பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகை திருப்புகழ் உரை 193 தக்கு குகு டுடு டுட்டுண். தத்தன தனான என்று ஒலிக்கும் நூற்றுக்கணக்கான முரச வாத்தியங்களின் ஒலியுடன் சித்தர்களும், (வெற்பின் நிடாதர்) மலைவேடர்களும், அரசர்களும், கடவுளடியார்களும், திக்குகள் ஒர் நாலிரட்டின் (எட்டுத் திக்குகளிலும்) மலையை வலம் வர, o சிவந்த கண்களையுடைய சிங்கம் ஒலி செய்யும் ஞானத் தணிகை (மலையில்) வாழ்கின்ற பெருமாளே! மிகச் சிவந்த நிறத்துடன் விளங்கும் பெருமாளே! (கழல் தாராய்) 276 எனக்கு வந்த குட்டநோய், வினைக்கு ஈடாக மிக்கு வரும் பித்தம், கொதிப்பைத் தரும் வெப்பு நோய் (சுரம்), வலி சொல்ல முடியாவண்ணம், மாறுபட்டு வேதனை தந்து நின்று வருத்தும் முயலகன் என்னும் இழுப்பு (முசல்வலிப்பு) நோய், நடுக்கந் தரும் நோய், இருமல் என்று சொல்லப்படும் இந்நோய்களுடனே (ஊடாடி) வீடுகள், பெண்கள், மக்கள் - என்பவற்றை நினைந்து நல்ல அறிவானது மயக்கம் அடைந்து, (நான்) இறவாமல் (நீ) தோன்றி இன்று எனக்கு மரகதம் போலப் (பச்சை ஒளி வீசும்) மயில்மீது வந்து முத்திதர வேண்டுகின்றேன். உன்னை வணங்கும் பக்தர் எல்லாரும் சுகத்துடன் வாழ, (அவர்களுக்கு அருள் பாலிக்கும்) வழியில் நிற்கும் வெற்றி பெறும் கூரிய வேலனே!