திருப்புகழ் 1012 இம கிரி மத்தில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1012 imagirimaththil  (common)
Thiruppugazh - 1012 imagirimaththil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

......... பாடல் .........

இமகிரி மத்திற் புயங்க வெம்பணி
     கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்
          இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே

இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
     குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை
          ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு

சமரமி குத்துப் பரந்த செங்கயல்
     விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
          தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே

தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
     குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ
          சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ

அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ
     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
          யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில்

அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்
     இருபது கொற்றப் புயங்கள் சிந்திட
          அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக்

கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
     மருமக மட்டுக் ககொன்றை யந்தொடை
          கறையற வொப்பற் றதும்பை யம்புலி ...... கங்கைசூடுங்

கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்
     குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்
          கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

இம கிரி மத்தில் புயங்க வெம் பணி ... இமயமலையாகிய (மந்தரம்)
என்னும் மத்தில் வாசுகி என்னும் கொடிய பாம்பை

கயிறு அது சுற்றித் தரங்க(ம்) ஒள் கடல் இமையவர் பற்றிக்
கடைந்த அன்று எழு நஞ்சு போலே
... கயிறாகச் சுற்றி, அலை வீசும்
ஒளி பொருந்திய கடலை தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த
ஆலகால விஷம் போல்,

இரு குழை தத்திப் புரண்டு வந்து ஒரு குமிழையும் எற்றி ...
இரண்டு காதின் குண்டலங்கள் மீது பாய்ந்து புரண்டு வந்தும், ஒரு
குமிழம்பூப் போன்ற மூக்கைத் தாக்கியும்,

கரும்பு எனும் சிலை ரதி பதி வெற்றிச் சரங்கள் அஞ்சையும்
விஞ்சி நீடு
... கரும்பாகிய வில்லை ஏந்திய, ரதியின் கணவனான
மன்மதனின் வெற்றிப் பாணங்கள் ஐந்தின் வேகத்தையும் செயலாற்றும்
திறமையையும் வென்று மேம்படுவதாய்,

சமரம் மிகுத்துப் பரந்த செம் கயல் விழியினில் ... போர்
நிறைந்ததாய், அகன்றுள்ளதான செவ்விய கயல் மீன் போன்ற
கண்களிலும்,

மெத்தத் ததும்பி விஞ்சிய தமனிய(ம்) வெற்புக்கு இசைந்த
வம்பு அணி கொங்கை மீதே
... மிகவும் பூரித்து மேலெழுந்துள்ள,
பொன்மலைக்குச் சமானமானதும், அதற்குத் தகுந்த கச்சு
அணிந்ததுமான மார்பகங்களின் மேலும்,

தனி மனம் வைத்துத் தளர்ந்து வண்டு அமர் குழலியர்
பொய்க்குள் கலங்கல் இன்றியெ
... தனியாக மனத்தை வைத்துச்
சோர்வுற்று, வண்டுகள் விரும்பிச் சேரும் கூந்தலை உடைய மாதர்கள்
தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து,

சத தளம் வைத்துச் சிவந்த நின் கழல் தந்திடாயோ ... நூறு
இதழ்கள் உள்ள தாமரை மலரை வைத்து நான் பூஜிக்க உனது சிவந்த
திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயோ?

அமரர் துதிக்கப் புரந்தரன் தொழ எழுபது வர்க்கக் குரங்கு
கொண்டு
... தேவர்கள் துதி செய்ய, இந்திரன் தொழுது வணங்க, எழுபது
வகையான குரங்குப் படையைக் கொண்டு,

எறி அலையை அடைத்துக் கடந்து சென்று எதிர் முந்து
போரில்
... அலை வீசும் கடலை அணையிட்டு, அதைத் தாண்டி
இலங்கைக்குச் சென்று, எதிரில் முனைந்து வந்த போரில்

அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்றப்
புயங்கள் சிந்திட
... அரக்கர்களின் அரசன் ராவணனுடைய மிக்க
வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழவும்,

அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ஒன்று(ம்) மாளக் கமல
மலர்க்கைச் சரம் துரந்தவர் மருமக
... அழகாய் கொத்தாக இருந்த
பத்துத் தலைகளும் மாண்டு விழவும், தாமரை மலர் போன்ற
திருக்கரத்தால் அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே,

மட்டு உக்க கொன்றை அம் தொடை கறை அற ஒப்பற்ற
தும்பை அம்புலி கங்கை சூடும்
... தேன் சொட்டும் அழகிய
கொன்றை மாலை, மாசு இல்லாத நிகரற்ற தும்பை மாலை, சந்திரன்,
கங்கை இவைகளைச் சடையில் சூடியுள்ள

கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர ... கடவுளாகிய
சிவபெருமானது இடது பாகத்தில் உறையும் பார்வதி தேவி பெற்றெடுத்த
குமரனே,

குறத் தத்தைப் பின் திரிந்து அவள் கடின தனத்தில் கலந்து
இலங்கிய தம்பிரானே.
... குறக் கிளியாகிய வள்ளியின் பின்னே
நாடித்திரிந்து, அவளுடைய வன்மை கொண்ட மார்பகங்களில் அணைந்து
விளங்கிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.62  pg 3.63  pg 3.64  pg 3.65 
 WIKI_urai Song number: 1015 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1012 - ima giri maththil (common)

imakiri maththiR puyanga vempaNi
     kayiRathu sutRith tharanga voNkadal
          imaiyavar patRik kadaintha anRezhu ...... nanjupOlE

irukuzhai thaththip puraNdu vanthoru
     kumizhaiyu metRik karumpe nunjilai
          rathipathi vetRic charanga Lanjaiyum ...... vinjineedu

samarami kuththup parantha sengayal
     vizhiyinil meththath thathumpi vinjiya
          thamaniya veRpuk kisaintha vampaNi ...... kongaimeethE

thanimanam vaiththuth thaLarnthu vaNdamar
     kuzhaliyar poykkut kalanga linRiye
          sathathaLam vaiththuc chivantha ninkazhal ...... thanthidAyO

amararthu thikkap purantha ranthozha
     ezhupathu varkkak kurangu koNdeRi
          yalaiyaiya daiththuk kadanthu senRethir...... munthupOril

asurarmu thaRkot Ravanpe runthiRal
     irupathu kotRap puyangaL sinthida
          azhakiya koththuc chiranga Lonpathu ...... monRumALak

kamalama larkkaic charanthu ranthavar
     marumaka mattuk kakonRai yanthodai
          kaRaiyaRa voppat Rathumpai yampuli ...... kangaicUdung

kadavuLar pakkath thaNangu thantharuL
     kumaraku Raththath thaipinthi rinthavaL
          kadinatha naththiR kalanthi langiya ...... thambirAnE.

......... Meaning .........

ima kiri maththil puyanga vem paNi kayiRu athu sutRith: Placing the HimAlayan mountain (MantharA) as the churning rod and tying around it the fierce serpent VAsuki as the rope,

tharanga(m) oL kadal imaiyavar patRik kadaintha anRu ezhu nanju pOlE: the celestials churned the bright and wavy milky ocean; on that day, the terrible poison AlakAlam (which may be compared to their eyes) emerged;

iru kuzhai thaththip puraNdu vanthu oru kumizhaiyum etRi: those eyes roam around and collide with the studs on both their ears and attack the nose that looks like a blossoming flower;

karumpu enum silai rathi pathi vetRic charangaL anjaiyum vinji needu: they surpass the speed and action of the five triumphant and flowery arrows shot by Manmathan (God of Love), the consort of Rathi, who holds in his arm the bow of sugarcane;

samaram mikuththup parantha sem kayal vizhiyinil: on such wide and combative reddish eyes, looking like kayal fish,

meththath thathumpi vinjiya thamaniya(m) veRpukku isaintha vampu aNi kongai meethE: and on their enlarged bosom, looking like golden mount, with a fitting tight blouse,

thani manam vaiththuth thaLarnthu vaNdu amar kuzhaliyar poykkuL kalangal inRiye: I do not wish to set my lonely heart and get depressed; nor do I wish to be agitated by the false love of those whores with beautiful hair which the beetles swarm around;

satha thaLam vaiththuc chivantha nin kazhal thanthidAyO: for that, will You not kindly grant me Your reddish and hallowed feet so that I could worship them by offering lotus with a hundred petals?

amarar thuthikkap purantharan thozha ezhupathu varkkak kurangu koNdu: As the celestials praised and IndrA worshipped, He commanded the army of monkeys of seventy species;

eRi alaiyai adaiththuk kadanthu senRu ethir munthu pOril: He built a bridge across the wavy sea, crossed over into LankA and in the war that confronted Him,

asurar muthal kotRavan perum thiRal irupathu kotRap puyangaL sinthida: He knocked down the twenty mighty shoulders of RAvaNan, the king of the demons,

azhakiya koththuc chirangaL onpathum onRu(m) mALak kamala malarkkaic charam thuranthavar marumaka: and severed the neat bunch of his ten heads by wielding arrows from His lotus hand; You are the nephew of that RAmA!

mattu ukka konRai am thodai kaRai aRa oppatRa thumpai ampuli kangai cUdum: He wears on His matted hair the kondRai (Indian laburnum) garland with oozing honey, unblemished and matchless garland of thumbai (leucas), the crescent moon and River Gangai;

kadavuLar pakkaththu aNangu thantharuL kumara: He is Lord SivA on whose left side DEvi PArvathi is concorporate; You are the son delivered by Her!

kuRath thaththaip pin thirinthu avaL kadina thanaththil kalanthu ilangiya thambirAnE.: You roamed about in pursuit of VaLLi, the beautiful parrot-like damsel of the KuRavAs, and embraced her robust bosom, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1012 ima giri maththil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]