Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 35  விதி காணு
 
Kandhar Anuboothi vidhi kANu with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 35 ... விதிகாணும்

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

......... பதவுரை .........

மதி ... பிறைச் சந்தரனைப் போன்று,

வாள் நுதல் ... வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய,

வள்ளியை அல்லது ... வள்ளி பிராட்டியைத் தவிர,

பின் துதியா விரதா ... வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு
விரதமாகக் கொண்ட கந்தக் கடவுளே,

சுர பூபதியே ... விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே,

விதி காணும் ... பிரம தேவன் படைத்த,

உடம்பை விடா வினையேன் ... இந்த தேகத்தை விட முடியாத
அடியேன்,

கதி காண ... நல்ல கதியை அடையும் பொருட்டு,

மலர்க் கழல் என்று அருள்வாய் ... தாமரை மலர்கள் போன்ற
உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்?

......... பொழிப்புரை .........

சந்திரன்போல் பிரகாசிக்கும் வதனமுடைய வள்ளியை அன்றி
வேறு எவரையுமே துதிக்காத கொள்கையை உடையவனே,
அண்டர் உலகாதிபதியே, பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட
தேகத்தை விடாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து உழலும்
வினையை உடையவனாகிய யான், மறுபடியும் கருவில்
வந்துவிடாதபடி உயர் கதியை அடைய உனது பாத பங்கயங்களை
எப்போது தந்தருளப் போகிறாய்?

......... விளக்கவுரை .........

   கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதவடி
   களையெத்திடி ராகவகை யதின்மீறிக்
   கருணைப்பிற காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
   கதிபெற்றிட ரானவயை யொழிவேனோ?

... என்கிறது திருவொற்றியூர் திருப்புகழ் ('சொருபப் பிரகாச'
- பாடல் 687).

இருவினையின் பயன் அதைச் செய்தனைச் சென்று அடைவதற்கு
காரணமாகிய நியதியே விதி எனப்படும். கருமங்களைச் செய்து
கொண்டிருக்கும்வரை, பிறப்பும் நீங்காமல் திருப்பத் திருப்ப
வந்துகொண்டேதான் இருக்கும்.

பற்றை விட்டால் அவா நீங்கும். அவா அகன்றால் வினை நீங்கும்.
வினை நீங்கினால் மறு பிறப்பு கிடையாது. தன்னை விட்டு நீங்காத
வள்ளியுடன் சேர்ந்தே முருகன் உயிர்களுக்கு அனுக்ரகம்
செய்கிறான். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கே அந்த அனுக்ரகம்
கிட்டும். ஆதலால் பக்குவம் அடைவதற்கு சரீர அபிமானத்தால்
வரும் இரு வினைகளையும் விட்டுவிட வேண்டும் என்பதையே
இப்பாடலில் சுட்டிக் காட்டுகிறது.

   .. விடுவாய் விடுவாய் வினை யாவையுமே

... என 'கெடுவாயாய் மனனே' எனத் தொடங்கும் அநுபூதியில் (7)
கூறுகிறார்.

பல இடங்களில்,

   .. வள்ளி பதம் பணியும் ..,

   .. வள்ளியின் பொன் அடி மீது நித்த முன்தண்
   முடியானதுற்று உகந்து பணிவோனே ..

போன்ற பிரயோகம் வருவதன் உட்பொருள் என்ன? இறைவன்
தானே விளங்கும்பொழுது பிரம்மமாய் செயலின்றி இருக்கிறான்.
இக் கருத்தை நாமும் பேச்சு வழக்கில், 'அவன் சிவனே என
இருக்கிறான்' என்கிறோம். சக்தியுடன் சேர்ந்து செயல்படும்
பொழுது சலனம் ஏற்படுகிறது. அதன் காரணமாக, சிருஷ்டி,
ஸ்திதி, லயம் முதலிய தொழில்கள் ஆரம்பம் ஆகின்றன. இதே
கருத்தையே ஆதி சங்கரரும் செளந்தரிய லஹரியின் முதல்
சுலோகத்திலேயே, 'சிவ சக்தியாய்' என சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆகையால் முருகன் வள்ளியின் பதம் பணிகிறான், தன்னுடைய
சக்தியின் சன்னிதானத்தில் தொழில் படுகிறான், என்பதே
உட்பொருளாகும்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.674  pg 4.675 
 WIKI_urai Song number: 35 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.27mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.45mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 35 vidhi kANu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]