பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 259 போரை முயன்று (அந்தப் போரிடும் எண்ணத்தை) அகத்தில் (தனக்குள்ளே) கொண்டு சிறுவனவாய், (கோபிப்பனவாய்), கோபித்துத் தங்குவனவாய்க், களவு எண்ணம், வஞ்சக எண்ணம் கொண்டு சுழன்று திரிவனவாய், தெனன தெந்தனம் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்பும் வண்டை வென்றிடுவனவாய் (வெல்வனவாய்), அதையும் தன் உரு ஒளியால் அடக்குவனவாய், (காம) மயக்கத்தை ஊட்டு வனவாயுள்ள கண்கள் கொண்டு தம்மை அணைகின்ற பேர்வழிகளின் உயிரையும் திருகிப் பறிக்கின்ற (பொது) மகளிரின் வசத்தே பட்டு அழிதலை ஒழிக்க மாட்டேனோ! பொருந்திய தண்டையும் கிண்கிணியும் சிலம்பும் இவை மூன்றும் கல கலன் கலின் கலினென ஒலிக்கும்படி இரண்டு திருவடி மலர்களும் நொந்து நொந்து அடியிட, உருவமும் மிக மாறி - வலிமை பொருந்திய சிங்கம், கரடி, புலி இவை உறைகின்ற (வசிக்கின்ற) செழுவிய தினை விளை புனத்தில் பரண்மேல் இருந்த வேடர் தம் பெண் கொடிதனை (வள்ளியை) உனது ஒப்பற்ற திருவுளத்தில் விரும்பி (அவள்) அருகில் (சமீபத்திற்) சென்று சேர்ந்து அவளுடைய சிறிய இரு பாத தாமரையிற் பணிந்து பலவிதமான ஆடல்களில் மிகவும் நெஞ்சு (மனம்) மருட்சி பூண்டு அவளை மகிழ்ச்சியுடன் அணைந்தவனே! தேவர் கூட்டங்கள் (விண்ணுலகிற்) குடியேற, நொடிப்போதில் அசுரர் கூட்டங்கள் பொடிபட்டழியும்படிப் போர்செய்து அண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமாளே! (மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ) 553. கண்ணுக்கு எட்டாத துாரம் (பரந்ததாய்), (நீள்நாதம்) பெரிய ஒலிகொண்டதாய் உள்ள கடலின் கொல்வது போலச் செயப்படும் ஆடம்பரமும், அதன் பின்பாக