![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 97 சேலில் திகழ் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 97 sElil thigazh |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 97 ... சேலில் திகழ் சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. ......... சொற்பிரிவு ......... சேலில் திகழ் வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித்து அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ராயுதமும் பணிலமுமே. ......... பதவுரை ......... கெண்டை மீன்கள் நிறைந்து விளங்குகின்ற வயல்களால் சூழப் பெற்ற திருச்செங்கோடு என்னும் திருமலையின்மீது எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானது செழுமையான மயிலானது இனிமையான ஒலியெழுப்பி, ஆதிசேடனுடைய பணா மகுடங்களைத் தாக்குதலால் மிகவும் ஒலியுண்டாகி அப்பணா மகுடங்களிலுள்ள நாகமணிகளின் குவியலும் [ஆதிசேடன்மீது பள்ளிகொண்டு] உலகைக் காத்தருள்கின்ற திருமாலும் [அவர்தம் திருக்கரத்திலுள்ள] திருவாழியும் திருச்சங்கும் மயிலின் திருவடிகளில் கிடப்பனவாயின! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.101 pg 4.102 WIKI_urai Song number: 97 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 97 - sElil thigazh sElil thigazh vayal sengkOdai veRppan sezhungkalabi Aliththu anandhan paNAmudi thAkka adhirndhu adhirndhu kAlil kidappana mANikka rAsiyum kAsiniyaip pAlikkum mAyanum sakrAyudhamum paNilamumE. Lord ThirumurugapperumAn abides on the hill of ThiruchchengkOdu, surrounded by paddy-fields, full of carp-fish. The Lord's graceful vehicle peacock, makes a gleeful [crowing] sound and attacks the hoods of the serpent AdhisEshan, and [as a sequel to the great noise arising thereof] the heap of nAga-gems of the serpent's hoods, as well as the discus and conch of Lord ThirumAl, the protector of the world [reclining on the coils of the serpent AdhisEshan], are lying at the sacred feet of the peacock! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |