திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 687 சொருபப் பிரகாச (திருவொற்றியூர்) Thiruppugazh 687 sorubappiragAsa (thiruvotRiyUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதத்தன தானதன தனதத்தன தானதன தனதத்தன தானதன ...... தனதானா ......... பாடல் ......... சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக் கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில் பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சொருபப் பிரகாச விசுவருப ... பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரமாக நிச சுக ... பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, விப்பிர தேச ரச சுப ... அந்தணரின் தேஜை உடையவனே, இன்ப சுபப் பொருளே, மாயா துலியப் பிரகாச ... அழியாத சுத்தப் பிரகாசனே, மத சொலியற்ற ரசா ... மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, சவித தொகை விக்ரம ... பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, மாதர் வயிறிடையூறு கருவிற்பிறவாதபடி ... மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உருவிற்பிரமோத அடிகளை யெத்திடு ... உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் இராகவகை யதின்மீறி ... கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணைப்பிரகாச உன தருளுற்றிட ... கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் ஆசில்சிவ கதிபெற்று இடரானவையை யொழிவேனோ ... குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? குரு குக்குட வார கொடி ... நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, செரு வுக்கிர ஆதப அயில் ... போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை பிடிகைத்தல ஆதி அரி மருகோனே ... பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, குமரப்பிரதாப குக ... குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, சிவசுப்பிர மாமணிய ... மிகத் தூய்மையான பேரொளியோனே, குணமுட்டர் அவாவசுரர் குலகாலா ... குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, திருவொற்றி யுறாமருவு நகரொற்றியுர் ... லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்* வாரிதிரை யருகுற்றிடும் ஆதிசிவனருள்பாலா ... கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள் ... விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் இதயத்திட மேமருவு பெருமாளே. ... நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.653 pg 2.654 pg 2.655 pg 2.656 WIKI_urai Song number: 691 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 687 - sorubap piragAsa (thiruvotRiyUr) sorupap pirakAsa visu varupap piramAga nija suka vibbira thEja rasa ...... subamAyA thuliyap pirakAsa madha soliyatra rasAsa vidha thogai vikrama mAadhar vayiR ...... idai URu karuviR piRavAdhapadi uruviR piramOdha adi gaLai yEththidi rAgavagai ...... adhinmeeRi karuNaip pirakAsa unadh aruLutrida Asil siva gathipetr idarAnavaiyai ...... ozhivEnO kurugukkuda vAra kodi seru uggira Adha payil pidi kaithala Adhi ari ...... marugOnE kumarap pirathApa guha siva subbira mA maNiya guNamuttar avA asurar ...... kulakAlA thiru votri uRAmaruvu nagar otriyur vArithirai arukutridum Adhi sivan ...... aruL bAlA thigazhutridu yOgathava migu mukkiya mAdhavargaL idhayath thidamE maruvu ...... perumALE. ......... Meaning ......... sorupap pirakAsa visu varupa: Oh Luminous One, the entire universe is contained within Your great form! piramAga nija suka: You are beheld as the Brahman offering real happiness to all. vibbira thEja rasa suba: You are radiant with Brahmic glow, and You are sweet and the most auspicious. mAyA thuliyap pirakAsa: Your pure incandescence never gets extinguished. madha soliyatra rasA: You are beyond the reach of religions and are rapturous. savidha thogai vikrama: Your valour is multi-faceted! mAadhar vayiR idai URu karuviR piRavAdhapadi: Bless me so that I am not to enter the womb of any woman! uruviR piramOdha adigaLai yEththidi: Bless me so that I worship Your feet, the most desirable part of Your great form rAgavagai adhinmeeRi: and Bless me to excel in all aspects of music. karuNaip pirakAsa unadh aruLutrida: Oh compassionate and dazzling one, with Your grace, Asil sivagathipetr idarAnavaiyai ozhivEnO: may I attain the unblemished liberation of my soul and get rid of all sufferings? kurugukkuda vAra kodi: You hold in Your hand the staff with the colourful rooster! seru uggira Adhapa ayil: In the battle field, the fierce and dazzling spear pidi kaithala Adhi: is held in Your hand, Oh Lord! ari marugOnE kumarap pirathApa guha: You are the nephew of Vishnu, Oh KumarA! You are famous, Oh GuhA! siva subbira mA maNiya: You are spotlessly pure and effulgent! guNamuttar avA asurar kulakAlA: You are the God of Death for all ravenous demons lacking in character! thiru votri uRAmaruvu nagar otriyur: In ThiruvotRiyur, where Lakshmi, Goddess of Wealth, happily resides, vArithirai arukutridum Adhi sivan aruL bAlA: Lord SivA is seated near the seashore. You are His son! thigazhutridu yOgathava migu mukkiya mAdhavargaL: Devout sages who are notable for their deep yOgAs and intense penance idhayath thidamE maruvu perumALE.: hold You dearly in their hearts, Oh Great One! |
* Thiruvotriyur is 3 miles north of Chennai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |