![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 78 கூர்கொண்ட வேலனை . Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 78 kUrkoNda vElanai . |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 78. ... கூர்கொண்ட வேலனை கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிைகையும் ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே. ......... சொற்பிரிவு ......... கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்! போர்கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும் ஆர்கொண்டுபோவர் ஐயோ கெடுவீர் நும்அறிவுஇன்மையே. ......... பதவுரை ......... கூர்மையான வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானைப் போற்றாமல் [உங்கள் மனை மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற்றின் மிகுதியைப் பற்றிப்] பெருமை பாராட்டிக் கொண்டாடும் மனிதர்களே! போர்த் தொழிலையே மேற்கொண்டுள்ள இயமனுடைய மந்திரியாகிய காலன் என்பவன் உங்களைக் கொண்டுபோகின்ற அந்த நாளில் நீங்கள் அணிந்து கொள்கின்ற ஆபரணங்களையும், பூமாலையை அணிந்துள்ள பெண்களையும், மாளிகை போன்ற வீட்டையும் பணப் பையையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்? ஐயோ, உங்களின் மூடத்தனத்தாலேயே நீங்கள் வீணே கெட்டுப் போகின்றீர்களே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.85 WIKI_urai Song number: 78 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 78. - kUrkoNda vElanai kUrkoNda vElanaip pOtRAmal EtRam koNdAduveergaL! pOrkoNda kAlan umaik koNdupOm andRu pUNbanavum thArkoNda mAdharum mALigaiyum paNach chAligaiyum ArkoNdupOvar aiyO keduveer num aRivu inmaiyE. O' people, instead of praising ThirumurugapperumAn, Who has the sharp lance, you are celebrating by commending the greatness [of your possessions such as your house, money, ornaments]! Who do you think will bring along the ornaments you are wearing, the women wearing garlands of flowers, your mansion and the bag of money on that day when kAlan - the minister of warring Yaman [death], is taking you? Alas, you are simply ruining yourselves in vain by reason of your own stupidity! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |