Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 99  காவிக் கமல
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 99  kAvik kamala
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 99 ... காவிக் கமல

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
   தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
      தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
         பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

......... சொற்பிரிவு .........

காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்தருளாய்!
   தூவிக்குல மயில்வாகனனே துணை ஏதும் இன்றித்
      தாவிப்படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடிபோல்
         பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

......... பதவுரை .........

தேவரீரின் சிவந்த தாமரை மலர் போன்றவையும் கழலுடன் கூடிவையுமான
திருவடிகளுடன் அடியேனைச் சேர்த்துக் காப்பாற்றியருள்வீராக!
இறகுகளுடன் கூடிய மேன்மையான மயிலை வாகனமாக உடையவரே!
உதவி சிறிதும் இல்லாமல் தாவிப் படர்வதற்குக் கொழு கொம்பு இல்லாத
தனித்த கொடியைப் போல பாவியாகிய அடியேனுடைய துணையற்ற
மனமானது தளர்ந்து வாட்டமுற்றுத் துடிக்கின்றது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.103 
 WIKI_urai Song number: 99 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 99 - kAvik kamala

kAvik kamalak kazhaludan sErththu ennaik kAththaruLAi!
   thUvikkula mayilvAgananE thUNai Edhum indRith
      thAvippadarak kozhukombu ilAdha thanikkodipOl
         pAvith thanimanam thaLLAdi vAdip padhaikkindRathE.

O' Lord, please be gracious enough to protect me, so as to enable me to attain Your anklet-adorned lotus-flower-like-Sacred-Feet. You have the magnificent and feathered-peacock as Your vehicle. My sinful and helpless mind is staggering, withering, and quivering like a helpless and lonely vine, which has no supporting pole to climb on.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 99 - kAvik kamala

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]