திருப்புகழ் 579 கொடாதவனை  (விராலிமலை)
Thiruppugazh 579 kodAdhavanai  (virAlimalai)
Thiruppugazh - 579 kodAdhavanai - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
     தனாதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
     குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
     எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
     சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல்

கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
     கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
     சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா

நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
     நபோமணி சமான துங்க ...... வடிவேலா

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
     பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான்

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
     விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொடாதவனையே புகழ்ந்து ... தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து

குபேரனெனவே மொழிந்து ... அவனைக் குபேரன் என்று கூறி,

குலாவி யவமே திரிந்து ... அவனுடன் கூடிக் குலாவி வீணாகத்
திரிந்து,

புவிமீதே எடாதசுமையே சுமந்து ... இந்தப் பூமியில் தாங்கமுடியாத
குடும்பச் சுமையைத் தாங்கி,

எணாதகலியால் மெலிந்து ... நினைக்கவும் முடியாத கொடுமை
நிறைந்த கலிபுருஷனால் வாடி,

எலாவறுமை தீர ... எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு

அன்றுனருள்பேணேன் ... அந்நாளில் உனது திருவருளை
விரும்பாது காலம் கழித்தேன்.

சுடாத தனமான கொங்கைகளால் ... தீயில் சுடாத பசும்பொன்
போன்ற மார்புடைய பெண்களிடம்

இதயமே மயங்கி ... என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி,

சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் ... சுகத்தைத் தரக்கூடிய வழியில்
ஒழுக்கத்துடன் நான் நடக்காமல்,

கெடாத தவமே மறைந்து ... கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து
போக,

கிலேசமதுவே மிகுந்து ... துன்பமே மிகவும் பெருகி,

கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன் ... வலிமை இல்லாத
உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன்

தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது ... யமனே, நீ
இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது

உன் நா வருங்கொல் சொல் ... உனது நாவிலிருந்து வருமோ?
அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக.

ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா ... ஏழு உலகங்களையும்
பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே,

நடாதசுழி மூல விந்து ... நட்டுவைக்கப் படாத சுழிமுனை,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின்

நள் ஆவி விளை ஞான நம்ப ... நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும்
ஞான மூர்த்தியே*,

நபோமணி சமான துங்க வடிவேலா ... சூரியனுக்குச் சமானமான
ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே,

படாதகுளிர் சோலை ... வெயில் படாத குளிர்ந்த சோலைகள்

அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து ... ஆகாயம் வரை ஓங்கி
வளர்ந்து

பசேலெனவ மே தழைந்து தினமேதான் ... பச்சைப் பசேல் என்ற
நிறத்துடன் தழைந்து நாள்தோறும்

விடாதுமழை மாரி சிந்த ... விடாமல் மழை பொழிவதால்

அநேகமலர் வாவி பொங்கு ... பல மலர்கள் நிறைந்த தடாகங்கள்
சூழ்ந்துள்ள

விராலிமலை மீது உகந்த பெருமாளே. ... விராலிமலை** மீது
விரும்பி வாழும் பெருமாளே.


* ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட
சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி
சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.


ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்மேல்வயிறுஇருதயம்கண்டம்புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினிநீர்காற்றுஆகாயம்மனம்


வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)ம(கரம்)சி(கரம்)வ(கரம்)ய(கரம்)


தலம்

திருவாரூர்


திருவானைக்காதிரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்திருக்காளத்திகாசி
(வாரணாசி)

திருக்கயிலை
கடவுள்

விநாயகர்


பிரமன்திருமால்ருத்திரன்மகேசுரன்சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்
** விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.895  pg 1.896 
 WIKI_urai Song number: 361 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 579 - kodAdhavanai (virAlimalai)

kodAdhavanaiyE pugazhndhu kubEranenavE mozhindhu
     kulAvi avamE thirindhu ...... buvimeedhE

edAdha sumaiyE sumandhu eNAdha kaliyAl melindhu
     elA vaRumai theera andrun ...... aruLpENEn

sudAdha thanamAna kOngaigaLAl idhayamE mayangi
     sugAdharama dhAy ozhungil ...... ozhugAmal

kedAdha thavamE maRaindhu kilEsamadhuvE migundhu
     kilAdha udalAvi nondhu ...... madiyAmun

thodAymaRaliyE niyendra solAgiyadhu nAva runkol
     solEzhulagam eenum ambai ...... aruLbAlA

nadAdhasuzhi mUla vindhu naLAviviLai nyAna namba
     nabOmaNi samAna thunga ...... vadivElA

padAdhakuLir sOlai aNdam aLAvi uyarvAy vaLarndhu
     pasElenavumE thazhaindhu ...... dhinamEthAn

vidAdhumazhi mAri sindha anEgamalar vAvi pongu
     virAlimalai meedhu gandha ...... perumALE.

......... Meaning .........

kodAdhavanaiyE pugazhndhu: I used to praise a miser who had never given charity,

kubEranenavE mozhindhu: calling him the greatest giver like KubEran;

kulAvi avamE thirindhu: and I kept on flattering him, wandering with him in vain!

buvimeedhE edAdha sumaiyE sumandhu: In this world, I undertook the heavy burden of my family.

eNAdha kaliyAl melindhu: I suffered unimaginable miseries and was run down in health.

elA vaRumai theera andrun aruLpENEn: At that time, I never sought Your grace to rid myself of all my poverty.

sudAdha thanamAna kOngaigaLAl idhayamE mayangi: My mind simply reeled under delusion thinking about the golden bosoms of women.

sugAdharama dhAy ozhungil ozhugAmal: I never had character nor healthy habits.

kedAdha thavamE maRaindhu: Unspoiled effects of meditation disappeared completely.

kilEsamadhuvE migundhu: Only misery kept on multiplying.

kilAdha udalAvi nondhu madiyAmun: Before my feeble body and miserable soul die in this world,

thodAymaRaliyE niyendra solAgiyadhu nAva runkolsol: will You kindly instruct Yaman, Death-God, not to touch me and to leave me alone? Will that command ever come from Your mouth? Please tell me.

Ezhulagam eenum ambai aruLbAlA: You are the Son of PArvathi, Divine Mother, who created the seven worlds!

nadAdhasuzhi mUla vindhu naLAviviLai nyAna namba: You are the embodiment of Knowledge in Whom Life thrives amidst NAdham (Sivam), Bindhu (Sakthi) and six KuNdalini chakrAs* starting from MUlAdhAram, none of which was implanted by anyone other than You!)

nabOmaNi samAna thunga vadivElA: Your pure Spear sparkles like the Sun!

padAdhakuLir sOlai aNdam aLAvi uyarvAy vaLarndhu: The shady and cool groves have sky-high trees;

pasElenavumE thazhaindhu: and the trees are fertile and fully grown

dhinamEthAn vidAdhumazhi mAri sindha: as it rains continuously everyday

anEgamalar vAvi pongu: resulting in overflowing ponds full of flowers in

virAlimalai meedhu gandha perumALE.: VirAlimali**, which is Your favourite abode, Oh Great One!


* The six chakrAs of KuNdalini are:

MUlAdhAram, SwAdhishtAnam, MaNipUragam, AnAgatham, Visuththi and AagnyA. Amidst these ChakrAs, it is Murugan who is luminous as a Flame of Knowledge.


The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnammaNipUragamanAgathamvisudhdhiAgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-buttonUpper bellyHeartThroatBetween the
eyebrows

Over
the skullElement

Earth


FireWaterAirSkyMind


Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


namasivaya


Temple

ThiruvArUr


ThiruvAnaikkAThiru
aNNAmalai


ChidhambaramThirukkALaththiVaranAsi
(kAsi)

Mt. KailAshDeity

VinAyagar


BrahmAVishnuRUdhranMahEswaranSathAsivan


Siva-Sakthi
Union** VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 579 kodAdhavanai - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]