திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 502 சுடரனைய திருமேனி (சிதம்பரம்) Thiruppugazh 502 sudaranaiyathirumEni (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான ...... தனதான ......... பாடல் ......... சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சுடரனைய திருமேனி யுடையழகு ... கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும் ... முற்றின ஞான ஸ்வரூபமும், கிரீடம் சூடிய முகங்கள் ஆறும், சுரர் தெரியல் அளிபாட ... தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, மழலைகதி நறைபாய ... அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, துகிர் இதழின் மொழிவேத மணம்வீச ... பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட ... அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, அயில்கரமொடு எழில் தோகை மயிலேறி ... வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியனிரு வினைநீறு பட ... அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, அமரர் இது பூரை அதிசயமென ... தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று அருள்பாட வரவேணும் ... உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட ... நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, மிடறடைய விடம்வாரி யருள்நாதன் ... தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் ... மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகமகிழ அநுபூதி யருள்வோனே ... மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, இடர்கலிகள் பிணியோட எனையுமருள் ... துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா ... குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இனிய முது புலிபாதனுடன் ... இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன், அரவு சதகோடி யிருடியர்கள் ... பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்ஞான பெருமாளே. ... புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே. |
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை 'முதிய முநி' எனக் குறிப்பிட்டார் - தில்லைப் புராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.507 pg 2.508 pg 2.509 pg 2.510 WIKI_urai Song number: 643 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 502 - sudaranaiya thirumEni (chidhambaram) sudaranaiya thirumEni yudaiyazhaku muthugnAna sorupakiri yidamEvu ...... mukamARum surartheriya laLipAda mazhalaikathi naRaipAya thukirithazhin mozhivEtha ...... maNamveesa adArpavaLa voLipAya ariyapari puramAda ayilkaramo dezhilthOkai ...... mayilERi adiyaniru vinaineeRu pada amara rithupUrai athisayame naruLpAda ...... varavENum vidaiparavi ayanmAlo damararmuni kaNamOda midaRadaiya vidamvAri ...... yaruLnAthan minalanaiya idaimAthu idamaruvu kurunAthan mikamakizha anupUthi ...... yaruLvOnE idarkalikaL piNiyOda enaiyumaruL kuRamAthi niNaiyiLanir mulaimArpi ...... naNaimArpA iniyamuthu pulipAtha nudanaravu sathakOdi yirudiyarkaL pukazhgnAna ...... perumALE. ......... Meaning ......... sudaranaiya thirumEni yudaiyazhaku: With the radiant beauty of Your body, muthugnAna sorupakiri yidamEvu mukamARum: the sublime embodiment of knowledge that You are with Your six crowned faces, surartheriya laLipAda: the beetles humming around the garlands offered to You by the DEvAs, mazhalaikathi naRaipAya: the slowly dripping honey drops from those flowers, thukirithazhin mozhivEtha maNamveesa: the fragrance of VEdAs emanating from Your rosy lips, adArpavaLa voLipAya: the illumination around You in coral red colour, ariyapari puramAda: the lilting sounds from Your unique anklets, and ayilkaramodu: the Spear in Your hallowed hand, ezhilthOkai mayilERi: You should come to me mounted on Your lovely peacock! adiyaniru vinaineeRu pada: With Your coming, both my good and bad deeds, should be destroyed! amara rithupUrai athisayame naruLpAda varavENum: Your coming to me should be so awesome that the DEvAs must sing Your praise wondering why such a useless person like me is being showered with grace by You! vidaiparavi ayanmAlo damararmuni kaNamOda: The entire DEvA crowd headed by BrahmA and Vishnu worshipped Nandi, the Sacred Bull, before midaRadaiya vidamvAri yaruLnAthan: surrendering to Lord SivA, who bestowed His grace on them by swallowing the fierce poison and holding it in His throat; minalanaiya idaimAthu idamaruvu kurunAthan: that SivA, who as DhakshinamUrthi, held PArvathi, whose waist is narrow and bright as the lightning, on His left side; mikamakizha anupUthi yaruLvOnE: was enthralled to listen to Your preaching of the VEdic wisdom. idarkalikaL piNiyOda enaiyumaruL: You must also kindly condescend to bestow Your grace on me so that my miseries, evil effects of planets and all diseases are driven away! kuRamAthi niNaiyiLanir mulaimArpi naNaimArpA: You have a broad chest that embraces the large bosoms of VaLLi, the damsel of the KuRavAs! iniyamuthu pulipAtha nudanaravu sathakOdi yirudiyarkaL: The ecstatic old* sage, VyAkrapAthar, along with Sage Pathanjali in a serpent's form and a hundred million other sages pukazhgnAna perumALE.: are all praising You, an embodiment of wisdom, Oh Great One! |
* VyAkrapAthar, having tigers' paws, was the foremost sage in Chidhambaram worshipping the cosmic dance of NadarAjA. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |