பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (பொ.உ) நெஞ்சமே (படிக்கின்றிலை பழநித் திருநாமம் பழநித் தலத்தி: ;இேஃே ஜெபிக்கின்றாயில்லை), அங்கனம் படிப்பவர்களின் திருவடியை நீ உன் சிரசில் சூடிக்கொள்- கின்றாய் இல்லை; முருகா என்கின்ற திருநாமத்தை ஜெபிக்கின்றாயில்லை; (முசியாமல்) மனம் பின் வாங்காது வருந்தாது தாராள சிந்தையுடனே - (இட்டு) வறியவர்க்கு ஈந்து (மிடிக்கின்றிலை) நீ வறுமை அடைகின்றாயில்லை; பரமானந்தம் மேல் மேல் எழ விம்மி விம்மி - அழுதழுது - ஆனந்தக் கூத்தாடுகின்றாயில்லை; இவ்வளவு குறைபாடு- க்ளிருந்தால் நமக்கு இனித் (தஞ்சம்) புகலிடம் எங்கே இருக்கின்றது . எங்கும் இல்லை என்றபடி (சு - உ) நெஞ்சமே நமக்குப் புகலிடமே ಧ್ಧಿ ஏனெனில் நீ பழநி, என்னும் திருநாமத்தை ஜெபிக்கின்றா யில்லை; ஜெபிப்பவர்களை வணங்குகின்றாயில்லை; முருகா - என்றும் சொல்லுகிலை; தாராளமாக ஈதல் என்பதே உன்னிடம் இல்லை; முருகனை நினைந்து பேரானந்தம் கொள்கின்றா-யில்லை. (கு உ) " உனது பழநிமலையெனு மூரைச்சேவித் தறியேனே" திருப்புகழ் 166 முசியாமல் = சோர்வடையாமல், 3மிடிக்கின்றிலை = வறுமையுறுகின்றாயில்லை. 4"விம்மி விம்மி மெய்ம்மறந்து" திருவாசகம் திருவெம்பாவை பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே என்று சம்பந்தப் பெருமான் அருளியவாறு (239-1) இறைவனது தலப் பெயரைக் கூறிப் பிதற்றலே பெரிய தவமாம்; ஆதலால் - பழநி, பழநி என்று கூறுவாயாக எ:றார்; பழநி என ஜெபிப்போர்களின் தாளை வணங்குதலும் பெறும் பயனைத் தரும். அற்றவருக் கற்ற பர மானந்தப் பெருவெள்ளம் உற்றதிருத் தணிகைவரை உறப்பணிந்தா ரேயன்றி ಕ್ಡಲ್ಗಳ್ಲ್ಲಿ: பற்றறுத்துத் துடைத்தார்கள் பங்கயத்தோன் கையெழுத்தே' - தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி. (2) முருகா-என்னும் நாமத்தின் சிறப்பை பாடல் 70-ற் காண்க முருகா எனஓர் தரம்ஒ தடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே - திருப்புகழ் 851. முருகம்மையார் வரலாற்றிலும் அறி . வரலாறு திருப்புகழ் 573 பக்கம்.312 கீழ்க்குறிப்பு (3) இட்டு வறுமை அடைதலின் சிறப்பு: வெண்டிருநீறு L/бтоботи, மாதவர்க்கு விருந்துசெய் துறும் பெறுமிடி. கொடியனேற் கருளுநாள் உளதோ - சோணசைல மாலை-20.