பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 59 (இங்ங்ணம் மயில் மீது நீ ஆரோகணித்துச் செல்லும் திருவோலக்கக் காட்சியைக் கண்டு) குக மூர்த்தியே! என்று முக்கண் சுயம்பு மூர்த்தியும் (சிவனும்) உன்மீது பிரியம் மிகக் கொள்ள (அசுரர்க்கு)அசுரர்களுடைய (குரம்பை) உடல் வந்து அருகு உற சமீபிக்க (அசுரர்கள் நெருங்கிவர என்ற படி) (அல்லது அசுரர்களுக்கு உள்ள (குரம்பை) எல்லையை (வந்து அருகுற) சேர்ந்து சமீபிக்க அசுரர் இருப்பிடம் சமீபிக்கப் போரில் அவர்களைக் குத்திச் சண்டை செய்த கொடிய (அவர்களுடைய) சேனையை ஜெயித்த செவ்வேனே! - குழையை அணிந்துள்ள (சயை) பார்வதி, ஒப்பில்லாது விளங்கின சங்கரி, கெளரி - ஆகிய தேவி எடுத்து, அன்புகூர்ந்து கொங்கையில் உள்ள ஞான அமுதத்தை - ஞானப்பாலை - (உய்க்க) கொடுக்கத் தெளிவுடன் அதை உட்கொண்டு அருள் பாலிக்கும் தம்பிரானே! (சிந்தை மலங்கலாமோ) 101.7. (இந்தப்) பூமியிலே சுற்றத்தார்களாக உள்ள எல்லாரும் அன்புடனே பக்கத்திலே நின்று பலவகையாக அழுகைக்) கூச்சலிட்டுத் துக்கம் கொண்டு (பாவ) - சூழ்ந்து பரவி நிற்கப் பெருத்த மரக்கட்டைகளில் உண்டாகும் நெருப்பிடையே உடலானது திப்பிடிக்கக் கொட்டுகள் தட்டி) பறைகள் கொட்டித் தட்டி (உடலைச்) சுட்டு, (அலை ஒன்றி) நீரிற் படிந்து குளித்து (அவரவர்) தத்தம் இடத்துக்குச் செல்ல (கடி சமன்) அழித்தல் தொழிலை உடைய யமன் உயிரைத் தனது இருகண்களும் நெருப்பை உமிழ, அகப்படும் படித்தாக்கிக் கட்டி(உடன்று போமுன்) கோபத்துடன் கொண்டு போவற்கு முன்பாக நற்கதியை நமக்குத் தருவான் முருகனும் என்று உன்னை நினைப்பவர்களுடைய (கற்பில் புக்கு) த்யான நெறியில் (நானும்) புகுந்து நல்லறிவு எல்லாம் கூடும்படி உன்னைக் (கற்பது) ஒதிப்பயிலும் கருத்தை (எனக்குத் தந்தருள மாட்டாயோ! வடக்கே இருந்த கிரவுஞ்சமலை தொளைபட்டழியவும், அலை வீசும் கடல் வற்றிப் போகவும், மற்றுத் திசைகளாகிய (அல்லது திக் என்று பயந்த எட்டுத் திசைகளிலும் ஜயம் வாய்ந்த ஜயம்பெற்ற வன்மையுடனே எதிர்த்துச் சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டு அழிய, மட்டித்திட்டு) அவர்களை முறித்தழித்து மேம்பாட்டுடன் நின்ற (கொக்கை) மாமரமாம் சூரனை வேல் கொண்டு) குத்தி எதிர்த்த வீரனே!