மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும்,

வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட ... பிரமனும்,
நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும்,

முது சேடன் இருள் அறு பாதாள லோகமும் இமையமும்
நீறாக
... பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும்,
இமயமலையும் பொடிப்பொடியாகவும்,

வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய ... சக்ரவாளகிரி
இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள்
சாய்ந்து விழவும்,

அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் ...
அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில்
குடியேறவும் செய்வித்து,

அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி ... அசுரர்களுடைய
பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை
மேவாத சூரரை அமர் செயும்

வேலாயுதா ... அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை
செய்த வேலாயுதனே,

உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே. ... சிறப்பு
வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே.


* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்



  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.277  pg 2.278  pg 2.279  pg 2.280 
 WIKI_urai Song number: 558 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 416 - kuzhaviyumAi mOgam (thiruvaNNAmalai)

kuzhaviyu mAymOka mOkitha kumaranu mAyveedu kAthali
     kulavanu mAynAdu kAdodu ...... thadumARi

kunikodu kUneedu mAkidu kizhavanu mAyAvi pOyvida
     viRakuda nEthULi yAvathu ...... maRiyAthAy

pazhayasa dAthAra mEnikazh kazhiyudal kANAni rAthara
     parivili vAnAlai nAdoRu ...... madaimARi

palapala vAmyOka sAthaka vudalkodu mAyAtha pOthaka
     pathiyazhi yAveedu pOyini ...... yadaivEnO

ezhukadal theemULa mEruvu midipada vEthAvum vEthamu
     miraviyum vAypARi yOdida ...... muthusEdan

iruLaRu pAthALa lOkamu mimaiyamu neeRAka vALkiri
     yirupiLa vAyveezha mAthira ...... malaisAya

azhakiya mApAka sAthana namararu mUrpUtha mARusey
     avuNrtha mAsEnai thULezha ...... viLaiyAdi

amarinai mEvAtha cUrarai amarseyum vElAyu thAvuyar
     aruNaiyil vAzhvAka mEviya ...... perumALE.

......... Meaning .........

kuzhaviyumAy mOkam mOkitha kumaranumAy: I was born as a little baby, grew into a young man, affected by delusion and passion,

veedu kAthali kulavanumAy nAdu kAdodu thadumARi: and became a well-settled family man of good lineage, possessing a house and a wife. I roamed about in the countryside and forests until I became dizzy.

kuni kodu kUn needu mAkidu kizhavanumAy: Eventually, my body was bent out of shape, developing a hunch-back, and I became an old man.

Avi pOyvida viRakudanE thULiyAvathum aRiyA thAy: Knowing that after the life departs, my body would burn along with logs and get reduced to ashes, I wish to get away from this trend of thought

pazhaya sad AthAra mEl nikazh kazhi udal kANA: and attain the state at which my body is discarded once I have surpassed the (KuNdalini ChakrA's) old centres numbering six*;

nirAthara parivili vAn nAlai nAdoRum madai mARi: (the state at which) I am able to return four inches of unused air** into the unfettered and blissful ether daily;

pala palavAm yOka sAthaka udal kodu: I wish to develop my body by putting it through a variety of Yogic exercises;

mAyAtha pOthaka pathi azhiyA veedu pOy ini adaivEnO: (after completion of the above) will I be able to ultimately reach the immortal heavenly abode where there is no death and there is only an effulgence of Knowledge?

ezhu kadal theemULa mEruvum idipada: The seven seas caught fire; Mount Meru was shattered to pieces;

vEthAvum vEthamum iraviyum vAy pARi Odida: BrahmA, the four VEdAs and the sun ran helter skelter in wrong directions;

muthu sEdan iruL aRu pAthALa lOkamum imaiyamum neeRAka: the bright nether world (PAthala LokA) ruled by the old serpent king AdhisEshan and the Himalayas were smashed to smithereens;

vAL kiri iru piLavAy veezha mAthira malai sAya: Mount SakravALa was split into two and fell down; the mountains in all the eight directions collapsed;

azhakiya mA pAkasAthanan amararum Ur pUtha mARu sey: handsome IndrA, the Great, and other DEvAs were resettled in their own golden celestial land;

avuNar tham mA sEnai thUL ezha viLaiyAdi: the vast armies of the demons were driven to the dust as if it were a sport;

amarinai mEvAtha cUrarai amar seyum vElAyuthA: You fought with the demons headed by SUran because of their disinclination for peace, Oh Lord with the Spear,

uyar aruNaiyil vAzhvAka mEviya perumALE.: You are seated with relish in Your famous abode in ThiruvaNNAmalai, Oh Great One!


* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union



** Yogi normally inhales 12 inches of air ('pUragam'), retains 8 inches ('kumbagam') in the body and returns through exhalation 4 inches of air ('rechagam') into ether.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 416 kuzhaviyumAi mOgam - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]