திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 74 அராப்புனை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 74 arAppunai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 74 ... அராப்புனை அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற் குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு மேன்றால் இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே. ......... சொற்பிரிவு ......... அராப்புனை வேணியன் சேய்அருள்வேண்டும் அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டை அம்தாள் தொழல்வேண்டும் கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்புஅறல் வேண்டும் என்றால் இராப் பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே. ......... பதவுரை ......... பாம்பையணிந்த முடியையுடைய சிவபெருமானுடைய திருமைந்தராகிய திருமுருகப்பெருமானின் திருவருள் வேண்டும். மலர்ந்து நெகிழ்ந்த அன்பினால் குரா மலர் மாலையையும் தண்டையையும் அணிந்துள்ள அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். கொடிய ஐம்புலன்களின் வேடிக்கை ஒழிய வேண்டும். மனமும் துடிப்பு நீங்குதல் வேண்டும். இவற்றை அடையப் பெறாவிடின் இரவு பகல் இல்லாத இடத்தில் [சும்மா] இருத்தல் எளிதாகாதே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.79 pg 4.80 WIKI_urai Song number: 74 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 74 - arAppunai arAppunai vENiyan sEi aruLvENdum avizhndha anbAl kurAppunai thaNdai amthAL thozhalvENdum kodiya aiyvar parAkkaRal vENdum manamum padhaippu aRal vENdum endRAl irAp palatRa idaththE irukkai eLidhallavE. ThirumurugapperumAn is the beloved Son of SivaperumAn, whose matted hair wears the serpent. We are in need of ThirumurugapperumAn's sacred grace. We must worship with blossoming and tender love the Lord's Sacred Feet which are adorned with garlands of kurA-flower and the tandai-anklet. The playful show of the cruel five sense-organs must cease. The mind also must stop quivering. If these requirements are not fulfilled, then it will not be easy to attain the state of quietude [in the arena of space] where there is no night or day. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |