Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
52-101 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
52-101 verses

Sri Kaumara Chellam
Kandhar AnubUdhi 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்)   PDF வடிவத்தில் 
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio) in PDF format
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  (52 - 101 செய்யுட்கள்) 
 

52.
  காணா விழியும்
(சலக்கரை பெற) MP3 

காணா விழியுங் கருதா மனமும்
வீணாய் விடமுன் விதியோ விதியோ
பூணாள் குறமின் புனமும் வனமும்
நாணா துநடந் திடுநா யகனே.

53.
  ஊணே பொருளா
(இழந்ததைப் பெற)
 MP3 
ஊணே பொருளா யுழலுற் றடியேன்
வீணே கெடமுன் விதியோ விதியோ
பூணே யிமையோர் புகழே மிகயான்
சேணே பெறவேல் விடுதே சிகனே.

54.
  கழுவார் அயில்வேல்
(நோய் தீர)
 MP3 
கழுவா ரயில்வேல் கருணைக் கடலின்
முழுகார் குறுகார் முளரிக் கைக்கொண்
டொழுகார் வினையூ டுழல்வா ரவரோ
அழுகார் தொழுநோ யதிபா தகரே.

55.
  விண்ணார் பதமும்
(மோக்ஷ சாதனம் பெற)
 MP3 
விண்ணார் பதமும் விரிநீர் புடைசூழ்
மண்ணார் பதமும் மகழேன் மகிழேன்
தண்ணா ரமுதே சயிலப் பகையே
கண்ணா ரமுதே கனியைப் பெறினே.

56.
  உனையே யலதோர்
(உச்சாடனஞ் செய்ய)
 MP3 
உனையே யலதோர் பரமுண் டெனவே
நினையே னெனையூழ் வினைநீ டுமதோ
கனையேழ் கடல்போல் வருகார் சமணர்
முனையே தெறுசண் முகவே லவனே.

57.
  இரவும் பகலும்
(சத்துருவைச் சங்கரிக்க)
 MP3 
இரவும் பகலுந் துதிசெய் திருதாள்
பரவும் பரிசே பரிசின் றருள்வாய்
கரவுண் டெழுசூர் களையக் கதிர்போல்
விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே.

58.
  இலகுந் துடி
(புகழ் பெற)
 MP3 
இலகுந் துடிநே ரிடையார் விழிகூ
ரலகம் பெனவே யறியா தழிகோ
கலகந் தருசூர் கதறப் பொருதே
ழுலகம் புகழ்பெற் றிடுமோ தயனே.

59..
  மாதோ மலமாயை
(உலகநடை அறிய)
 MP3 
மாதோ மலமா யைமயக் கவருஞ்
சூதோ வெனமெய் துணியா வெனையின்
றேதோ விருள்செய் துநிறைந் திடுவார்
தீதோ டவருள் சிவதே சிகனே.

60.
  களவும் படிறும்
(தேர்ந்து கோள்ள)
 MP3 
களவும் படிறுங் கதமும் படுமென்
னளவுங் கதிர்கொண் டருள்சேர்ந் திடுமோ
இளகுங் குறமின் னிருதோள் முலையும்
புளகம் பரவப் புணர்வே லவனே.

61.
  வாழைக் கனி
(தேசம் செழிக்க)
 MP3 
வாழைக் கனிமா மாதுரச் சுளையே
ஏழைக் கரிதென் றிடுவா ருளரோ
பாழைப் பயிற்செய் திடுசிற் பரையின்
பேழைப் பொருளா கியவே லவனே.

62..
  சதிகொண்ட
(செங்கோல் செலுத்த)
 MP3 
சதிகொண் டமடந் தையர்தம் மயலிற்
குதிகொண் டமனத் தனெனக் குறியேல்
மதிகொண் டநுதற் குறமங் கைகுயந்
துதிகொண் டுமணந் தருள் தூயவனே.

63.
  தாயே எனை
(செங்கோல் நடக்க)
 MP3 
தாயே யெனையா டனிவே லரசே
காயே பொருளாய் கனிகை விடுமோ
பேயே னிடையென் பெறவந் தெளிதாய்
நீயே மறவா நெறிதந் ததுவே.

64.
  சின்னஞ் சிறியேன்
(நகரி சோதிக்க)
 MP3 
சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும்
பொன்னம் பெரியோர் பிழைசெய் குவரோ
கன்னங் கரியோன் மருகா கழறத்
தன்னந் தனியென் றனையாண் டவனே.

65..
  துடிபட்ட மடந்தையர்
(படை வெல்ல)
 MP3 
துடிபட் டமடந் தையர்சூ றையிலே
குடிபட் டிடுமென் குறைகட் டறுமோ
வெடிபட் டெழுசூர் கிளைவே ரொடுசென்
றடிபட் டிடவென் றமரும் பதியே.

66..
  கல்லேய் மனமும்
(எதிரி முறிய)
 MP3 
கல்லேய் மனமுங் கணையேய் விழியும்
வில்லேய் நுதலும் பெறுமெல் லியர்வாய்ச்
சொல்லே பதமாய்த் துடிபட் டழிய
வல்லே னலன்யான் மயில்வா கனனே.

67.
  கலை கற்கினும்
(கொலை களவு வஞ்சம்தீர)
 MP3 
கலைகற் கினுமென் கவிபா டினுமென்
நிலைகற் கினுமென் னினைவந் துணராக்
கொலைகற் றிடுவோர் கொடுவஞ் சகமா
மலைகட் டறவென் றருள்வாய் குகனே.

68.
  சனகாதியர்
(அபசாரம் வரமலிருக்க)
 MP3 
சனகா தியருக் கரியாய் தமியா
யெனகா ரணமா கவிரும் பினைநீ
கனகா சலவில் லிகளிக் கவரு
மனகா வலமா வமரர் பதியே.

69.
  கல்லேனயலார்
(அற்பரை நீங்க)
 MP3 
கல்லே னயலார் கவியைப் பொருளாய்ப்
புல்லே னவர்வாழ் வுபுரிந் தருள்வாய்
வல்லே யினிவந் தருளா யணியா
நில்லே னிறைநெஞ் சொடுவே லரசே.

70.
  மஞ்சைப் புரையார்
(மறுதெய்வந் தொழாதிருக்க)
 MP3 
மஞ்சைப் புரையார் மதிதோன் றுதலால்
பஞ்சைப் பயில்தே வரொடிம் பர்களி
னெஞ்சைப் பிரியாய் நிகழ்மா மதியின்
பிஞ்சைப் புனையும் பெருமான் மகனே.

71.
  விதிவந் தனை
(விதிப்படி பணிவிடை செய்ய)
 MP3 
விதிவந் தனைசெய் விமலன் கழலே
கதியென் றடைவார் கடனா வதுவே
பதிகண் பணியோ டழிநல் குரவும்
மதிசஞ் சலமும் மண்ணாய் விடுமே.

72.
  என்னே ரமுநின்
(குருவுக்குப் பணிவிடை செய்ய)
 MP3 
என்னே ரமுநின் னருதாண் மலரைப்
பொன்னே யெனயான் புனையப் பெறுமோ
அன்னே யமுதே யயில்வே லரசே
கொன்னே பிறவிக் குறைபெற் றிடினே.

73.
  அருளைத் தரு
(குருவுக்கு விதிப்படி பணிவிடை செய்ய)
 MP3 
அருளைத் தருநின் னடியிற் பணியார்
மருளைச் சிதையார் மதிகெட் டவர்தாம்
குருளத் தசையிற் குருவா வினவும்
பொருளைத் தெளியப் புகறே சிகனே.

74.
  தொண்டாகிய
(தொண்டராக)
 MP3 
தொண்டா கியநந் துயர்தீ ருமருந்
துண்டா கியுமென் றுலைவாய் மனனே
வண்டார் குழல்வள் ளிமணந் தருளும்
தண்டா யுதவேள் சரணந் துதியே.

75.
  அழியா நிலை
(கிருபையால் பதம்பெற)
 MP3 
அழியா நிலைதந் தருள்சே வலனே
விழியா லுணர்வார் விதமே புகல்வாய்
பழியார் புகழார் பழிநண் பிகழா
ரொழியா ரொழியா ருலகியா வையுமே.

76.
  துனிநாளும் விடாது
(தெய்வ நீதியாக)
 MP3 
துனிநா ளும்விடா துதொடர்ந் தபல
னினிநா னணுகா மையியம் பினனால்
பனிநாண் மதிசூ டிபணிந் துதொழும்
தனிநா யகனா கியசண் முகனே.

77.
  ஞானந் தனை
(ஞானம் பெற)
 MP3 
ஞானந் தனைநின் றுநடத் தவிடா
மோனந் தனையென் றுமொழிந் திடுமோ
ஆனந் தநடத் தனளித் தருளும்
மானந் தனிவேல் மயில்வா கனனே.

78.
  மதமுஞ் சினமும்
(பரமார்த்த மடைய)
 MP3 
மதமுஞ் சினமும் வளருந் தருவே
சதமென் றுணருஞ் சனனுக் கெளிதோ
கதமுந் தியருள் கனிவித் திடுவேல்
பதமுஞ் சுரமும் பதமே பெறலே.

79.
  அய்யா முடல்
(பஞ்சபூதங்களை அறிய)
 MP3 
அய்யா முடலூண் மயமா யுளதால்
அய்யா றாறு மறிவித் தருள்வாய்
செய்யா முருகா திகழ்வே லரசே
அய்யா குமரா அருளா கரனே.

80..
  நவியென் றிடு
(குருவாக)
 MP3 
நவியென் றிடுகண் மடவார் நனிகேள்
செவியென் றயில்வேள் புகழ்சென் றிலதோ
கவியென் றவன்வார் கழல்பெற் றிலதோ
ரவியென் றவன்வாழ் புவியன் றியதே.

81.
  பெரியோ ரெனினும்
(தானே குருவா யிருக்க)
 MP3 
பெரியோ ரெனினும் புலையோ ரெனினுஞ்
சிறியோ ரெனினுந் தெளிவோ ரவரோ
குறியோ ரெனினுங் குருவா வருள்வா
னெறியோ டொழுகும் நிலைபெற் றிடினே.

82.
  பக்திக் கயலே
(பக்தி செய்ய)
 MP3 
பக்திக் கயலே னனிநின் பதமுஞ்
சித்திக் கயலே னெனறிண் ணமதே
புத்திக் கடலே பொருவே லரசே
முத்திக் கனியே முனிபுங் கவனே.

83.
  பேயா கிலு
(மகா தேசிகனாக)
 MP3 
பேயா கிலுநன் றதிலும் பிறிதென்
றேயா தனைவந் தடிமைத் தொழில்கொண்
டோயா தெனைநீ யொழியத் தகுமோ
வாயா ரமுதே மயில்வா கனனே.

84.
  மிகவுங் கொடியேன்
(கடவுள் துணையாயிருக்க)
 MP3 
மிகவுங் கொடியேன் விதிகுன் றிடவந்
திகமும் பரமும் பெறவென் றிசைவாய்
சுகமுஞ் சுகமுந் தொடர்வேல் கொடுமுச்
சகமுந் தனிகாத் தருள்சண் முகனே.

85.
  நசையன் பிலர்
(கடவுளை ஏவல்கொள்ள)
 MP3 
நசையன் பிலர்பா னயவா தொழியின்
வசையுண் டெனுமவ் வழிநின் றருள்வாய்
விசையம் பெறுசூர் வெருவப் பொருதெண்
டிசையும் புகழத் திகழ்வே லவனே.

86.
  உருகற் பகமென்
(கற்பகத்தரு பெற)
 MP3 
உருகற் பகமென் றுனையே யடைவே
னிறுகற் பகைவற் கிதமோ துவனோ
தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண்
டறுகட் பணியன் தருபுத் திரனே.

87..
  கள்ளம் படு
(கவடுதீர, சுவாமி பார்யாயிருக்க)
 MP3 
கள்ளம் படுகட் கடையார் கடைதே
ருள்ளம் படலென் றகலக் களைவாய்
பள்ளம் படுநீ ரெனவே பரிவின்
வெள்ளம் படுநல் வழிவே லவனே.

88..
  வள்ளைக் குழை
(பெண்ணாசை தீர)
 MP3 
வள்ளைக் குழைமங் கையர்சிங் கியிலே
கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ
வெள்ளைத் தனிமால் விடையன் புகழும்
பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே.

89.
  வளையுஞ் சகமாயை
(தன்னையடுத்தோர் மாயை யகல)
 MP3 
வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந்
துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே
வளைகொண்ட பிரான் மருகா வடுசூர்
களையுஞ் சினவெங் கதிர்வே லவனே.

90.
  பண்டே தொடர்
(பழவினை நீக்க)
 MP3 
பண்டே தொடர்பற் றொடுசுற் றமெனும்
வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ
கண்டே குறமங் கைதனைக் களவில்
கொண்டே கடிதே கியகொற் றவனே.

91.
  பொன்னா வல்
(சர்வமும் நன்றாயிருக்க)
 MP3 
பொன்னா வல்கெடப் பொழியும் புகழோ
ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ
துன்னார் கிளைவே ரறவே தொடுவேல்
மன்னா பொதுவாய் மழையும் பெயுமே.

92.
  பொறியும் புலனும்
(சர்வமும் மொன்றாய்க் காண)
 MP3 
பொறியும் புலனும் புதிதும் முதிதும்
குறியுங் குணமுங் குலமுங் குடியும்
நெறியும் பரிசொன் றுமிலா நிலையா
னறியுந் தரமோ வயில்வே லவனே.

93.
  என்னே ரமதோ
(அடைக்கலம் பெற)
 MP3 
என்னே ரமதோ தெரியா திறனாம்
அன்னே ரமதொன் றாகா தெனமுன்
சொன்னேன் மனனே துவலோ துவலோ
தன்னேர் குகனற் சலசச் சரணே.

94.
  தெரியத் தெரிய
(பெரியோராக)
 MP3 
தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன்
துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ
கரிபெற் றிடுமின் கணவா குறமின்
பரியப் பெரிதும் பணியுத் தமனே.

95.
  மடிமைப் படினும்
(தடுத்தாட்கொள்ள)
 MP3 
மடிமைப் படினும் மயலுற் றிடினும்
அடிமைக் குரியா ரருள்சே ருவரே
குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற்
படிமைப் புயலே பரிவா யினியே.

96..
  வரிவேல் விழி
(பாசம் அண்டாமல் வேடங்கொள்ள)
 MP3 
வரிவேல் விழியாம் வலுவீ சுமினார்
புரிவே ளையிலே பொருதிக் களைவாய்
பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த்
தெரிவேன் முனைமே லெறிசே வகனே.

97.
  நனவிற் படு
(விதியை வெல்ல)
 MP3 
நனவிற் படுநல் லுலகத் தனையும்
கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ
வினவிச் சொலுநா ளுளதோ விதியைச்
சினவிச் சிறையிட் டருதே சிகனே.

98.
  காடும் மலையும்
(சகல பாசமுமற)
 MP3 
காடும் மலையுங் கடலும் முருளச்
சாடுந் தனிவே லுடையாய் சரணம்
ஆடும் மயில்வே லரசே சரணம்
பாடும் வரதற் பரனே சரணம்.

99..
  அனியா யமிதென்
(இருவரும் ஒன்றாயிருக்க)
 MP3 
அனியா யமிதென் றவரே மடவார்
துனியார் பவமுந் துயருங் களைவார்
கனியார் முருகன் கழல்பெற் றிடுவா
ரினியா ரினியா ரிவருக் கிணையே.

100.
  ஆளா யயில்வே
(சிவசாயுச்சியம் பெற)
 MP3 
ஆளா யயில்வே ளடியிற் பணிவார்
கோளாற் பிறரைக் குறிசெய் தழியார்
மாளார் சமனால் மறுகார் பகையால்
மீளார் வினையால் வெருவா ரவமே.

101.
  வாழ்வா ருறவாய்
(வாழ்த்து)
 MP3 
வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந்
தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ
பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ்
சூழ்வார் சடையார் தொழுதே சிகனே.

* * * கந்தர் அநுபூதி முற்றிற்று * * *
go to top
 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்)   PDF வடிவத்தில் 
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio) in PDF format
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verses 52 to 101




   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]