திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 25 மெய்யே என |
தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 25 ... மெய்யே என (வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? கையோ, அயிலோ, கழலோ முழுதும் செய்யோய், மயில் ஏறிய சேவகனே. ......... பதவுரை ......... கையோ ... திருக்கரங்கள் மட்டுமோ, அயிலோ ... கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ, கழலோ ... திருவடிகள் மட்டுமோ, முழுவதும் செய்யோய் ... திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய சேவகனே ... மயில் ஏறிய மாவீரனே, வெவ்வினை வாழ்வை ... கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை, மெய்யே என உகந்து ... என்றும் நிலையானது என மகிழ்ந்து, ஐயோ ... அந்தோ, அடியோன் அலையத் தகுமோ ... அடியேன் உழலுதல் நீதியோ? ......... பொழிப்புரை ......... திருக்கரங்கள், வேல், திருவடிகள் என மேனி முழுவதும் சிவந்தவனே. மயில் மேல் வரும் உலக ரட்சகனே. வினைப் பயனால் ஏற்பட்ட இவ் உலக வாழ்வை சாஸ்வதம் என்று எண்ணி, அதில் நான் களிப்புடன் திரிந்து உழல்வது என்ன பரிதாபம். ......... விளக்கவுரை ......... முருகனை 'எத்தனை கலாதி' என்கிற திருத்தணிகைத் திருப்புகழில் (பாடல் 247), .. செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே .. என்பார். ஆகமங்களிலும் அவன் நிறம் பால சூர்யப் பிரகாசம், குங்கும வர்ணம், பச்சை வர்ணம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. முருகன் காட்சி கொடுக்கும் பொழுது இந்த ஒளி எல்லா இடங்களிலும் வியாபித்து வருவதை, .. அடர் பவள ஒளி பாய .. ... என்பார் 'சுடரனைய திருமேனி' என்கிற சிதம்பரத் திருப்புகழில் (பாடல் 502), தந்திர சாஸ்திரங்கள் பல நிறங்களுக்கு பல விமர்சனத்தை தந்துள்ளன. பிரம்மத்தை எந்த பாதிப்பும் இல்லாத வெள்ளை என்றும், அந்த பிரம்மத்தினின்று வெளிப்படும் அம்சம் சிவப்பு நிறம் என்றும் கூறுவார்கள். அருவமான பிரம்மத்தின் பிரகாச அம்சம் சிவப்பு நிறமாய் உருவான சிவனாகவும் முருகனாகவும் காட்சி அளிக்கிறது. ஆகையால் உலகம் உய்ய உருக் கொண்ட பிரமத்தின் விமர்சன அம்சமான முருகனைப் பற்றுதலே கதியாகும். இவ்வாழ்வு ஏற்படக் காரணம் நாம் முன் பிறவிகளில் செய்த வினைகளே. வினைகள் மூன்று வகைப்படும். பல பிறவிகளில் சம்பாதித்த மூட்டையே சஞ்சிதம். இதிலிருந்து ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவித்து வருகிறோம். இதுவே பிராப்தம். இந்தப் பிறவியில் பல செயல்களைச் செய்து, புதிய வினைகளைச் சம்பாதிக்கிறோம். இவ்வாறு உயிர்கள் வினைகளை புசிக்க உதவுகின்ற சக்திக்கு திரோதானம் என்று பெயர். இந்த திரோதான சக்திதான் பொய்யான உலக வாழ்க்கையை மெய் என நினைக்கச் செய்கிறது. இவ் உலக வாழ்வுதான் மெய் என நினைக்கும் வரையில், வினை நாசம் ஆகாது. அது திருப்ப திருப்ப பிறவியைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கும். இந்த வினைச் சுழலில் அகப்பட்ட உயிர், ஒரு துரும்புபோல் வருவதும் போவதுமாய் சுழன்று கொண்டேதான் இருக்கும். இதைத்தான் அலைதல் என்று இப்பாட்டில் கூறுகிறார். ஞானமே உருவானவன் கையில் ஞானமதையே வேலாயுதமாக வைத்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட முருகனின் கருணையினால் ஞானிகள் இந்தப் பிறவியிலேயே பற்றை விட்டு, வினைத் தொடர்பு இல்லாமல் செயல்கள் செய்து, ஆகாம்ய வினையை நீக்குகிறார்கள். குருவின் அருளினால் சஞ்சிதம் அழிந்துபோகும். தம் மட்டும் அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆனால் அருணகிரியார் அலங்காரத்தில், .. அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே .. ... என்பதாலும், 'ஆசார வீன', திருநாகேச்சுரம் - திருப்புகழில் (பாடல் 873), .. நாசாதி பிராரத்த துக்க மிக்கவர் மாயா விகாரத்து .. ... என்பதாலும் தத்தையும் முருகன் அருள் இருந்தால் ஒழித்துவிட முடியும் என்று தெரிகிறது. வினை ஓட விடும் கதிர் வேல் என்பதால் வேலைத் தியானம் செய்தால் எல்லா வினைகளும் நசிந்து போகும் என்று உணரலாம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.664 pg 4.665 WIKI_urai Song number: 25 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.49mb to download |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |