Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 41  சாகாது எனையே
 
Kandhar Anuboothi sAgAdhu enaiyE with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 41 ... சாகாது, எனையே

(காலனிடத்திலிருந்து எனைக் காப்பாற்று)

சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.

......... பதவுரை .........

வாகா ... அழகனே,

முருகா ... முருகப் பெருமானே,

மயில் வாகனனே ... மயிலின் மீது வரும் பெருமானே,

யோகா ... யோகீசனே,

சிவஞான உபதேசிகனே ... சிவ ஞானத்தை பக்குவப்பட்ட
ஆன்மாக்களுக்கு உபதேசம் செய்பவனே.

நமனார் கலகம் செயும் நாள் ... யமன் வந்து என் உயிரை
பறித்துக்கொண்டு போகும் அந்தக் கடைசி நாளில்,

சாகாது ... அடியேன் இறந்து போகாதபடி,

எனை சரணங்களிலே காகா ... அடியேனை உமது திருவடி
நிழலிலே தங்கும்படி காத்தருளும்.

......... பொழிப்புரை .........

யோகாச்சாரியனே, சிவ ஞானத்தை உபதேசித்த குருவே, முருகனே,
மயிலில் ஆரோகணிப்பவனே, எமன் வந்து என் உயிரைக்
கொண்டுபோக முயலும்போது அடியேனைக் காத்து, உனது பாதார
விந்தங்களில் நித்திய வாழ்வு பெற அருளுக.

......... விளக்கவுரை .........

யோகா என்பதற்கு மூன்று வாகையான பொருள் கூறலாம்.

   யோகத்திற்கு ஆதாரநிலையாக இருப்பது குண்டலினி. முருகனே
குண்டலினி சக்தியாக இருக்கிறதை கந்த சஷ்டி கவசத்தில்
குண்டலியானி சிவ குரு வருக .. ' என்கிற அடியில் பார்க்கலாம்.

   இரண்டாவது பொருள், முருகனே சித்தர்களுக்கு உபதேசம்
செய்ததினால் அவனே யோகாச்சார்ய மூர்த்தியுமாவான்.

   மூன்றாவதாக, யோகம் என்றால் எல்லா நலங்களையும்
கொண்டவன் என்று பொருள். முருகன் யோகக்காரன் என்பதை
உல்லாச .. ' எனத் தொடங்கும் அநுபூதியில், (பாடல் 2)

   .. உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோத ..

... எனக் கூறுகிறார்.

சிவனுக்கு உபதேசம் செய்த அதே ஞான வார்த்தைகளை தனக்கும்
உபதேசம் செய்து அருள் என முருகனிடம் அதையே பெற்றார்
என்பதற்கு கந்தர் அலங்காரத்திலும் திருப்புகழிலும் பல
ஆதாரங்கள் உள்ளன.

மார்க்கண்டேயருக்காக எமனை ஓட்டியது கந்தசாமியிடம் பெற்ற
ஞான உபதேசம் என்கிற தனி வாள் என்கிறார்.

   .. எம படரை மோது வுரையிலுப தேச வாளை
   எனது பகை தீர நீயும் அருள்வாயே

... என 'ஒருவழிபடாது' எனத் தொடங்கும் சோம நாதன் மடம்
திருப்புகழில் கூறுகிறார். (பாடல் 824). இந்த ஞான உபதேசம்
என்கிற வாளைப் பெற்றதால் சாகா வரமும் பெற்று விட்டேன் என
மார்தட்டுகிறார்.

நித்திய வாழ்வு என்பது சாகைக்கும் மீண்டும் பிறக்கைக்கும்
அப்பாற்பட்ட வாழ்வு. 'சிவ சாயுச்யத்தைக் கொடுத்து என்னைக்
காப்பாற்று' என்பது முதல் பிரார்த்தனை. 'எமன் வரும்போது மயில்
வாகனத்தில் வந்து என்னைக் காப்பாற்று' என்பது இரண்டாவது
பிரார்த்தனை. கருத்துரையாக இப்பாட்டில் அருணகிரியார் வேண்டுவது,

எல்லா யோகங்களை அடைந்தவனாயும் எனக்கு சிவ ஞானத்தை
உபதேசித்த குருவாக இருக்கும் நீ எனக்கு சாகா வரம் தந்து, உன்
சரணங்களாகிய சாயுச்சிய நிலையை அருள வேண்டும். மேலும்
காலன் எனது உயிர் கொள வரின், நீ மயிலின் மீது வந்து தோன்றி
எமனிடம், இவன் என் அடியவன். இவனை உன் உலகத்திற்கு
கூட்டிச் செல்ல வேண்டாம். இவன் இறவான் பிறவான்.
இவனை விட்டு விடு. இவனை நான் என்னோடு அழைத்துக்
கொள்வேன் என்று கூற வேண்டும்.

   .. அந்த மறலியோடு உகந்த மனிதன் நமது அன்பன் ..

... (திருச்செந்தூர் திருப்புகழ், பாடல் 63 - 'தந்த பசிதனை').

   .. தொடாய் மறலியே நி என்ற சொலாகியது
   னா வருங் கொல் சொல் ..

... என்ற விராலிமலை திருப்புகழ் அடிகளை நோக்கவும். (பாடல் 579 - 'கொடாதவனை').
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.681 
 WIKI_urai Song number: 41 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.28mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.53mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 41 sAgAdhu enaiyE




   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]