திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 76 கோடாத வேதனுக்கு Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 76 kOdAdha vEdhanukku |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 76 ... கோடாத வேதனுக்கு கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள் சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. ......... சொற்பிரிவு ......... கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம் என்? குன்று எறிந்த தாள் ஆளனே தென் தணிகைக் குமர நின் தண்டை அம் தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே. ......... பதவுரை ......... கோணலின்றி [ஆக்கல் தொழில்புரியும்] பிரம்ம தேவனுக்கு அடியேன் செய்த குற்றம் யாது? கிரௌஞ்ச மலை பிளவுபடுமாறு வேலாயுதத்தை ஏவிய மிகுதியான முயற்சி உள்ளவரே, தெற்குத் திசையில் உள்ள திருத்தணிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள குமரக் கடவுளே! தேவரீருடைய தண்டையணிந்த அழகிய திருவடிகளை அணிகலனாகச் சூடிக் கொள்ளாத தலையும், தேவரீரின் திருவடிகளைக் கண்டு மகிழாத கண்களும், தேவரீரின் திருவடிகளைக் கை கூப்பி வணங்காத கைகளும் தேவரீரின் திருவடிகளின் புகழைத் துதித்துப் பாடாத நாவும் அடியேனுக்கென்றே [பிரம்மதேவன்] தெரிந்து படைத்தனனே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.82 pg 4.83 WIKI_urai Song number: 76 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 76 - kOdAdha vEdhanukku kOdAdha vEdhanukku yAn seidha kutRam en? kundRu eRindha thAL ALanE then thaNigai kumara nin thaNdai am thAL sUdAdha senniyum nAdAdha kaNNum thozhAdha kaiyum pAdAdha nAvum enakkE therindhu padaiththananE. O' Lord, what wrong have I committed against BrahmA, who usually carries out his creative task without any crooked blemish? O' Lord, You have so dexterously hurled the lance to split the krauncha-hill! O' Lord KumarA, who abides in the sacred centre of ThiruththaNigai [situated] in the southern direction! BrahmA seems to have rather unwittingly created for me a head which does not wear Your tandai-adorned Sacred Feet as an ornament, a pair of eyes, which do not rejoice to look at Your Sacred Feet, a pair of hands which do not worship Your Sacred Feet, and a tongue, which does not sing the praise of Your Sacred Feet! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |