பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 сцxiьжВоєї фаху ор 18ஆம் திருமுறை கு-உ)நதி = ஆற்றுப் பெருக்கு "ஆற்றில் பெருக்கானது செல்வம்" - 36. கந்தவேல் முருகா-என்றதன் கருத்து வேல் ஞான சக்தி ஆதலின் அடிய்ேனுக்கு ஞானத்தை அருளி (கந்த என்னும் சொல் சேர்க்கப்படுதல் என்னும் பொருள் படுவதாதலால்) - என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் எனக்குறிப்பதாகும். 99. பிரார்த்தனை -திருவடியைப் பெற காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் 1.தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தணிக்கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. (அந்) தூவிக்..... பதைக்கின்றது;காவிக்..... . காந்தருளாய். (பொ - உ) (தூவி) இறகுகளை உடைய (குல) சிறந்த மயில் வாகன்னே துணை ஒன்றுமே இல்லாமல், தாவிப் படர்வதற்கு ஒரு பிடிப்புக்கு ஒரு கொம்பில்லாத் - தனியான கொடி (தவிப்பது) போல (இந்தப்) பாவியாகிய எனது (தனி) திக்கற்ற மனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றது; ஆதலால் (காவிக் கமலக்சூழலுடன்) செந்நிறமுடைய தாமர்ை (செந்தாமரை) போன்ற உனது திருவடியில் அடியேனைச் சேர்த்து என்னைக் காத்தருள் புரிவாயாக (சு - உ) படர்ந்துபற்ற கொம்பிலாத கொடிபோலத் தவிக்கின்ற என்னை, முருகா! உனருேே சேர்த்துக் காத்தருளுக. (கு.உ) காவிக்கமலம் =செந்தாமரை தூவி-தோகை 1.தூவி நற்பீலி மாமயி லுாருஞ் சுப்பிரமணியன் திருவிசைப்பா-7.3 2 கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன்-திருவாசகம் 6:20, 100. தன் அனுபவம் கூறினது இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற் கெடுதலி லாத் தொண் டரிற்கூட் டியவா கிரெளஞ்சவெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினை விலங்கே