திருப்புகழ் 411 காணாத தூர நீள்  (திருவருணை)
Thiruppugazh 411 kANAdhadhUraneeL  (thiruvaruNai)
Thiruppugazh - 411 kANAdhadhUraneeL - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான

......... பாடல் .........

காணாத தூர நீணாத வாரி
     காதார வாரம ...... தன்பினாலே

காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே

நானாப வாத மேலாக ஆக
     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ

சோணாச லேச பூணார நீடு
     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா

தோலாத வீர வேலால டாத
     சூராளன் மாளவெ ...... குண்டகோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல்சி ...... றந்தமார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

காணாத தூர நீள் நாத வாரி ... கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து
ஓயாத அலையோசை உள்ள கடலின்

காதாரவாரம் அதன்பினாலே ... வதைக்கின்ற ஆரவாரமும், அதன்
பின்பாக,

கால் ஆளும் வேளும் ... தென்றற் காற்றை தேர்போல் கொண்ட
மன்மதனும்,

ஆலால நாதர் காலால் நிலாவும் ... கடலில் பிறந்த விஷத்தை
உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்*,

முனிந்து பூமேல் ... இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது

நாணான தோகை நூலாடை சோர ... நாணம் கொண்ட மயில்
போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ,

நாடோர்கள் ஏச அழிந்து தானே ... நாட்டில் உள்ளோர்
பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே

நானாபவாத மேலாக ... பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட,

நாடோறும் வாடி மயங்கலாமோ ... நாள்தோறும் வாட்டமடைந்து
மயங்கலாமோ?

சோணாசல ஈச ... சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே,

பூணார நீடு தோள் ஆறும் ஆறும் விளங்குநாதா ...
அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற
நாதனே,

தோலாத வீர ... தோல்வியே அறியாத வீரனே,

வேலால் அடாத சூராளன் மாள ... உனது வேலைக் கொண்டு,
தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக

வெகுண்ட கோவே ... கோபித்துச் செலுத்திய தலைவனே,

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை ... விண்ணுலகில் வாழ்ந்த
மாது தேவயானையின்

தீராத காதல்சிறந்த மார்பா ... நீங்காத காதல் நிறைந்த மார்பை
உடையவனே,

தேவாதி கூடு மூவாதி மூவர் ... தேவர்கள் முதலியோர் மூன்று எனக்
கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும்

தேவாதி தேவர்கள் தம்பிரானே. ... தேவர்களுக்கு அதிதேவர்களாய்
உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே.


* தக்கன் யாகத்தில் சிவனுடைய அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால்
துகைத்தார் - சிவபுராணம்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு
இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.263  pg 2.264  pg 2.265  pg 2.266 
 WIKI_urai Song number: 553 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 411 - kANAdha dhUra neeL (thiruvaNNAmalai)

kANAdha dhUra neeNAdha vAri
     kAdhAra vAramadh ...... anpinAlE

kAlALum vELum AlAla nAthar
     kAlAl nilAvumu ...... nindhu bUmEl

nANAna thOgai nUlAdai sOra
     nAdOrgaL Esa ...... azhindhu thAnE

nAnA pavAdha mElAga Aga
     nAdORum vAdi ...... mayangalAmO

sONAchalEsa pUNAra needu
     thOLARum ARum ...... iLangu nAthA

thOlAdha veera vElAla dAdha
     sUrALan mALa ...... veguNda kOvE

sENAdar lOkam vAzhmAdhi yAnai
     theerAdha kAdhal ...... siRandha mArbA

dhEvAdhi kUdu mUvAdhi mUvar
     dhEvAdhi dhEvargaL ...... thambirAnE.

......... Meaning .........

kANAdha dhUra neeNAdha vAri: The sea is stretching beyond the reach of the eyes, and the waves are making never-ending noise;

kAdhAra vAram: and the din is killing her.

adhanpinAlE kAlALum vELum: Following suit is Manmathan (Love God) with the southerly breeze as his chariot.

AlAla nAthar kAlAl nilAvum: Then there is the moon which was trampled under His feet by SivA* who consumed the poison coming out of the milky ocean.

munindhu bUmEl nANAna thOgai nUlAdai sOra: All these angrily conspire against her; on this earth, this poor girl, looking like a shy peahen, is standing alone in her tattered cotton saree.

nAdOrgaL Esa azhindhu: The scandal-mongering of the women of the world is destroying her.

thAnE nAnA pavAdha mElAga Aga: She herself is the centre of verbal abuses from all over.

nAdORum vAdi mayangalAmO: Why should she suffer physically everyday (due to Your separation from her)?

sONAchalEsa: Oh, Lord of SONAchalam (thiruvaNNAmalai)!

pUNAra needu thOLARum ARum iLangu nAthA: You have adorned Your twelve broad shoulders with kadamba garlands, Oh Leader!

thOlAdha veera: You are the warrior who has never known defeat!

vElAla dAdha sUrALan mALa veguNda kOvE: Oh mighty King, with Your spear You angrily destroyed the powerful but immoral asura, SUran!

sENAdar lOkam vAzhmAdhi yAnai: DEvayAnai, the damsel who is worshipped by all DEvAs in heaven,

theerAdha kAdhal siRandha mArbA: embraced Your glorious chest with unending love!

dhEvAdhi kUdu mUvAdhi mUvar: The Trinity of BrahmA, Vishnu and SivA, who are cherished by all DEvAs,

dhEvAdhi dhEvargaL thambirAnE.: and all IndrAs who are their Leaders combine to worship You, Oh Great One!


* When Dhaksha PrajApathi performed a Yagna (Sacrifice) insulting SivA and DhAkshAyani (PArvathi), the latter two took the form of Veerabhadra and KALi to destroy the Yagna. In that process, the Moon, an invitee, was trampled by SivA under His feet - Siva PurANam.


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God, the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate the separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 411 kANAdha dhUra neeL - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]