திருப்புகழ் 247 எத்தனை கலாதி  (திருத்தணிகை)
Thiruppugazh 247 eththanaikalAdhi  (thiruththaNigai)
Thiruppugazh - 247 eththanaikalAdhi - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
     தத்ததன தான தத்தம் ...... தனதான

......... பாடல் .........

எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
     கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான

எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
     கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்

பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
     பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான

பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
     பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய்

தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
     தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ

தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
     தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி

சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
     திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச்

செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
     செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை ... எத்தனை கலகச்
சண்டைகள், எத்தனை சித்து வேலைகள்,

வியாதி பித்து அங்கெத்தனை ... அங்கு எத்தனை வியாதிகள்,
எத்தனை பைத்தியக்காரச் செயல்கள்,

சர அசரத்தின செடமான ... அசையும் உயிராகவும்,
அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை,

எத்தனைவிடாவெருட்டு ... நீங்காத அச்சம் தரும் செயல்கள்
எத்தனை,

அங்கெத்தனைவல் ஆண்மை ... அங்கே வலிமையுடைய
ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை,

பற்றங்கு எத்தனைகொல் ... அங்கே ஆசைகள் எத்தனை
விதமானவையோ,

ஊனை நித்தம் பசியாறல் ... புலால் உண்டு தினந்தோறும்
பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை,

பித்தனையன் நான் அகட்டு உண்டு ... பித்துப்பிடித்தவன்
போன்ற யான் வயிற்றில் உண்டு

இப்படிகெ டாமல் முத்தம் பெற்றிட ... இவ்வாறு கெட்டுப்
போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட,

நினா சனத்தின் செயலான பெற்றியும் ... உனது அடியார்
கூட்டத்தின் செயல்களான தன்மையும்,

ஒராது நிற்கும் ... யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும்,

தத்த குரு ... பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான

தார நிற்கும் ... ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும்,

பெத்தமும் ஒராது நிற்கும் கழல்தாராய் ... பாச பந்தங்களால்
அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க.

தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
     தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
     தத்தனத னான னுர்த்துஞ்
... (இதே) தாளத்தில் ஒலிக்கும்

சதபேரி ... நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன்,

சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் ...
சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும்,
இறைவனின் அடியார்களும்,

திக்குகளொர் நாலிரட்டின் கிரிசூழ ... எட்டுத் திக்குகளிலும்
மலையை வலம் வந்து பணிய,

செக்கண் அரிமா கனைக்குஞ் சித்தணிகை வாழ் ... சிவந்த
கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை
மலையில் வாழ்பவனே,

சிவப்பின் செக்கர்நிறமாயிருக்கும் பெருமாளே. ... செக்கச்
சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.663  pg 1.664  pg 1.665  pg 1.666 
 WIKI_urai Song number: 275 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 247 - eththanai kalAdhi (thiruththaNigai)

eththanai kalAdhi chiththam eththanai viyAdhi piththam
     eththnai charA charaththin ...... jedamAna

eththanai vidA veruL angeththanai valANmai patrang
     eththanai kol Unai niththam ...... pasiyARal

piththanaiya nAna kattuNd ippadi kedAmal muththam
     petrida ninA janaththin ...... seyalAna

petriyum orAdhu niRkun thaththa gurudhAra niRkum
     peththamum orAdhu niRkung ...... kazhal thArAy

thaththana thanAtha naththan thaththana thanAtha naththan
     thaththana thanAtha naththan ...... thagudheedhO

thakkugugu dUdu duttuN dikku gugu deegu thaththan
     thaththana thanAna nurththunj ...... satha bEri

siththargaL nidAdhar veRpin kotravar suvAmi bakthar
     dhikkugaLor nAl irattin ...... giri sUzha

chekkaN arimA kanaikkum sithhaNigai vAzh sivappin
     chekkar niRamA irukkum ...... perumALE.

......... Meaning .........

eththanai kalAdhi chiththam: How many riotous fights! How many tricks and juggleries!

eththanai viyAdhi piththam: How many diseases and how much madness!

eththnai charA charaththin jedamAna: How many births, both animate and inanimate!

eththanai vidA veruL: How many scary acts!

angeththanai valANmai: Among them, how many bold and manly deeds!

patrang eththanai kol: How many types of desires!

Unai niththam pasiyARal: How many pieces of meat to satiate my hunger everyday!

piththanaiya nAn akattuNd ippadi kedAmal: I do not want to keep on filling my stomach like a crazy man.

muththam petrida: I want to be liberated from birth. For that liberation,

ninA janaththin seyalAna petriyum: I must know the nature of actions of the multitudes of Your devotees;

orAdhu niRkum: (the goal) which stands alone and is inconceivable;

thaththa gurudhAra niRkum: (the goal) which is an expansive bright luminous principle, OM, the PraNava ManthrA,

peththamum orAdhu niRkung: (the goal) cannot be comprehended by attachments and desires;

kazhal thArAy: and that goal is Your two feet, which kindly grant me.

thaththana thanAtha naththan thaththana thanAtha naththan
thaththana thanAtha naththan thagudheedhO
thakkugugu dUdu duttuN dikku gugu deegu thaththan
haththana thanAna:
(The sound of the same meter)

nurththunj satha bEri: Hundreds of drums were sounding to the above meter while

siththargaL nidAdhar veRpin kotravar suvAmi bakthar: many sages (siddhas), hunters, kings and devotees

dhikkugaLor nAl irattin giri sUzha: coming from all eight directions were marching around the holy mountain in homage.

chekkaN arimA kanaikkum sithhaNigai: Lions with red eyes are roaring in the Great Hill of Knowledge, ThiruththaNigai,

vAzh sivappin chekkar niRamA irukkum perumALE.: which is Your abode, Oh Lord, with a bright red complexion, You are the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 247 eththanai kalAdhi - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]