திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 72 சேந்தனைக் கந்தனை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 72 sEndhanaik kandhanai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ......... சொற்பிரிவு ......... சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச் சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே. ......... பதவுரை ......... சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.77 pg 4.78 WIKI_urai Song number: 72 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 72 - sEndhanaik kandhanai sEndhanaik kandhanaich sengkOttu veRppanaich senchudarvEl vEndhanaich senthamizhnUl virithOnai viLangku vaLLi kAndhanaik kandhakkadambanaik kAr mayilvagananaich sAmthuNaippOdhum maRavAdhavarkku oru thAzhvillaiyE. Not a single degradation of any kind will befall those who, until the time of death, never forget SEynthan [of reddish complexion], KandhapperumAn, the Lord of sacred hill at ThiruchchengkOdu, the King of reddish flame-like lance, the Lord who is the gracious Patron for the dissemination of classical Tamil literary works, the Beloved Spouse of prominent VaLLi-ammai, the Lord, Who wears the garland of fragrant kadambu-flowers, and Who has as His vehicle the peacock, which is overjoyed on seeing dark rain-bearing clouds. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |