திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி (52 - 101 செய்யுட்கள்) Sri AruNagirinAthar's Kandhar AnubUdhi (verses 52 - 101) |
52. காணா விழியும் (சலக்கரை பெற) காணா விழியுங் கருதா மனமும் வீணாய் விடமுன் விதியோ விதியோ பூணாள் குறமின் புனமும் வனமும் நாணா துநடந் திடுநா யகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
52. kANA vizhiyung karudhA manamum veeNAi vidamun vidhiyO vidhiyO pUNAL kuRamin punamum vanamum nANA dhunadan thidunA yaganE. |
53. ஊணே பொருளா (இழந்ததைப் பெற) ஊணே பொருளா யுழலுற் றடியேன் வீணே கெடமுன் விதியோ விதியோ பூணே யிமையோர் புகழே மிகயான் சேணே பெறவேல் விடுதே சிகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.53mb to download |
53. UNE poruLA yuzhaluR RadiyEn veeNE kedamun vidhiyO vidhiyO pUNE yimaiyOr pugazhE migayAn sENE peRavEl vidudhE siganE. |
54. கழுவார் அயில்வேல் (நோய் தீர) கழுவா ரயில்வேல் கருணைக் கடலின் முழுகார் குறுகார் முளரிக் கைக்கொண் டொழுகார் வினையூ டுழல்வா ரவரோ அழுகார் தொழுநோ யதிபா தகரே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
54. kazhuvA rayilvEl karuNaik kadalin muzhugAr kuRugAr muLarik kaikkoN dozhugAr vinaiyU duzhalvA ravarO azhugAr thozhunO yadhipA thagarE. |
55. விண்ணார் பதமும் (மோக்ஷ சாதனம் பெற) விண்ணார் பதமும் விரிநீர் புடைசூழ் மண்ணார் பதமும் மகழேன் மகிழேன் தண்ணா ரமுதே சயிலப் பகையே கண்ணா ரமுதே கனியைப் பெறினே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.48mb to download |
55. viNNAr padhamum virineer pudaisUzh maNNAr padhamum magazhEn magizhEn thaNNA ramudhE sayilap pagaiyE kaNNA ramudhE kaniyaip peRinE. |
56. உனையே யலதோர் (உச்சாடனஞ் செய்ய) உனையே யலதோர் பரமுண் டெனவே நினையே னெனையூழ் வினைநீ டுமதோ கனையேழ் கடல்போல் வருகார் சமணர் முனையே தெறுசண் முகவே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
56. unaiyE yaladhOr paramuN denavE niniyE nenaiyUzh vinainee dumadhO kanaiyEzh kadalpOl varugAr samaNar munaiyE dheRusaN mugavE lavanE. |
57. இரவும் பகலும் (சத்துருவைச் சங்கரிக்க) இரவும் பகலுந் துதிசெய் திருதாள் பரவும் பரிசே பரிசின் றருள்வாய் கரவுண் டெழுசூர் களையக் கதிர்போல் விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.46mb to download |
57. iravum pagalun thudhisei thiruthAL paravum parisE parisin RaruLvAi karavuN dezhusUr kaLaiyak kadhirpOl viravunj sudarvEl vidusE vaganE. |
58. இலகுந் துடி (புகழ் பெற) இலகுந் துடிநே ரிடையார் விழிகூ ரலகம் பெனவே யறியா தழிகோ கலகந் தருசூர் கதறப் பொருதே ழுலகம் புகழ்பெற் றிடுமோ தயனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.47mb to download |
58. ilagun thudinE ridaiyAr vizhikU ralagam penavE yaRiyA dhazhigO kalagan tharusUr kadhaRap porudhE zhulagam pugazhpeR RidumO dhayanE. |
59.. மாதோ மலமாயை (உலகநடை அறிய) மாதோ மலமா யைமயக் கவருஞ் சூதோ வெனமெய் துணியா வெனையின் றேதோ விருள்செய் துநிறைந் திடுவார் தீதோ டவருள் சிவதே சிகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.50mb to download |
59. mAdhO malamA yaimayak kavarunj sUdhO venamei thuNiyA venaiyin REdhO viruLsei dhuniRain dhiduvAr theedhO davaruL sivadhE siganE. |
60. களவும் படிறும் (தேர்ந்து கோள்ள) களவும் படிறுங் கதமும் படுமென் னளவுங் கதிர்கொண் டருள்சேர்ந் திடுமோ இளகுங் குறமின் னிருதோள் முலையும் புளகம் பரவப் புணர்வே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.51mb to download |
60. kaLavum padiRung kadhamum padumen naLavung kadhirkoN daruLsErn dhidumO iLagung kuRamin nirudhOL mulaiyum puLagam paravap puNarvE lavanE. |
61. வாழைக் கனி (தேசம் செழிக்க) வாழைக் கனிமா மாதுரச் சுளையே ஏழைக் கரிதென் றிடுவா ருளரோ பாழைப் பயிற்செய் திடுசிற் பரையின் பேழைப் பொருளா கியவே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
61. vAzhaik kanimA mAdhurach chuLaiyE Ezhaik karidhen RiduvA ruLarO pAzhaip payiRsei dhidusiR paraiyin pEzhaip poruLA kiyavE lavanE. |
62.. சதிகொண்ட (செங்கோல் செலுத்த) சதிகொண் டமடந் தையர்தம் மயலிற் குதிகொண் டமனத் தனெனக் குறியேல் மதிகொண் டநுதற் குறமங் கைகுயந் துதிகொண் டுமணந் தருள் தூயவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
62. sadhikoN damadan dhaiyartham mayaliR kudhikoN damanath thanenak kuRiyEl madhikoN danudhaR kuRamang kaiguyan thudhikoN dumaNan dharuL thUyavanE. |
63. தாயே எனை (செங்கோல் நடக்க) தாயே யெனையா டனிவே லரசே காயே பொருளாய் கனிகை விடுமோ பேயே னிடையென் பெறவந் தெளிதாய் நீயே மறவா நெறிதந் ததுவே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
63. thAyE yenaiyA danivE larasE kAyE poruLAi kanigai vidumO pEyE nidaiyen peRavan dheLidhAi neeyE maRavA neRithan dhadhuvE. |
64. சின்னஞ் சிறியேன் (நகரி சோதிக்க) சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும் பொன்னம் பெரியோர் பிழைசெய் குவரோ கன்னங் கரியோன் மருகா கழறத் தன்னந் தனியென் றனையாண் டவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
64. sinnanj siRiyEn sidhaivE seyinum ponnam periyOr pizhaisei guvarO kannang kariyOn marugA kazhaRath thannan thaniyen RanaiyAN davanE. |
65.. துடிபட்ட மடந்தையர் (படை வெல்ல) துடிபட் டமடந் தையர்சூ றையிலே குடிபட் டிடுமென் குறைகட் டறுமோ வெடிபட் டெழுசூர் கிளைவே ரொடுசென் றடிபட் டிடவென் றமரும் பதியே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.42mb to download |
65. thudipat tamadan dhaiyarsU RaiyilE kudipat tidumen kuRaikat taRUmO vedipat tezhusUr kiLaivE rodusen Radipat tidaven Ramarum padhiyE. |
66.. கல்லேய் மனமும் (எதிரி முறிய) கல்லேய் மனமுங் கணையேய் விழியும் வில்லேய் நுதலும் பெறுமெல் லியர்வாய்ச் சொல்லே பதமாய்த் துடிபட் டழிய வல்லே னலன்யான் மயில்வா கனனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.51mb to download |
66. kallEi manamung kaNaiyEi vizhiyum villEi nudhalum peRumel liyarvAich chollE padhamAith thudipat dazhiya vallE nalanyAn mayilvA gananE. |
67. கலை கற்கினும் (கொலை களவு வஞ்சம்தீர) கலைகற் கினுமென் கவிபா டினுமென் நிலைகற் கினுமென் னினைவந் துணராக் கொலைகற் றிடுவோர் கொடுவஞ் சகமா மலைகட் டறவென் றருள்வாய் குகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
67. kalaikaR kinumen kavipA dinumen nilaigaR kinumen ninaivan dhuNarAk kolaigaR RiduvOr koduvanj chagamA malaigat taRaven RaruLvAi guhanE. |
68. சனகாதியர் (அபசாரம் வரமலிருக்க) சனகா தியருக் கரியாய் தமியா யெனகா ரணமா கவிரும் பினைநீ கனகா சலவில் லிகளிக் கவரு மனகா வலமா வமரர் பதியே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.49mb to download |
68. sanagA dhiyaruk karivAi thamiyA yenakA raNamA kavirum pinainee kanagA salavil ligaLik kavaru manakA valamA vamarar padhiyE. |
69. கல்லேனயலார் (அற்பரை நீங்க) கல்லே னயலார் கவியைப் பொருளாய்ப் புல்லே னவர்வாழ் வுபுரிந் தருள்வாய் வல்லே யினிவந் தருளா யணியா நில்லே னிறைநெஞ் சொடுவே லரசே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
69. kallE nayalAr kaviyaip poruLAip pullE navarvAzh vupurin dharuLvAi vallE yinivan dharuLA yaNiyA nillE niRainenj choduvE larasE. |
70. மஞ்சைப் புரையார் (மறுதெய்வந் தொழாதிருக்க) மஞ்சைப் புரையார் மதிதோன் றுதலால் பஞ்சைப் பயில்தே வரொடிம் பர்களி னெஞ்சைப் பிரியாய் நிகழ்மா மதியின் பிஞ்சைப் புனையும் பெருமான் மகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.49mb to download |
70. manjjaip puraiyAr madhithOn RudhalAl panjjaip payildhE varodim pargaLi nenjjaip piriyAi nigazhmA madhiyin pinjjaip punaiyum perumAn mahanE. |
71. விதிவந் தனை (விதிப்படி பணிவிடை செய்ய) விதிவந் தனைசெய் விமலன் கழலே கதியென் றடைவார் கடனா வதுவே பதிகண் பணியோ டழிநல் குரவும் மதிசஞ் சலமும் மண்ணாய் விடுமே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
71. vidhivan dhanaisei vimalan kazhalE gadhiyen RadaivAr kadanA vadhuvE padhikaN paNiyO dazhinal guravum madhisanj chalamum maNNAi vidumE. |
72. என்னே ரமுநின் (குருவுக்குப் பணிவிடை செய்ய) என்னே ரமுநின் னருதாண் மலரைப் பொன்னே யெனயான் புனையப் பெறுமோ அன்னே யமுதே யயில்வே லரசே கொன்னே பிறவிக் குறைபெற் றிடினே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
72. ennE ramunin naruthAN malaraip ponnE yenayAn punaiyap peRumO annE yamudhE yayilvE larasE konnE piRavik kuRaipER RidinE. |
73. அருளைத் தரு (குருவுக்கு விதிப்படி பணிவிடை செய்ய) அருளைத் தருநின் னடியிற் பணியார் மருளைச் சிதையார் மதிகெட் டவர்தாம் குருளைத் தசையிற் குருவா வினவும் பொருளைத் தெளியப் புகறே சிகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
73. aruLaith tharunin nadiyiR paNiyAr maruLaich sidhaiyAr madhiket tavarthAm kuruLaith thasaiyiR guruvA vinavum poruLaith theLiyap pugaRE siganE. |
74. தொண்டாகிய (தொண்டராக) தொண்டா கியநந் துயர்தீ ருமருந் துண்டா கியுமென் றுலைவாய் மனனே வண்டார் குழல்வள் ளிமணந் தருளும் தண்டா யுதவேள் சரணந் துதியே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
74. thoNdA giyanan thuyarthee rumarun thuNdA giyumen RulaivAi mananE vaNdAr kuzalvaL LimaNan dharuLum thaNdA yudhavEL saraNan thudhiyE. |
75. அழியா நிலை (கிருபையால் பதம்பெற) அழியா நிலைதந் தருள்சே வலனே விழியா லுணர்வார் விதமே புகல்வாய் பழியார் புகழார் பழிநண் பிகழா ரொழியா ரொழியா ருலகியா வையுமே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.42mb to download |
75. azhiyA nilaithan dharuLsE valanE vizhiyA luNarvAr vidhamE pugalvAi pazhiyAr pugazhAr pazhinaN bigazhA rozhiyA rozhiyA rulagiyA vaiyumE. |
76. துனிநாளும் விடாது (தெய்வ நீதியாக) துனிநா ளும்விடா துதொடர்ந் தபல னினிநா னணுகா மையியம் பினனால் பனிநாண் மதிசூ டிபணிந் துதொழும் தனிநா யகனா கியசண் முகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.61mb to download |
76. thuninA LumvidA dhuthodarn thapala nininA naNugA maiyiyam binanAl paninAN madhisU dipaNin dhuthozhum thaninA yahanA giyasaN muhanE. |
77. ஞானந் தனை (ஞானம் பெற) ஞானந் தனைநின் றுநடத் தவிடா மோனந் தனையென் றுமொழிந் திடுமோ ஆனந் தநடத் தனளித் தருளும் மானந் தனிவேல் மயில்வா கனனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
77. njAnan thanainin Runadath thavidA mOnan dhanaiyen Rumozhin dhidumO Aanan dhanadath thanaLith tharuLum mAnan thanivEl mayilvA hananE. |
78. மதமுஞ் சினமும் (பரமார்த்த மடைய) மதமுஞ் சினமும் வளருந் தருவே சதமென் றுணருஞ் சனனுக் கெளிதோ கதமுந் தியருள் கனிவித் திடுவேல் பதமுஞ் சுரமும் பதமே பெறலே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
78. madhamunj chinamum vaLarun dharuvE sadhamen RuNarunj chananuk keLidhO kadhamun dhiyaruL kanivith thiduvEl padhamunj churamum padhamE peRalE. |
79. அய்யா முடல் (பஞ்சபூதங்களை அறிய) அய்யா முடலூண் மயமா யுளதால் அய்யா றாறு மறிவித் தருள்வாய் செய்யா முருகா திகழ்வே லரசே அய்யா குமரா அருளா கரனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.46mb to download |
79. aiyA mudalUN mayamA yuLadhAl aiyA RaRu maRivith tharuLvAi seiyA murugA thigazhvE larasE aiyA kumarA aruLA garanE. |
80.. நவியென் றிடு (குருவாக) நவியென் றிடுகண் மடவார் நனிகேள் செவியென் றயில்வேள் புகழ்சென் றிலதோ கவியென் றவன்வார் கழல்பெற் றிலதோ ரவியென் றவன்வாழ் புவியன் றியதே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.52mb to download |
80. naviyen RidukaN madavAr nanikEL seviyen RayilvEL pugazhsen RiladhO kaviyen RavanvAr kazhalpeR RiladhO raviyen RavanvAzh puviyan RiyadhE. |
81. பெரியோ ரெனினும் (தானே குருவா யிருக்க) பெரியோ ரெனினும் புலையோ ரெனினுஞ் சிறியோ ரெனினுந் தெளிவோ ரவரோ குறியோ ரெனினுங் குருவா வருள்வா னெறியோ டொழுகும் நிலைபெற் றிடினே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
81. periyO reninum pulaiyO reninunj chiriyO reninun theLivO ravarO kuRiyO reninung guruvA varuLvA neRiyO dozhugum nilaipeR RidinE. |
82. பக்திக் கயலே (பக்தி செய்ய) பக்திக் கயலே னனிநின் பதமுஞ் சித்திக் கயலே னெனறிண் ணமதே புத்திக் கடலே பொருவே லரசே முத்திக் கனியே முனிபுங் கவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.39mb to download |
82. bakthik kayalE naninin padhamunj chiththik kayalE nenaRiN NamadhE pudhthik kadalE poruvE larasE muththik kaniyE munipung gavanE. |
83. பேயா கிலு (மகா தேசிகனாக) பேயா கிலுநன் றதிலும் பிறிதென் றேயா தனைவந் தடிமைத் தொழில்கொண் டோயா தெனைநீ யொழியத் தகுமோ வாயா ரமுதே மயில்வா கனனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
83. pEyA gilunan Radhilum piRidhen REyA thanaivan dhadimaith thozhilkoN dOyA dhenainee yozhiyath thagumO vAyA ramudhE mayilvA hananE. |
84. மிகவுங் கொடியேன் (கடவுள் துணையாயிருக்க) மிகவுங் கொடியேன் விதிகுன் றிடவந் திகமும் பரமும் பெறவென் றிசைவாய் சுகமுஞ் சுகமுந் தொடர்வேல் கொடுமுச் சகமுந் தனிகாத் தருள்சண் முகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.47mb to download |
84. migavung kodiyEn vidhikun Ridavan thigamum paramum peRaven RisaivAi sugamunj chugamun thodarvEl kodumuch chagamun thanigAth tharuLsaN muhanE. |
85. நசையன் பிலர் (கடவுளை ஏவல்கொள்ள) நசையன் பிலர்பா னயவா தொழியின் வசையுண் டெனுமவ் வழிநின் றருள்வாய் விசையம் பெறுசூர் வெருவப் பொருதெண் டிசையும் புகழத் திகழ்வே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
85. nasaiyan bilarpA nayavA dhozhiyin vasaiyuN denumav vazhinin RaruLvAi visaiyam peRusUr veruvap porudheN disaiyum pugazhath thigazhvE lavanE. |
86. உருகற் பகமென் (கற்பகத்தரு பெற) உருகற் பகமென் றுனையே யடைவே னிறுகற் பகைவற் கிதமோ துவனோ தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண் டறுகட் பணியன் தருபுத் திரனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
86. urukaR pagamen RunaiyE yadaivE niRugaR pagaivaR kithamO dhuvanO theRugaR chilaikoN deyilseR RidupUN daRugat paNiyan tharuputh thiranE. |
87.. கள்ளம் படு (கவடுதீர, சுவாமி பார்யாயிருக்க) கள்ளம் படுகட் கடையார் கடைதே ருள்ளம் படலென் றகலக் களைவாய் பள்ளம் படுநீ ரெனவே பரிவின் வெள்ளம் படுநல் வழிவே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
87. kaLLam padugat kadaiyAr kadaidhE ruLLam padalen Ragalak kaLaivAi paLLam padunee renavE parivin veLLam padunal vazhivE lavanE. |
88.. வள்ளைக் குழை (பெண்ணாசை தீர) வள்ளைக் குழைமங் கையர்சிங் கியிலே கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ வெள்ளைத் தனிமால் விடையன் புகழும் பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.39mb to download |
88. vaLLaik kuzhaimang gaiyarsing giyilE koLLaip padumen kuRainee rumadhO veLLaith thanimAl vidaiyan pugazhum piLLaip perumA LenumpeR RiyanE. |
89. வளையுஞ் சகமாயை (தன்னையடுத்தோர் மாயை யகல) வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந் துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே வளைகொண்ட பிரான் மருகா வடுசூர் களையுஞ் சினவெங் கதிர்வே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
89. vaLaiyunj chagamA yaimayak kilvizhun dhuLaiyun thuyarin numuNarn dhilayE vaLaikoN pirAn marugA vadusUr kaLaiyunj chinaveng gadhirvE lavanE. |
90. பண்டே தொடர் (பழவினை நீக்க) பண்டே தொடர்பற் றொடுசுற் றமெனும் வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ கண்டே குறமங் கைதனைக் களவில் கொண்டே கடிதே கியகொற் றவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.42mb to download |
90. paNdE thodarpaR RodusuR Ramenum veNdE raimagizhn thuvizhith thidavO kaNdE kuRamang gaidhanaik kaLavil koNdE kadidhE giyakoR RavanE. |
91. பொன்னா வல் (சர்வமும் நன்றாயிருக்க) பொன்னா வல்கெடப் பொழியும் புகழோ ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ துன்னார் கிளைவே ரறவே தொடுவேல் மன்னா பொதுவாய் மழையும் பெயுமே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
91. ponnA valkedap pozhiyum pugazhO rinnA riniyA renaveN NuvarO thunnAr kiLaivE raRavE thoduvEl mannA podhuvAi mazhaiyum peyumE. |
92. பொறியும் புலனும் (சர்வமும் மொன்றாய்க் காண) பொறியும் புலனும் புதிதும் முதிதும் குறியுங் குணமுங் குலமுங் குடியும் நெறியும் பரிசொன் றுமிலா நிலையா னறியுந் தரமோ வயில்வே லவனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.50mb to download |
92. poRiyum pulanum pudhidhum mudhidhum kuRiyung guNamung kulamung kudiyum neRiyum parison RumilA nilaiyA naRiyun dharamO vayilvE lavanE. |
93. என்னே ரமதோ (அடைக்கலம் பெற) என்னே ரமதோ தெரியா திறனாம் அன்னே ரமதொன் றாகா தெனமுன் சொன்னேன் மனனே துவலோ துவலோ தன்னேர் குகனற் சலசச் சரணே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.42mb to download |
93. ennE ramadhO theriyA thiranAm annE ramadhon RAgA dhenamun sonnEn mananE thuvalO thuvalO thannEr guhanaR salasach charaNE. |
94. தெரியத் தெரிய (பெரியோராக) தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன் துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ கரிபெற் றிடுமின் கணவா குறமின் பரியப் பெரிதும் பணியுத் தமனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
94. theriyath theriyach cheyaluR Ridumun thuriyap poruLaich cholunA LuLadhO karipeR Ridumin kaNavA kuRamin pariyap peridhum paNiyuth thamanE. |
95. மடிமைப் படினும் (தடுத்தாட்கொள்ள) மடிமைப் படினும் மயலுற் றிடினும் அடிமைக் குரியா ரருள்சே ருவரே குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற் படிமைப் புயலே பரிவா யினியே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
95. madimaip padinum mayaluR Ridinum adimaik kuriyA raruLsE ruvarE kudimaik kiladhOr kodiveR piNaiyiR padimaip puyalE parivA yiniyE. |
96.. வரிவேல் விழி (பாசம் அண்டாமல் வேடங்கொள்ள) வரிவேல் விழியாம் வலுவீ சுமினார் புரிவே ளையிலே பொருதிக் களைவாய் பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த் தெரிவேன் முனைமே லெறிசே வகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
96. varivEl vizhiyAm valuvee suminAr purivE LaiyilE porudhik kaLaivAi parivE danjcUzhn dhadhupO lavuNarth therivEn munaimE leRisE vahanE. |
97. நனவிற் படு (விதியை வெல்ல) நனவிற் படுநல் லுலகத் தனையும் கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ வினவிச் சொலுநா ளுளதோ விதியைச் சினவிச் சிறையிட் டருதே சிகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
97. nanaviR padunal lulagath thanaiyum kanaviR poruLAik karudhA venainee vinavich cholunA LuLadhO vidhiyaich chinavich chiRaiyit tarudhE sihanE. |
98. காடும் மலையும் (சகல பாசமுமற) காடும் மலையுங் கடலும் முருளச் சாடுந் தனிவே லுடையாய் சரணம் ஆடும் மயில்வே லரசே சரணம் பாடும் வரதற் பரனே சரணம். |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
98. kAdum malaiyung kadalum muruLach chAdun thanivE ludaiyAi saraNam Aadum mayilvE larasE saraNam pAdum varadhaR paranE saraNam. |
99.. அனியா யமிதென் (இருவரும் ஒன்றாயிருக்க) அனியா யமிதென் றவரே மடவார் துனியார் பவமுந் துயருங் களைவார் கனியார் முருகன் கழல்பெற் றிடுவா ரினியா ரினியா ரிவருக் கிணையே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
99. aniyA yamidhen RavarE madavAr thuniyAr bavamun thuyarung kaLaivAr kaniyAr murugan kazhalpeR RiduvA riniyA riniyA rivaruk kiNaiyE. |
100. ஆளா யயில்வே (சிவசாயுச்சியம் பெற) ஆளா யயில்வே ளடியிற் பணிவார் கோளாற் பிறரைக் குறிசெய் தழியார் மாளார் சமனால் மறுகார் பகையால் மீளார் வினையால் வெருவா ரவமே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.44mb to download |
100. AaLA yayilvE LadiyiR paNivAr kOLAR piRaRaik kuRisei dhazhiyAr mALAr samanAl maRugAr pagaiyAl meeLAr vinaiyAl veruvA ravamE. |
101. வாழ்வா ருறவாய் (வாழ்த்து) வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந் தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ் சூழ்வார் சடையார் தொழுதே சிகனே. |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
101. vAzhvA ruRavAi magizhvAr palarun thAzhvArk karuLuth thamanee yalaiyO pEzhvA yaravum piRaiveL LiRagunj chUzhvAr sadiyAr thozhudhE sihanE. |
* * * கந்தர் அநுபூதி முற்றிற்று * * * |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |