Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 71  துருத்தி எனும்படி
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 71  thuruththi enumbadi
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 71 ... துருத்தி எனும்படி

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
   தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
      குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
         கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.

......... சொற்பிரிவு .........

துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து
   அருத்தி உடம்பை ஒறுக்கில் என்னாம் சிவலோகம் என்னும்
      குருத்தை அறிந்து முகம் ஆறு உடை குருநாதன் சொன்ன
         கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர் முக்தி கைகண்டதே.

......... பதவுரை .........

[தோலால் செய்யப்பட்ட] துருத்தி என்று சொல்லும்படி கும்பகம் செய்து
பிராண வாயுவைச் சுழற்றி முறியச் செய்து அவ்வாயுவையே உணவாக
உண்பித்து இந்த உடலைத் துன்புறுத்துவதனால் விளையும் பயன் யாது?
'சிவயோகம்' என்னும் முளையைத் தெரிந்து ஆறு திருமுகங்களுடைய
சற்குருநாதராகிய திருமுருகப்பெருமான் உபதேசித்து அருளிய
திருக்கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்வீர்களானால்
முக்தியாலாகிய பேரின்பம் உங்கள் கைக்கு எட்டியதாகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.76   pg 4.77 
 WIKI_urai Song number: 71 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 71 - thuruththi enumbadi

thuruththi enumbadi kumbiththu vAyuvaich sutRi muRiththu
   aruththi udambai oRukkil ennAm sivalOgam ennum
      kuruththai aRindhu mugam ARu udai gurunAdhan sonna
         karuththai manaththil iruththum kaNdeer mukthi kaikaNdathE.

What is the use of suspending the breath and later circulating the same breath as if by bellows [made of leather], and partaking of the air as food, and torturing one's body? You will find the Bliss of Liberation [mukthi] by knowing the tender shoot of SivayOgA, and emplacing the sacred teaching imparted by ThirumurugapperumAn, the Lord-Preceptor of Six-Faces, in your mind permanently.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 71 - thuruththi enumbadi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]