Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 77  சேல் வாங்கு .
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 77  sEl vAngku .
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 77. ... சேல் வாங்கு

சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணி
   மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே
      கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
         நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.

......... சொற்பிரிவு .........

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி
   மால் வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளிமலை எனவே
      கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு
         நூல்வாங்கிடாது அன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.

......... பதவுரை .........

ஓ, நெஞ்சமே, 'சேல்' என்னும் மீனின் உருவை வெல்லுகின்ற
கண்களையுடைய பெண்களின் அழகிய தனங்களைத் தழுவுவதற்கு
உள்ளத்தில் கருதி ஆசை கொண்டு ஏக்கமுற்று மயக்கத்தை அடையாமல்,
வெள்ளி மலைபோல் காலை நீட்டிநிற்கும் ஐராவதம் என்னும்
வெள்ளை யானையை உடைய இந்திரனது மனைவியாகிய
இந்திராணியின் கழுத்தில் அணிந்துள்ள மங்கலநாணை [இந்திரனின்
பகைவர்களாகிய அசுரர்கள்] அந்நாளில் அறுத்துவிடாது அவர்கள் மீது
வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின்
மலர் போன்ற திருவடிகளைக் கண்டு மகிழ்வாயாக!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.83   pg 4.84 
 WIKI_urai Song number: 77 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 77. - sEl vAngku

sEl vAngku kaNNiyar vaNNap bayOdharam sEra eNNi
   mAl vAngki Engki mayangkAmal veLLimalai enavE
      kAlvangki niRkkum kaLitRAn kizhaththi kazhuththil kattu
         nUlvAngkidAdhu andRu vElvAngki pUngkazhal nOkku nenjE.

O, mind! Instead of being enchanted after thinking, desiring and longing to embrace the breasts of beautiful women, whose eyes rival the shape of carp-fish, you'd better rejoice by looking at the flower-like Sacred Feet of ThirumurugapperumAn, who hurled the lance against the demons [enemies of IndrA] and prevented them from causing the severing of the sacred wedding-string, worn by the beloved spouse of IndrA, who has as his vehicle the white elephant [AirAvadham] which stands by stretching its leg like the [snowy] silvery mountain [MahAmEru].
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 77 - sEl vAngku .

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]