திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 73  போக்கும் வரவும்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 73  pOkkum varavum
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

mp3
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 73 ... போக்கும் வரவும்

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
   வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
      தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
         ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே.

......... சொற்பிரிவு .........

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
   வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
      தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
         ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே.

......... பதவுரை .........

போதலும், வருதலும், இரவும், பகலும், வெளியும், உள்ளிடமும், வாக்கும்,
உருவமும், இறுதியும், ஒன்றும் இல்லாததாகிய ஒரு பரம்பொருள்
அடியேனிடம் மீண்டும் மீண்டும் வந்து சார்ந்து நின்று, தானாகவே
அடியேனுக்கு மன ஒடுக்கத்தைத் தந்தருளி அடியேனைத்
தன்வயப்படுத்திக் கொள்கின்றபோது உண்டாகின்ற இணையற்ற
பேரின்பம் இத்தகையது என்று கூறுவதற்கு இயலாது, ஆறு
திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.78   pg 4.79 
 WIKI_urai Song number: 73 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 73 - pOkkum varavum

pOkkum varavum iravum pagalum puRambum uLLum
   vAkkum vadivum mudivum illAdhadhu ondRu vandhuvandhu
      thAkkum manOlayamthAnE tharum enaith than vasaththE
         Akkum aRumugavA solla oNAdhu indha AnandhamE.

O' Lord of Six Sacred Faces, indeed it is impossible to describe the unique Bliss, which arises when the Supreme Being, that is bereft of either going or coming, night or day, outside or inside, speech or form or end, comes to me again and again, stands beside me, graciously grants me mind-control and absorbs my soul as a part of its own Supreme Self.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 73 - pOkkum varavum


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]