(அதுநிகழ்ந் துழியக)
அதுநிகழ்ந் துழியகன்பதி அவுணர் கள்ஒரு சில்லோர்
கதுமெனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட
நுதிகொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவலுற்றார்
பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும். ......
1(காவல் மன்னவன்)
காவல் மன்னவன் இறந்தனன் எனுமுரை கன்னத்துள்
மேவு மெல்லை யில்அசனி ஏறுண்ட வெம்பணியேபோல்
தேவி யாகிய பதுமகோ மளையெனுந் திருமங்கை
ஆவி நீங்கினள் தலையளி ஆகிய ததுவன்றோ. ......
2(எவ்வெ வர்க்கும்மே)
எவ்வெ வர்க்கும்மே லாகிய அவுணர்கோற் கில்லாகி
அவ்வி டத்துறை துணைவியர் வயிறலைத் தழுங்குற்று
வெவ்வ ழற்பெருங் குண்டமொன் றாக்கியே விளிவுற்ற
தெய்வ தப்புனை வன்மகள் யாக்கைமுன் செலஉய்த்தார். ......
3(மான்கி ளர்ந்தன)
மான்கி ளர்ந்தன*
1 அரிமதர் மழைக்கண்மெல் லியரெல்லாம்
வான்கி ளர்ந்தெழு கின்றதோர் மாபெருங் கனலூடே
கான்கி ளர்ந்திட மலர்தருந் தாமரைக் கானத்திற்
தேன்கி ளர்ந்துதம் மினத்தொடும் புகுந்தெனச் செல்லுற்றார். ......
4(செல்லல் போதுமென்)
செல்லல் போதுமென் றொழிந்திட அரற்றினோர் செந்தீயில்
செல்லல் போதுநாள் மாலையும் அங்கியிற் சேர்ந்தோங்கும்
அல்லல் போதுமுன் நின்றிடு நிசியெலாம் அகன்றென்ன
அல்லல் போதுமா நகர்த்திரு ஏகினள் அதுகாலை. ......
5(இந்த வாறிவர் அங்கி)
இந்த வாறிவர் அங்கியுள் மாண்டனர் இதுநிற்கத்
தந்தை பட்டதுஞ் சேவலும் மஞ்ஞையுந் தானாகிக்
கந்த வேள்புடை வந்ததுங் கண்டனன் கலங்குற்றுப்
புந்தி நொந்துநின் றிரணியன் வானிடைப் புலம்புற்றான். ......
6வேறு(நன்றென் பதை)
நன்றென் பதைஉணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே
பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே
என்றுன்னை முன்போல் இருந்திடநான் காண்பதுவே. ......
7(அன்புடையன் கொல்)
அன்புடையன் கொல்லென் றயலா ரெடுத்துரைப்பத்
துன்புடையேன் போலத் துயரா அயர்கின்றேன்
என்புடையே முன்னர் எனதுயிர்கொண் டேகினனால்
நின்புடையே நின்று நெடும்பழியின் நீங்காதேன். ......
8(மாற்றார் வலிகண்டு)
மாற்றார் வலிகண்டு மற்றுன்னை வன்செருவில்
போற்றா தொளித்த பொறியிலியேன் தன்முன்னந்
தோற்றாமல் எங்கொளித்தாய் சொல்லாய் சுதன்போலக்
கூற்றான வனைஇன்னுங் கூடமனங் கொள்ளுதியோ. ......
9(கையார் அழலேந்து)
கையார் அழலேந்துங் கண்ணுதலோன் தந்தவரம்
மெய்யாம் ஒருகாலும் வீடாய்அஃ தெல்லாம்
பொய்யாகும் வண்ணம் புதல்வனென வந்துதித்தோன்
ஐயா உனக்கோர் அருங்கூற்றம் ஆயினனே. ......
10(நில்லா உடலை)
நில்லா உடலை நிலையா மெனக்கருதிப்
பல்லா ருங்கண்டு பழிக்கும் படிஉனக்குஞ்
சொல்லா தகன்றேன்நீ துஞ்சியபின் வந்தனனால்
நல்லார் களில்தேரின் நானே தலைஅன்றோ. ......
11(அத்திர நேர்கூறும்)
அத்திர நேர்கூறும் அவுணர் தமக்குள்மிகக்
குத்திர னேயாகுங் கொடியேன்நீ துஞ்சியபின்
மித்திரனே போன்றிரங்கி மீண்டேன் உனக்கென்னைப்
புத்திர னேயென்கை புவிக்குப் பொறையன்றோ. ......
12(ஆழியான் வேதன்)
ஆழியான் வேதன் அமரர்க் கிறைமுதலோர்
வாழியா யென்று வழுத்தியிட வைகியநீ
பூழியார் மேனிப் புராரிசிறு வன்தேரில்
கோழியாய் நின்று விலாவொடியக் கூவுதியோ. ......
13(ஓகையால் அண்ட)
ஓகையால் அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச்
சேகையாய் மல்குந் திருத்தாள்கொண் டுற்றிடுநீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாலோ. ......
14(மேற்றான் விளையும்)
மேற்றான் விளையும் இஃதென்றே வினயமுடன்
ஆற்றான் மொழிந்தேன் அதுசிறிதுங் கேட்டிலையே
மாற்றான் எனவந்த மைந்தனுடன் போர்செய்தே
தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ. ......
15(மாறுற்றி டாத்தொல்)
மாறுற்றி டாத்தொல் வடிவந்தனை இழந்து
வேறுற்ற புள்வடிவாய் மேவினாய் ஆங்கதனால்
ஈறுற் றனைஅன்றே என்செய்கை செய்வதற்கும்
பேறுற் றிலன்வாளா பேணினேன் இவ்வுயிரே. ......
16(பிள்ளைப் பிறைபு)
பிள்ளைப் பிறைபுனைந்த பிஞ்ஞகன்றன் காதலனைப்
புள்ளிக் கலாபப் பொறிமயிலாய்ப் போற்றுமெல்லை
எள்ளற் பொருட்டா லியான்முன்னு ரைத்தவற்றை
உள்ளத் திடைஎந்தாய் உன்னுதியோ உன்னாயோ. ......
17(பொங்குற்ற சீற்றம்)
பொங்குற்ற சீற்றம் பொரும்போர் இகலுள்ளந்
தங்குற்ற மானஞ் சயமகந்தை வன்மையெலாம்
அங்குற்ற நின்னை அடைந்ததிலை அவ்வனைத்தும்
எங்குற்ற தையா இயம்பாய் எனக்கதுவே. ......
18(என்று கனகன் இரங்கி)
என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்
நின்று தளர்ந்து நெடிதுயிர்த்துப் பூதரெனைத்
தின்று சினந்தீர்வர் தெரியினெனச் சிந்தைசெய்து
துன்றுதிரை வேலையிடைத் தொன்மைபோற் புக்கனனே. ......
19(புக்க கனகன் புலர்)
புக்க கனகன் புலர்ந்து புகரோன்பால்
அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்குந்
தக்க துணைவர்க்குந் தாயர்க்கும் ஏனையர்க்கும்
மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே. ......
20(தாக்கிச் சமர்மலை)
தாக்கிச் சமர்மலைந்த தானவர்க்குச் செய்பரிசே
தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்தென்றே
ஆக்கத் தினைவெறுத்தே ஆதிப் பிரானையுள்ளே
நோக்கிக் கதியடைவான் நோற்றொருசார் உற்றனனே. ......
21ஆகத் திருவிருத்தம் - 7824