திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 34 சிங்கார மட |
தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 34 ... சிங்கார (தீநெறியினின்று எனைக் காவாய்) சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. ......... பதவுரை ......... சங்ராம சிகாவல ... போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவரே, சண்முகனே ... ஆறுமுகக் கடவுளே, கிருபாகரனே ... கருணைக்கு இருப்பிடமானவரே, சிங்கார மடைந்தையர் ... அழகிய விலை மாந்தர்களின், தீ நெறி போய் ... தீய வழியில் சென்று, மங்காமல் ... நான் கெட்டுப் போகாமல், எனக்கு வரம் தருவாய் ... அடியேனுக்கு வரம் தந்தருள்வீர். ......... பொழிப்புரை ......... போர் வீரனே, மயில் வாகனனே, ஆறுமுகனே, கங்கா தேவியின் மைந்தனே, கருணா வாரிதியே, அலங்காரத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள பெண்களின் மீது செலுத்தும் காம இச்சையாகிய துன்மார்க்கத்தில் சென்று என் அறிவு மங்கிவிடாதபடி அடியேனுக்கு வரம் கொடு. ......... விளக்கவுரை ......... தீநெறி என்று குறிப்பிடுதல் இங்கு பொது மாதரையே குறிப்பிடுவதாக கொள்ள வேண்டும். அனாத்ம விருத்திகளில் ஒன்றாகிய காமத்தை போர் செய்து வெல்ல வேண்டும் என்பதால் முருகனை 'சங்ராம' என்று அழைக்கிறார். சிற்றின்ப ஆசை விலக்கிய தன் மனதில் சுத்த சித்தி சொரூபமான மயிலில் நீ வர வேண்டும் என வேண்டுகிறார். நம்முடைய புத்தி மாறுபாட்டிற்கு மாயையே காரணம். அந்த மாயையை முருகன் வாகனமாகக் கொண்டிருப்பதால், சிகாவல' என்று அழைக்கிறார். ஆறுமுகத் தத்துவம் எல்லை இல்லா மகிமை உடையது. அது பற்றிய சில குறிப்புகளைப் பார்க்கலாம். 1. கணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம் என்கிற வைதீக ஷண்மதங்களுக்கும் முருகனே அதிஸ்டான தேவதை. அதனால் அவன் ஆறுமுகன். 2. சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், ஜோதிடம், நிருத்தம் என்கிற ஆறு சாஸ்திரங்களுக்கும் முருகனே தலைவன். ஆகவே அவன் ஆறுமுகன். 3. சதாசிவனின் ஐந்து முகங்களுடன் பராசக்தியின் முகமும் சேர்ந்து ஆறுமுகமாகிறது. ஆகையால் முருகன் சிவசக்தி சம்மேளன ரூபன். 4. வர்ணம், கலை, மந்திரம், பதம், தத்துவம், புவனம் என்கிற ஆறு அத்துவாக்களே ஆறு முகங்களாகின்றன. 5. குண்டலிணி சக்தி எழுச்சி அடைந்து மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை என்கிற ஆறு ஆதாரங்களின் வாயிலாக செல்லும்போது எடுக்கும் உருவங்களே முருகனின் ஆறு முகங்களாயின. 6. சர்வக்ஞை, நித்ய திருப்தி, அனாதியோகம், சர்வ சுதந்ரத்வம், அலுப்த சக்தி, அனத தத்வம் என்கின்ற சட் குணங்களே ஆறு முகங்களாயின. பக என்கின்ற சொல்லுக்கு இந்த ஆறு குணங்களேதான் பொருள். ஆகவேதான் ஈஸ்வரனுக்கு 'பகவான்' என்கிற பெயர் வந்தது. 7. இதய குகையில் வசிப்பதால் இறைவனுக்கு குகன் என்கிற பெயர். இதய ஸ்தானம் தகர ஆகாசம் எனப்படும். அனாகதச் சக்கரமும் அதுவே. அது ஆறு கோணங்களை உடையது. அதுவே ஆறு முகங்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.673 pg 4.674 WIKI_urai Song number: 34 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.47mb to download |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |