Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 75  படிக்கின்றிலை
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 75  padikkindRilai
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 75 ... படிக்கின்றிலை

படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
   முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
      மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
         நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.

......... சொற்பிரிவு .........

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பார் தாள்
   முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு
      மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
         நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?

......... பதவுரை .........

ஓ, நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின்
திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது
திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில்
சூடிக் கொள்கின்றாயில்லை. [பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை]
'முருகா' என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால்
மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி
அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக
வரும்பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு
அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.80   pg 4.81   pg 4.82 
 WIKI_urai Song number: 75 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 75 - padikkindRilai

padikkindRilai pazhanith thirunAmam, padippAr thAL
   mudikkindRilai, murugA engilai, musiyAmal ittu
      midikkindRilai, paramAnandham mERkkoLa vimmivimmi
         nadikkindRilai, nenjamE thanjam Edhu namakku iniyE?

O' mind, you do not recite the sacred names of ThirumurugapperumAn who abides in Pazhani; you do not pay homage to the sacred feet of devotees, who recite the sacred names of the Lord of Pazhani; you do not call upon the Supreme Being of the world as 'MurugA'; you do not become a poor person merely by giving food to those who ask for alms so that they will not become weak because of hunger; you do not sob and dance in ecstasy to be blessed with eternal bliss. Where else is the refuge of support for us?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 75 - padikkindRilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]