Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 100  இடுதலைச் சற்றும்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 100  idudhalaich satRum
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 100 ... இடுதலைச் சற்றும்

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
   கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
      அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
         விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.

......... சொற்பிரிவு .........

இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
   கெடுதல் இலா தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
      அடுதலைச் சாத்தித்த வேலோன் பிறவி அற இச் சிறை
         விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே.

......... பதவுரை .........

வறியவர்க்குத் தருவதைச் சிறிதும் எண்ணாதவனும் அறிவற்றவனுமாகிய
அடியேனை அன்பால் தீமையற்றத் தொண்டர்களுடன் சேர்த்து
அருளியவரே! கிரௌஞ்ச மலையை அழித்து முடித்த வேலாயுதக்
கடவுளின் அருளால், அடியேனின் பிறவித் துன்பம் அற்றுப் போய் இந்த
உடலாகிய சிறைவாசம் முடிவுற்று விடுதலையானேன்; பாசத்தாலும்
வினையாலும் வந்த விலங்கும் விட்டு ஒழிந்தது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.103   pg 4.104 
 WIKI_urai Song number: 100 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 100 - idudhalaich satRum

idudhalaich satRum karudhEnaip pOdham ilEnai anbAl
   kedudhal ilA thoNdaril kUttiyavA! kirounja veRpai
      adudhalaich sAththiththa vElOn piRavi aRa ich chiRai
         vidudhalaippattadhu, vittadhu pAsa vinai vilangkE.

O' Lord, I am the one, who has not only never thought about giving alms to the poor, but also I am an ignorant person; yet, You have most graciously and kindly allowed me to join the company of blameless devotees. You are the lance-bearer, who accomplished the complete annihilation of the krauncha-hill; and by Your grace my suffering due to rebirth has come to an end; I have been set free from this prison-like-body, and the fetters, which bound me, because of my attachment and deeds, are also gone for ever.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 100 - idudhalaich satRum

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]