பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 435 வலிமை அழிய வேலைச் செலுத்தின திருக்கரத்தாய் போற்றி! (கரதலத்தில்) கையில், கபாலம் ஏந்தியுள்ள குரு-சிவனுக்கும் வித்தனே-ஞான (உபதேசப்) பண்டிதனாய் நின்றவனே போற்றி! பெருமைவாய்ந்த குறமாது அணையும் திருப்புயங்களை உடையவனே போற்றி! பெருஞ்செல்வப் பொருளாம். பிரமனும் அறியாத விரத தகூதிணாமூர்த்தியே (உபதேச மூர்த்தியே) பிற சமயங்களை (சமண-புத்த மதங்களை) அழிக்கவந்த சிங்கமே தவச் செயலால் கிடைக்கும் (சுகத்தனே) சுகப்பெருமானே! பெரியமடம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் சுகப்பொருளே! யோகியர்தம் பெருமாளே! (நீ திகூைடி தரவேணும்) சோமநாதன் மடம் 828. ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல் மாயைகளும் இருவினைகளும் என்னை விடாமல், நாள்தோறும் அலைச்சல் தருகின்ற காமலீலை மோக அனுபோகத்திற் பட்டு உடலும் உயிருமே (எண்ணமதாய்), உன் உணர்ச்சி (நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி) ஒரு காலும் இல்லாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசியும்படி, அடியேனுக்கு இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகமே திரத்தைத் தைரியத்தைத்) தருவது என மொழிந்து காட்டுவதும், வீசப்படுவதான பாசக்கயிற்றைக் கொண்ட பெருத்த கோபம் உள்ளவர்களான (434ஆம் பக்கத் தொடர்ச்சி). Xமாயையின் வன்மை - பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயட் பெருங்கடலை யரித்துத் தின்பீர்" "ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் றொருவீர் வேண்டீர்" (அப்பர்-6.27.1, 2) O இரவு பகல் போன ஞானம் பாட்டு 303-பக்கம் 250-கீழ்க்குறிப்பு