திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1013 முகமும் மினுக்கி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1013 mugamumminukki (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல் முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக முலையைய சைத்துத் திருந்த முன்தரி கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலூடே மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின் மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட மலயநி லத்துப் பிறந்த தென்றலு நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ பகலவன் மட்கப் புகுந்து கந்தர ககனமு கட்டைப் பிளந்து மந்தர பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப் பணமணி பட்சத் துரங்க முந்தனி முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக் குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில் குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... முகமு(ம்) மினுக்கிப் பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்துச் செருந்தி சண்பக(ம்) முடிய நிறைத்துத் ததும்பி வந்து அடி முன் பி(ன்)னாக ... முகத்தை அலங்கரித்து நீண்ட கரிய கூந்தலாகிய மேகத்தை அவிழ்த்து, செருந்திப் பூ, சண்பகப் பூ முதலியவைகளை நிரம்ப வைத்து முடித்து களிப்புடன் வந்து, முன்னும் பின்னும் (தெருவில்) அடியிட்டு உலவி, முலையை அசைத்துத் திருந்த முன் தரி கலையை நெகிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல் விளைத்துத் துணிந்து தம் தெரு முன்றில் ஊடே ... மார்பகங்களை அசைத்தும், சரிப் படுத்துவது போல முன்னே தரித்துள்ள ஆடையைத் தளர்த்தியும் அணிந்தும், வஞ்சகம் நிறைந்த புன்னகை புரிந்தும், துணிவுடன் தாம் வசிக்கும் தெருவின் முன் புறத்தில், மகளிர் வரப்பில் சிறந்த பந்தியின் மதனனும் நிற்கக் கொளுந்து வெண் பிறை வடவை எறிக்கக் திரண்டு பண் தனை வண்டு பாட ... பெண்களுடைய எல்லையில் அவர்களுடைய சிறப்புக் கூட்டத்தில் மன்மதனும் நின்று (அவன் பாணங்களை ஏவ), தீப் போல எரியும் வெண்ணிலாவும் வடமுகாக்கினி போல் நெருப்பைக் கக்க, கூட்டமாகக் கூடி ராகங்களை வண்டுகள் பாட, மலய நிலத்துப் பிறந்த தென்றலும் நிலை குலையத் தொட்டு உடம்பு புண் செய மயலை அளிக்கக் குழைந்து சிந்தை மலங்கலாமோ ... பொதிய மலையில் நின்று புறப்படும் தென்றல் காற்றும் என் மன உறுதி கெடும்படி என் மேல் வீசி உடம்பு எல்லாம் புண்ணாகும்படித் தாக்கி காம இச்சையை விளைவிக்க, மனம் உருகி என் சிந்தை கலக்கம் அடையலாமோ? பகலவன் மட்கப் புகுந்து கந்தர(ம்) ககன முகட்டைப் பிளந்து மந்தர பரு வரை ஒக்கச் சுழன்று பின்பு பறந்து போக ... சூரியனும் ஒளி குன்றி ஒடுங்கச் சென்று, மேகங்களைக் கொண்ட ஆகாய உச்சியில் கிழித்துச் சென்று, மந்தர மலை போன்ற பெரிய மலைகள் எல்லாம் ஒருங்கே சுழலும்படி (மயில் செல்லும் வேகத்தில்) அதன்பின் அவை பறந்து வரும்படியும், பணம் அணி பட்சத் துரங்கமும் தனி முடுகி நடத்திக் கிழிந்து விந்து எழு பரவை அரற்றப் ப்ரபஞ்ச(ம்) நின்று பயந்து வாட ... படத்தில் ரத்னங்களை கொண்ட பாம்பை கொத்தித் தின்னும் (மயிலாகிய) குதிரையை ஒப்பற்ற வகையில் வேகமாகச் செலுத்தி, அதனால் கிழிபட்டு நீர்த்துளிகள் எழுகின்ற கடல் ஓலமிடவும், ஐந்து பூதங்களால் ஆன உலகம் எல்லாம் நின்று பயப்பட்டு வாடவும், குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு உற அமர் குத்திப் பொரும் கொடும் படை வென்ற வேளே ... (இந்தக் காட்சியைக் கண்டு) குக மூர்த்தியே என்று முக்கண் சுயம்பு நாதராகிய சிவனும் உன் மீது அன்பு கொள்ள, அசுரர்களுடைய உடல்கள் நெருங்கி வர, போர்க் களத்தில் அவர்களை வேலால் குத்திச் சண்டை செய்து (அவர்களுடைய) கொடிய சேனையை வென்ற செவ்வேளே, குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்துப் பரிந்து கொங்கையில் குண அமுது உய்க்கத் தெளிந்து கொண்டு அருள் தம்பிரானே. ... குண்டலங்களை அணிந்துள்ள பார்வதி, ஒப்பில்லாது விளங்கிய சங்கரி, கெளரி (ஆகிய தேவி) உன்னை மடியில் எடுத்து அன்பு கூர்ந்து தமது திருமுலையில் உள்ள ஞானப் பாலை ஊட்ட, தெளிவுடன் அதை உட்கொண்டு (அனைவருக்கும்) அருள் பாலிக்கும் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.64 pg 3.65 pg 3.66 pg 3.67 WIKI_urai Song number: 1016 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1013 - mugamum minukki (common) mukamumi nukkip perungka rungkuzhal mukilaiya vizhththuc cherunthi saNpaka mudiyani Raiththuth thathumpi vanthadi ...... munpinAka mulaiyaiya saiththuth thiruntha munthari kalaiyaine kizhththup punainthu vanjaka muRuvalvi Laiththuth thuNinthu thantheru ...... munRilUdE makaLirva rappiR chiRantha panthiyin mathananu niRkak koLunthu veNpiRai vadavaiye Rikkath thiraNdu paNdanai ...... vaNdupAda malayani laththup piRantha thenRalu nilaikulai yaththot tudampu puNseya mayalaiya Likkak kuzhainthu sinthaima ...... langalAmO pakalavan matkap pukunthu kanthara kakanamu kattaip piLanthu manthara paruvarai yokkac chuzhanRu pinpupa ...... RanthupOkap paNamaNi patchath thuranga munthani mudukina daththik kizhinthu vinthezhu paravaiya ratRap prapanja ninRupa ...... yanthuvAdak kukanena mukkat chayampu vumpriya mikavasu rarkkuk kurampai vantharu kuRavamar kuththip porungko dumpadai ...... venRavELE kuzhaisayai yoppat Riruntha sangari kavuriye duththup parinthu kongaiyil kuNavamu thuykkath theLinthu koNdaruL ...... thambirAnE. ......... Meaning ......... mukamu(m) minukkip perum karum kuzhal mukilai avizhththuc cherunthi saNpaka(m) mudiya niRaiththuth thathumpi vanthu adi mun pi(n)nAka: After applying make-up on their face, they loosen the long hair that looks like the black cloud; inserting plenty of flowers like the serunthi and the ShaNbaga into the hair, they tie it into a tuft and come out (of their house) happily, pacing (the street) back and forth; mulaiyai asaiththuth thiruntha mun thari kalaiyai nekizhththup punainthu vanjaka muRuval viLaiththuth thuNinthu tham theru munRil UdE: they shake their bosom and deliberately let the upper garment slide, immediately covering their chest as if they are setting it right; their smile is loaded with treachery; they have the nerve to come up flirtingly right up to the front of their street; makaLir varappil chiRantha panthiyin mathananum niRkak koLunthu veN piRai vadavai eRikkak thiraNdu paN thanai vaNdu pAda: Manmathan, God of Love, stands firmly entrenched within the special circle of these women (and keeps wielding his arrows); the fiery and white moon exudes fire like the vadamukAgni (the inferno from the North during the end of the aeon); the beetles swarm together humming many a tune; malaya nilaththup piRantha thenRalum nilai kulaiyath thottu udampu puN seya mayalai aLikkak kuzhainthu sinthai malangalAmO: the southerly breeze coming from mount Pothigai blows on me shattering my mental resolve and inflicting many wounds on my body by arousing obsessive passion; my heart simply melts; should my mind be thus about? pakalavan matkap pukunthu kanthara(m) kakana mukattaip piLanthu manthara paru varai okkac chuzhanRu pinpu paRanthu pOka: With its lustre very much diminished, the sun moved about in a shrunken state; the peak of the sky, covered by clouds, was torn and pierced through; mountains of the stature of Manthara went into orbit simultaneously; those shattered mountain-pieces flew behind (the peacock) paNam aNi patchath thurangamum thani muduki nadaththik kizhinthu vinthu ezhu paravai aratRap prapanja(m) ninRu payanthu vAda: as You drove the peacock, that pecks the gems on the hoods of the serpent, at the matchless speed of a horse, making the seas roar in rapture with water sprinkling all over and causing the awestruck world, made of the five elements, stand still; kukan ena mukkaN sayampuvum priya mika asurarkkuk kurampai vanthu aruku uRa amar kuththip porum kodum padai venRa vELE: (witnessing this scene) the self-existing Lord SivA, with three eyes, became enchanted with You; as the demons advanced towards You in a close encounter, You fought them in the battlefield, piercing their bodies with Your spear and conquered their evil armies, Oh Reddish Lord! kuzhai sayai oppatRu iruntha sangari kavuri eduththup parinthu kongaiyil kuNa amuthu uykkath theLinthu koNdu aruL thambirAnE.: PArvathi, who wears the swinging studs on Her ears, the matchless consort of Lord SankarA and who is also Goddess Gowri, took You on Her lap with love and fed You with the Holy Milk of Knowledge from Her hallowed breasts, and You imbibed it with a clear mind and bestowed grace on all, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |