திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 24 கூர் வேல் விழி |
தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 24 ... கூர்வேல் விழி (மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல, புரந்தர பூபதியே. ......... பதவுரை ......... சூர் வேரொடு ... சூரபத்மன் குலம் முழுவதையும், குன்று தொளைத்த ... அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் சென்ற நெடும் போர் வேல ... கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை திருக்கையில் தாங்கிக் கொண்டிருப்பவனே, புரந்தர பூபதியே ... இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே, கூர் வேல் விழி ... கூரிய வேல் போன்ற கண்களை உடைய, மங்கையர் கொங்கையிலே ... மாதர்களுடைய தனபாரங்களை, சேர்வேன் ... சேர விருப்பங்கொண்ட அடியேன், அருள் சேரவும் எண்ணுமதோ ... உனது திரு அருள் பேற்றை பெற நான் நினைக்க மாட்டேனோ? ......... பொழிப்புரை ......... எனது ஆண்டவனே, நின் திருவருளில் கலக்க வேண்டும் என்கிற ஆசையை மனதால் நினைப்பதற்கும் எனக்குத் தகுதி இல்லையே. ஏனெனில் எனது மனது முழுவதும் காம இச்சை ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிறதே. ......... விளக்கவுரை ......... முருகனின் அருள் கிட்டவில்லையே என்று அவனைக் குறை கூறுமுன் அதைப் பெறுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று நம்மை நாம் தற்சோதனை செய்து பார்க்கவேண்டும். அநுபூதி அடைந்த பின் பாடிய பாட்டா இது? இல்லை நம் குறைகளை எல்லாம் தமதாக ஏற்றுக்கொண்டு, நெஞ்சம் அழுங்கி, முருகனின் கருணையை வேண்டுகிறார் அருணை முனிவர். மங்கையரின் வேல் விழி மயக்கத்தை மாற்றுவதற்கு முருகனின் வேலைத் தியானிக்க வேண்டும். முழு மாயா சொரூபமான கிரவுஞ்ச கிரியை அழித்த அந்த வேல், நமது செக மாயையையும் பொடியாக்கி அழித்துவிடும். எல்லா மயக்கங்களிலும் கொடிதான மாதர் மயக்கம் தீர இறைவனின் அருளே பக்க துணையாக நிற்கும் என்பதை பல பெரியோர்களும் கூறியுள்ளார்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.663 pg 4.664 WIKI_urai Song number: 24 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.55mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |