Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 23  அடியைக் குறியாது
 
Kandhar Anuboothi adiyaik kuRiyAdhu with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 23 ... அடியைக் குறியாது

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.

......... பதவுரை .........

வடி விக்ரம வேல் மகிபா ... கூர்மையும் வலிமையுமுடைய
வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே,

குறமின் கொடியைப் புணரும் ... குறவர் குலத்து வளர்ந்த மின்னல்
கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற,

குண பூதரனே ... குணக் குன்றமே,

அடியைக் குறியாது ... உனது திருவடியைத் தியானிக்காமல்,

அறியாமையினால் ... அறிவின்மையினால்,

முடியக் கெடவோ ... அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ.,

முறையோ முறையோ ... இது நீதியோ? இது நீதியோ?

......... பொழிப்புரை .........

நினது திருவடியையே நான் அடைய வேண்டிய இலக்காகக் கொள்ளாமல்,
அஞ்ஞானத்தில் மூழ்கிப் போவது சரியா? இது நியாயமாகுமா? கூரிய
வெற்றிவேல் பெருமாளே, மின்னல் கொடி பொன்ற வள்ளியைச்
சேருகின்ற குணக்குன்றே.

......... விளக்கவுரை .........

நாம், நம் வாழ்க்கையில் எந்நிலையிலும் என்ன செய்தாலும் அடிப்படை
லட்சியமாக இறைவனின் திருவடியை நினைத்துக் கொள்ளவேண்டும்.
எந்தக் காலத்திலும் மாறாமல் துணையாக நிற்பது அவனுடைய
சேமக் கோமள பாதத் தாமரையே'. அதையே நமது லட்சியப் பொருளாக
வைத்துக்கொண்டால் எதற்கும் அஞ்சாத மனோநிலை கிடைக்கும்.
அவன் திருவடிகளையே குறிக்கோளாக வைத்து எல்லா முயற்சிகளையும்
செய்வதால்தான் அவர்கள் 'அடியார்கள்' எனப்படுகிறார்கள்.

இந்த லட்சியம் இல்லாதவர்களின் வாழ்க்கை எந்தப் பயனுமின்றி
விருதாவிலே அடியோடு கெட்டுவிடும். இத்தகைய முடிவு எனக்கு
வருவது என்னுடைய ஆன்ம சொரூபத்திற்கு பொருந்தாது. அது உன்
கருணைக்கும் தகாது. இதைக் குறிக்கவே 'முறையோ முறையோ' என்று
ஓலமிடுகிறார்.

'அடி' என்பதற்கு ஒரு விஷேசப் பொருளும் கொள்ளலாம். 'அடி'
என்பதற்கு 'ஆதி, மூலம், இறைவன்' என்று பொருள் உண்டு. ஆன்மா
தன்னை அறிவதில்லை. தனக்கு அடியான ஆதியான முதல்வனையும்
அறிவதில்லை. இது 'அவித்தை' எனப்படும். அஞ்ஞானத்தால் ஏற்படுவது
இந்த அவித்தை. இதை மாற்றுவதற்கு நீ ஞான சக்திதரனாக
வரவேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதத்தில் அவனை 'வடி விக்ரம
வேல் மகிபா' என அழைக்கிறார்.

தன் உண்மைச் சொரூபத்தை அறியாமல் 'வேடர்களுடன் இருந்த
வள்ளியை ஆட்கொண்டு, அவளை உன்னுடன் சேர்த்துக்கொண்டு
ஞான வாழ்வு அளித்தவன் நீதானே' என்று அதையும் அவனுக்கு
ஞாபகப்படுத்துகிறார்.

'வல்லி' என்றால் கொடி. அதற்கு தாவிப் படர ஒரு கொழு கொம்பு தேவை.
சுரந்திரமற்ற ஆன்மா இறைவனையே பற்ற வேண்டும். சுருங்கச்
சொன்னால் அஞ்ஞானம் சூழ்ந்த ஆன்மா தனது ஆதாரத்தை உணராது
அழியும் என்பதையும் 'முருகனின் வேலாயுதத்தைச் சொன்னதினால்
அஞ்ஞானத்தை அழியச் செய்து, மெய் ஞானத்தைத் தந்தது' என்பதையும்
மின் கொடியைப் புணரும்' என்பதனால் பக்குவப்பட்ட ஆன்மாவை
அவனே வலிய வந்து ஆட்கொள்ளும் கருணையையும், 'குணபூதரன்'
என்பதினால் முருகனின் அருட் குணங்களாகிய எட்டு குணங்களையும்
கூறுகிறார். அவர்கள் காலபாசத்தை வென்று இருப்பார்கள். இந்த
சூட்சுமத்தை அறியாத கரும மார்க்கிகள் மீண்டும் மீண்டும் பிறந்து
இறந்து உழல்வார்கள்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.662  pg 4.663 
 WIKI_urai Song number: 23 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.27mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.52mb
 to download 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 23 adiyaik kuRiyAdhu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]