திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 824 ஒருவழிபடாது (சோமநாதன்மடம்) Thiruppugazh 824 oruvazhipadAdhu (sOmanAdhanmadam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தான தனதனன தான தான தனதனன தான தான ...... தனதான ......... பாடல் ......... ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு முழலுமநு ராக மோக ...... அநுபோகம் உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக் கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர மெனமொழியும் வீசு பாச ...... கனகோப எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன் அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன் அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும் முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ முகரசல ராசி வேக ...... முனிவோனே மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஒருவழிபடாது ... ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயை யிருவினை விடாது ... மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், நாளும் உழலும் ... தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற அநுராக மோக அநுபோகம் ... காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, உடலுமுயிர் தானுமாய் ... என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, உனுணர்விலொரு காலி ராத ... நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத உளமுநெகிழ்வாகு மாறு ... என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக ... அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் தீரமெனமொழியும் ... தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், வீசு பாச கனகோப எமபடரை ... பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோது மோன வுரையில் ... மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான உப தேச வாளை ... ஞானோபதேசம் என்ற வாளை எனதுபகை தீர நீயும் அருள்வாயே ... எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை ... தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை அடைவு தவறாது பேணும் அறிவாளன் ... ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், அமணர்குல காலனாகும் ... சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அரியதவ ராஜராஜன் ... அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக ... இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, பொரு சூரர் சேனை முறிய ... போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வட மேரு வீழ ... வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், முகரசல ராசி வேக முனிவோனே ... சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும் ... உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே. ... அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே. |
* திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.993 pg 2.994 pg 2.995 pg 2.996 WIKI_urai Song number: 828 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 824 - oruvazhipadAdhu (sOmanAdhamadam) oruvazhi padAdhu mAyai iruvinai vidAdhu nALum uzhalum anurAga mOga ...... anubOgam udalum uyir thAnu mAyun uNarvil orukAl irAdha uLamu negizh vAgumARu ...... adiyEnuk iravu pagal pOna nyAna parama sivayOga dheeram ena mozhiyum veesu pAsa ...... gana kOba emapadarai mOdhu mOna uraiyil upadhEsa vALai enadhu pagai theera neeyum ...... aruLvAyE arivai oru bAgam Ana aruNagirinAthar pUjai adaivu thavaRAdhu pENum ...... aRivALan amaNar kulakAlan Agum ariya thava rAja rAjan avani pugazh sOmanAthan ...... madamEvum muruga poru sUrar sEnai muRiya vada mEru veezha mukara jalarAsi vEga ...... munivOnE mozhiyum adiyArgaL kOdikuRai karudhi nAlum vERu muniya aRiyAdha dhEvar ...... perumALE. ......... Meaning ......... oruvazhi padAdhu mAyai iruvinai vidAdhu: My mind could not go steady in one track because of delusions and the after-effects of my good and bad deeds nALum uzhalum anurAga mOga anubOgam: which made me roam about daily, I was indulging in carnal pleasures. udalum uyir thAnu mAy: I was thinking only about my body and my life un uNarvil orukAl irAdha: without even acknowledging Your presence at any time! uLamu negizh vAgumARu adiyEnuk: Please make my mind lose its rigidity and thaw to the point of melting and realising iravu pagal pOna nyAna parama sivayOga: that the Knowledge of Supreme SivA, who surpasses day and night, dheeramena mozhiyum: is the only source of my strength; veesu pAsa gana kOba emapadarai mOdhu: and that the only power that can thrash the angry messengers of Yaman (Death-God) when they come to throw the rope of bondage (PAsakkayiRu) to take my life away, mOna uraiyil upadhEsa vALai: is the silent, speechless, preaching of Yours which acts like a sword enadhu pagai theera neeyum aruLvAyE: to destroy, both my inner and outer enemies. You must grant me that sword! arivai oru bAgam Ana aruNagirinAthar pUjai: The worship (pUjAs) to Lord AruNagirinAthar (SivA), who has PArvathi on the left side of His body, adaivu thavaRAdhu pENum aRivALan: is made thoroughly everyday by this wise man very religiously; amaNar kulakAlan Agum ariya thava rAja rAjan: he is a staunch opponent of ChamaNas (anti-saivites) and is himself a great king having performed many saivite penances; avani pugazh sOmanAthan madamEvum muruga: and he is the world-famous SOmanAthan*. You happily reside in the special shrine that was built by him, Oh MurugA! poru sUrar sEnai muRiya: The asuras who came to fight in the battlefield were all killed; vada mEru veezha: the Northern Mount MEru was shattered, and it collapsed; mukara jalarAsi vEga munivOnE: and the ocean, with conch shells, was devastated when You showed Your rage! mozhiyum adiyArgaL kOdikuRai karudhi nAlum: Even when Your devotees implore You with a million complaints, vERu muniya aRiyAdha dhEvar perumALE.: You are never known to lose Your temper with them, Oh Great One! |
* There was this great soul SOmanAthan in 14th century AD in PuththUr who was known to be an ardent devotee of ArunAchaleswarar -SivA- of ThiruvaNNAmalai. He built a shrine for Murugan in the heart of PuththUr which is named after him, as SOmanAthanmadam. PuththUr is in AraNi Taluk of North Arcot District. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |