திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 98 கதிதனை ஒன்றை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 98 gadhithanai ondRai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 98 ... கதிதனை ஒன்றை கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. ......... சொற்பிரிவு ......... கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல்முருகா! நதிதனை அன்ன பொய்வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே. ......... பதவுரை ......... கந்தப்பெருமானே, வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானே! முக்திவீட்டை அடைவதற்குரிய நெறியொன்றையேனும் காண்கின்றேன் இல்லை. ஆற்றுநீர்ப் பெருக்கு போல [நிலையற்ற] பொய்யான உலக வாழ்க்கையில் பற்றுடையவனாகி, நரம்புகளால் கட்டப்பட்ட உடலாகிய மூட்டையைச் சுமந்துகொண்டு துன்புறுமாறு பிறக்கச் செய்த விதியினை நினைத்து உள்ளம் நொந்து நொந்து அடியேனின் மனம் வேதனைப்படுகின்றது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.102 pg 4.103 WIKI_urai Song number: 98 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 98 - gadhithanai ondRai gadhithanai ondRaiyum kANkindRilEn kandhavEl murugA! nadhithanai anna poivAzhvil anbAi narambAl podhindha podhithanaiyum koNdu thiNdAdumARu enaip pOdhavitta vidhithanai nondhunondhu ingkE endRan manam vEgindRathE. O' KandhavElmurugA! I do not see any one [righteous] means of attaining mukthi [salvation]. I am attached to [persons and things of] the illusory life of this world, which is as impermanent as the flow of water in a river. My heart is very much grieved, and my mind is burning in anguish when I think of the fate of having been born to suffer by carrying [as a burden] my bag-like-body, which is tied up by nerves. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |